ஸ்பெஷல்
Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ப்பல் கட்சித் தலைவரை, படப் பிரச்னையில் வேர்ல்டு ஹீரோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடச் சொன்னவர், அந்த வேட்டித் தமிழர் அரசியல்வாதியேதானாம். கூட்டணி முடிவாகிவிட்டதன் எதிரொலியாம் இது!

ஆஃப் த ரெக்கார்டு!

லீடர் படத்தில் நடிக்கும் பறவை நடிகை மீது இயக்கு நர் காட்டும் கரிசனம் ரொம்ப அதிகமாம். லஞ்ச் பிரேக்கில் இருவரும் கேரவனுக்குள் சென்று  பறிமாறிக்கொள்கிறார்களாம். பஞ்ச் நடிகர் இதைக் கண்டு ஒரு நமட்டுப் புன்னகை மட்டும் உதிர்க்கிறாராம்!

ஆஃப் த ரெக்கார்டு!
ஆஃப் த ரெக்கார்டு!

தான் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் ஆவதால், மற்றவர்களின் படங்களில் நடிக்க பெரிய எட்டு ரூபாயைச் சம்பளமாகக் கேட்கிறாராம் தாடி இயக்குர்.

ஆஃப் த ரெக்கார்டு!

கேரளத்தில் இருந்து வந்த மங்களகரமான நடிகை 'கடுகளவும் கவர்ச்சி மாட்டேன்’ என்று அடம்பிடிப்பதாகப் புலம்புகிறார்கள் இயக்குநர்கள்.

ஆஃப் த ரெக்கார்டு!

பவருக்கும் சத்தான காமெடி நடிகருக்கும் லடாய் என்பதுதான் லேட்டஸ்ட் கோலிவுட் ட்விஸ்ட். 'தேவை இல்லாம எதுக்கு அவரை வளர்த்துவிடுறே?’ என்று நண்பர்கள் கேட்டதால், யோசித்த காமெடி, மூன்று நாயகர்கள் நடிக்கும் 'ஆமா ஆமா’ படத்தில் பவரை பவர் கட் செய்ய கம்பெனியிடம் சொல்லியுள்ளாராம்!

ஆஃப் த ரெக்கார்டு!

விஸ்வரூபம் பிரச்னையில் நடிகர் சங்கத்தை விமர்சித்து சிக்கலில் சிக்கியிருக்கும் விஷால் மாதிரி, இணையத்தில் கமலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த இளம் நடிகர்கள் குரூப் ஒன்று உதறலில் இருக்கிறது. இடையில் அரசுக்கு எதிராக ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, சரிவராததால் கைவிட்டவர்கள், 'சங்கம் என்ன ஆக்ஷன் எடுக்குமோ’ என்று புலம்புகிறார்கள்!