ஸ்பெஷல்
Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

உண்மையிலேயே 'விஸ்வரூபம்’ பிரச்னையில் எனக்குப் புரியாதது, ''ப.சிதம்பரம் பிரதமர் ஆக வேண்டும்'' என்று கமல் மேடையில் பேசியதே பிரச்னைகளுக்குக் காரணம் என்பதுதான். அதைப் ப.சிதம்பரமே சீரியஸா எடுத்திருப்பார்னு நான் நம்பலை. ஜெயலலிதா அவ்வளவு சீரியஸா எடுத்துட்டாங்களா என்ன?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் மெடிக்கல் காலேஜில் சேரும் கமல் ஹாஸ்டலில் சேர்வதற்காக பிரபு மற்றும் கருணாஸுடன் வருவார். ''ரூம் நம்பர் என்ன?'' என்று கேட்பார் பிரபு. ''4'' என்பார் கமல். ''அது எப்படி? உன் லக்கி நம்பர் ஏழு'' என்பார் பிரபு. ''அது எப்படிடா? நான் பிறந்த தேதி 3'' என்பார் கமல். (உண்மையில் கமல் பிறந்த தேதி நவம்பர் 7). ''10-ல இருந்து 3 கழிச்சா எவ்வளவு?'' என்பார் பிரபு. ''ஆங்...7'' - இது கமல். ''ம்... அதானே உன்னோட லக்கி நம்பர்'' என்பார் பிரபு. அவரது ரூமுக்கு எதிரில் இருக்கும் ரூமின் நம்பர் 12. உடனே கருணாஸ், ''இந்தா 12. 12-ல இருந்து 7-ஐக் கழிச்சா எவ்வளவு?'' என்பார். ''5'' என்று கமல் சொல்ல, ''அதோட ரெண்டைக் கூட்டினா 7தானே'' என்பார் கருணாஸ். ''இன்னாடா இவன்? 27-ல இருந்து 20-ஐக் கழிச்சா 20-ன்னுவான் போல இருக்கு இவன்'' என்பார் கமல். கமல் தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாக அடிக்கடி சொல்லிக்கொள்வதால், அவருக்கு இந்த நியுமராலஜி எதிலும் நம்பிக்கை இருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், கமல் ரசிகனாக இருக்கும் என் நண்பன் ஒருவன் சொன்னான், ''உண்மையிலேயே கமலோட லக்கி நம்பர் 7-தான். படம் ரிலீஸ் ஆக இருந்த தேதி ஜனவரி 25. கூட்டுத்தொகை 7. இப்போ பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு படம் ரிலீஸ் ஆகப்போற தேதியும் 7-தான்'' என்றவன் அதோடு நிறுத்தி இருந்தாலும் பரவா யில்லை, அடுத்துச் சொன் னான். '' 'விஸ்வரூபம்’ படத்துல கமல் கட் பண்ணப் போற சீனும் 7''. சத்தமாச் சொல்லாதீங்கப்பா... படத் துக்கு 7 வாரம் தடை விதிச் சுடப் போறாங்க!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழ்த்தும் மறு நாள் எல்லா பேப்ப ரிலும் தவறாமல் இந்த வாசகம் இடம் பெற்றி ருக்கும். ''சமூக விரோதி களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ் கிறது...'' - கவர்னர் உரையில் ஜெயலலிதா வுக்குப் பாராட்டு. என்னமோ கவர்னர் சொந்தமா ரூம் போட்டு உரையை எழுதிட்டு வந்து வாசிக்கிற மாதிரில்ல...! இவங்க என்னா எழுதிக் கொடுக்கிறாங்களோ, அதை அப்படியே கவர்னர் வாசிக்கிறதுக்குப் பேரு தான் கவர்னர் உரை. அவருக்கே அஞ்சு நிமிஷத் துக்கு முன்னாலதான் பேப்பர் தருவாங்கன்னு நினைக்கிறேன். கவர்னர் உரையாம்ல, பாராட்டாம்ல! யாருகிட்டே!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

கர்நாடக பி.ஜே.பி-யில் இருந்து தினமும் வரிசையா ஒவ்வொருத்தரா எடியூரப்பாவின் 'கர்நாடக ஜனதா’ கட்சிக்கு வந்துட்டு இருக் காங்க. இதில் வினோதமான விஷயம் என்னன்னா, இந்த கர்நாடக ஜனதா கட்சியை நிறுவியவர் பிரசன்னகுமார்னு ஒருத்தர். அவர் இப்போ தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். என்னன்னா, அவர் எடியூரப்பாவையே கட்சியை விட்டு நீக்கிட்டாராம். எனக்கு ரெண்டு டவுட்டு. ஏம்பா எடியூரப்பா, கட்சி ஆரம்பிக்கிறதுகூட சொந்தமா ஆரம்பிக்க முடியாதா? அதிலேயும் செகண்ட் ஹேண்டா? அப்புறம் சரத்குமார் நடிச்ச படத்தை கர்நாடகாவில ரீ-மேக் பண்ணினாக்கூடப் பரவாயில்லை. 'பெருந்தலைவர் மக்கள் கட்சி’ங்கிற சரத் குமாரோட 'அரசியல் வாழ்க்கை’யையுமா கர்நாடகாவில் ரீ-மேக் பண்ணனும்?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

சமீப காலமாகப் பார்க்கிறேன், விஜயகாந்தும் பிரேமலதாவும் வாரத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய் ஏதாவது காணிக்கை செலுத்துறாங்க. இதுதான் விஜயகாந்த் சொன்ன 'தெய்வத்தோட கூட்டணி’யா?