ஸ்பெஷல்
Published:Updated:

''400 பேர் கட்சி. நாளைய பிரதமர் நான்தான்!''

''400 பேர் கட்சி. நாளைய பிரதமர் நான்தான்!''

'' 'நான் பி.எம். ஆனதும் பிஸி ஆகிடுவேன். அப்போ என்னைப் பார்க்கிறதே உங்களுக்குப் பெரிய பாடாகிடும். இப்பவே வந்து இன்டர்வியூ பண்ணிடுங்களேன்'' - வெகு சீரியஸாக அழைப்பு விடுத் தார் மோகன்ராஜ். யார் இந்த கேரக்டர்னு கேக்கறீங் களா? ஜெபமணி ஜனதா கட்சி என்ற பெயரில் தனிக் கட்சியை நடத்தி வருபவ ர்தான் மோகன்ராஜ்.

''400 பேர் கட்சி. நாளைய பிரதமர் நான்தான்!''

''எங்க அப்பா நெல்லை ஜெபமணி, தீவிரமான காமர£ஜர் பக்தர். காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் பின்னாடி ஜனதா கட்சி சார்பில் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். அப்பா கால மானதும் அவரு பேர்லயே 'ஜெபமணி ஜனதா கட்சி’னு கட்சி ஆரம்பிச்சுட்டேன். தமிழ்நாடு முழுசுமா சேர்த்து என் கட்சியில் 400 உறுப் பினர்கள் இருக்காங்க (அம்மாடி!). கட்சியில் இருக்கும் எல்லோருக்குமே ஏதாவது பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கு றது என்னோட வழக்கம். இதுக்காகவே 400 பேரையுமே பொதுக்குழு, செயற்குழுவில மெம்பர் ஆக்கிட்டேன். தொடக்கத் தில் 'தென் சென்னை எம்.பி-யாகிக் கறுப்பு பணத்தை ஒழிப் பேன்’னுதான் போஸ்டர் போட்டேன். அதைப் பார்த்துட்டு சில நண்பர்கள் 'நீ பிரதமர் ஆனா தான், இது சாத்தியம்’னு சொன்னாங்க. ஆயிட்டா போச்சுன்னு அடுத்த நாளே 'பிரதமர் ஆனால்...’னு போஸ்டரை மாத்தி ஒட்டிட் டேன்.

2009-ம் ஆண்டு பார்லிமென்ட் எலெக்ஷன்ல தென் சென்னைத் தொகுதியில் நின்னேன்.  வேட்பு மனு தாக்கல் பண்ணப் போயிருந்தப்ப, எனக்குப் பயங்கரமான தாகம். உடனே, அங் கிருந்த அதிகாரியிடம் குடிக்கத் தண்ணி வேணும்னு கேட்டேன். அவரு 'அதெல்லாம் கொடுக்க முடியாது’னு காட்டமாப் பேசுனாரு. உடனே வேட்பு மனுவை நிரப்பும்போது சொத்து விபரத்தில் எனக்கு 1,977 ரூபாய் கோடி சொத்து இருக்குறதா எழுதினேன். இதைப் பார்த்த அந்த அதிகாரி வியர்த்துப்போய் தண்ணீர் எடுத்துக் குடிச் சார். உடனே என் தோளில் கிடந்த துண்டை ஒரு உதறு உதறி 'என்ன அதிகாரி... இப்போ உங்களுக்கு தாகம் வந்துடுச்சா?’னு கேட்டேன். தேர்தல் கமிஷன் அறிவித்த லிஸ்ட்டில் இந்திய அளவில் பணக்கார வேட்பாளர்னு என் பேரு பேப்பர்ல வந்துச்சு. ஆனா, உண்மையில எனக்கு சொத்தே கிடையாது. பேட்டி எடுக்க வந்த மீடியாக்களிடம் சோனியா 'சொந்தமா காரு இல்லை’னும், தயாநிதி 'சொந்த வீடு இல்லை’னும் வேட்பு மனுவில் சொல்லி இருக்காங்க. இதெல்லாம் உண்மையானு விசாரிச்சுட்டு, எங்கிட்ட வாங்கன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன். நாலு மாசத்துக்கு முன்னாடிகூட வருமான வரித் துறையினர் வந்து கட்சி யின் வரவு, செலவுத் தகவல்களைக் கேட்டாங்க. 'என் கட்சிக்கு ஏது வருமானம்... காட்டுறதுக்கு?’னு நாக்கைப் பிடுங்குற மாதிரிக் கேட் டேன். பொய்யான தகவல் கொடுத்து என்னைக் கைது செஞ்சா, சட்டம், ஒழுங்கு பிரச்னை வரும்னு என் மேல நட வடிக்கை எடுக்க மத்திய அரசே பயப்படுது தம்பி' என்று பேசிக்கொண்டே போனவரிடம், ''எல்லாம் ஓ.கே. வர்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏதாவது வி.ஜ.பி-யை எதிர்த்து நிக்கும் ஜடியா இருக்கா?'' என்று கேட்டேன்.

''தம்பி நான்தானே வி.ஜ.பி. என்னை எதிர்த்து யாரு நிக்கணும்னு ஆசைப்படுறீங்கனு கேளுங்க தம்பி. கேள்வியைத் தப்பாக் கேட்டுட்டீங்களே?'' என்றார் போலீஸ் மிடுக் குடன்.

தேவைதான் எனக்கு!

- என்.சுவாமிநாதன்,

படங்கள்: ஆ.முத்துக்குமார்