ஸ்பெஷல்
Published:Updated:

ப்பா...!

ப்பா...!

ப்பா...!

ந்தக் காலத்துப் பொண்ணுங்க எப்படி மேக்-அப் போடுவாங்க? - இதுதான் இந்தக் கட்டுரையோட மேட்டர். மேட்டரைப் படிச்சு முடிக்கிறதுக்குள்ள நீங்களே ஹீட்டர் ஆயிடுவீங்க, பாருங்க!

என்னோட கேர்ள் ஃப்ரெண்ட், வேணாம், தப்பான அர்த்தம் வருது,  தோழின்னே வெச்சுக்கலாம், அவங்க இன்னொரு தோழி வீட்டுக்குப் போறதுக்காகக் கிளம்பினப்போ, மேக்கப் போட்டதைப் பக்கத்துல இருந்து பார்த்த அனுபவம்தான் இது...

மூன்று மூறை சோப் போட்டுக் கழுவிய பின் ஃபேஷ்வாஷ் கீரிமை அப்பி முகத்தைத் தேய் தேய் தேய்ச்சுக் கழுவினாங்க. அப்புறமா மூணு டிஸ்யூ பேப்பர் எடுத்து முகத்தை நன்றாக துடைத்துக்கொண்ட பின் மறுபடியும் ஒரு துணியில் முகத்தை துடைச்சுட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்குப் போனாங்க. அங்க போனதும் நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்!

பட்டாம் பூச்சியில் ஆரம்பித்து டிசைன் டிசைனாக ஹேர்பின்கள், கலர் கலராக வளையல்கள், மூக்குத்தி மாதிரி கண்ணுக்கே தெரியாமல் ஒரே ஒரு கல் வைத்த தோடுகள் முதல் ஒரு சிங்கமே

ப்பா...!

தாண்டும் அளவுக்கு வளையம் கொண்ட கம்மல்கள், இது போக பொட்டு பாக்கெட் 10 டஜனுக்கும் மேல், பவுடர் கலர் கலராக இரண்டு டப்பாக்கள் நிறைய, கண் மை, லிப்ஸ்டிக், மஸ்கரா, லிப்ஸ்டிக் லைனர் என ஒவ்வொன்றிலும் 5 டைப் என ஒரு மினி மேக்-அப் கடையையே போடும் அளவுக்குத் தட்டுமுட்டு சாமான்கள் இருந்தன. இதை நான் ஒவ்வொன்றாக மிரட்சியுடன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, "கொஞ்ச ஐட்டம் தீர்ந்து போய்டுச்சு''னு சொல்லி அடுத்த அதிர்ச்சி தந்தவர், மேக்-அப் போட ஆரம்பித்தார். மக்களே... இப்போது மணி சரியாக மாலை 4.32.

'ஒரு காட்டன் பஞ்சை வைத்து முகத்தில் ஒத்தடம் கொடுக்கணும். அப்பதான் முகம் வெள்ளையாகும். ரோட்டுல பசங்க எதேச்சையாப் பார்த்தாக்கூட மறுபடியும் ஒரு முறை பார்க்கவைக்கும். (என்னா ஒரு வில்லத்தனம்) ஆனா, நாங்க பசங்க பார்க்கிறதுக்காக இதெல்லாம் பண்றதில்லை. (ஓஓஓ...) அடுத்து ஃபவுண்டேஷன் கிரீம் அல்லது பவுடரை முகம் முழுவதும் காதுகள் உட்பட சமமாக பூசிக்கணும். அப்புறமாதான் மேக்-அப் போட ஆரம்பிக்கணும். (அடிப்பாவி, இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?) அடுத்து ஐப்ரோ பென்சிலைப் பயன்படுத்தி, அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி திக்காகவோ மெலிசாகவோ பென்சிலை வைத்து வரையணும். எனக்கு மெல்லிசாப் போட்டாதானே நல்லா இருக்கும்?'' என்று என்னைப் பார்த்துக் கேட்க, நான் ஆமான்னும் இல்லாம இல்லைன்னும் இல்லாம ஒரு மார்க்கமாத் தலையாட்டி வெச்சேன்.

''அடுத்து ஐ ஷேடோ. ரெண்டு கலர்ல இருக்குது. இதை நம்ப டிரெஸ் கலருக்கு மேட்ச் பண்ணிக்கூட போட்டுக்கலாம். அடுத்து  ஐ லைனர் போடணும். கண்ணுல ரெண்டு இமைகள் இருக்கு (இது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு). மேல இருக்கும் இமை மேல ஒரு கோடு மாதிரி போடுறதுதாங்க ஐ லைனர். அடுத்து கீழ் உள்ள இமைக்கு காஜல், அதாவது கண் மை அளவா போட்டால்  காஜல் அகர்வால் மாதிரி இருப்பாங்க. இல்லைன்னா கருங்குரங்கு மாதிரி ஆகிடுவாங்க" (இப்ப மட்டும் என்னவாம்) எனச் சொல்லி அவராகவே சிரித்தவர் காஜலை அப்பிவிட்டுத் தொடர்ந்தார். ''நெக்ஸ்ட் மஸ்கரா. இமை முடியில பூசிக்கிறது. இன்னும் கண்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கும்.  இப்பதான் கண்ணுக்கு மேக்கப் போடுறதே முடியுது. (ஐயயோ!) எப்பவுமே பெண்கள் கண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அதுதான் ஆண்களை எங்க பக்கம் திரும்பிப் பார்க்கவைக்கும் (நீ திரும்பவும் அமெரிக்கா போயிடு சிவாஜி!). அடுத்து லிப் லைனர், அதாவது உதடுக்கு பார்டர் வரைவது (என்னது, மேஜர் சுந்தர்ராஜன் செத்துட்டாரா?). பெரிய உதடாக இருந்தால், சின்ன பார்டரா வரையணும். சின்னதாக இருந்தால் பெரியதா வரையணும்"னு சொல்லி அந்த 5 சென்டிமீட்டர் உதடுக்கு 10 நிமிடம் பார்டர் வரைஞ்சுட்டு, ''ஸாரிப்பா. பார்டர் பெரிசாப் போய்டுச்சு. எனக்கு சின்ன பார்டர்தான் அழகா இருக்கும்''னு துணியால் அழித்துவிட்டு மறுபடியும் வரையத் தொடங்கினார். (இந்தியா - பாகிஸ்தான் பார்டர் பிரச்னையைவிடப் பெரிசா இருக்கே!)

"இப்ப லிப்ஸ்டிக், லிப் குளோஸ் என அவர்களுக்குத் தகுந்த மாதிரி உதடு மேல போட்டுக்கலாம். எனக்கு லிப்ஸ்டிக்தான் சரிவரும்" எனப் பெட்டி நிறைய இருந்த லிப்ஸ்டிக்கில் ஒன்றைத் தேர்வு செய்து போட்டுக்கொண்டார். "இப்போ கன்னத்துல ப்ளஷ் போடணும். பஞ்சு மிட்டாய் கலர்ல இருக்குமே அதுதான். இது எதுக்குப் போடுறதுன்னா பொண்ணுங்க வெட்கப்பட்டா கன்னம் சிவக் கும். ஆனா, இப்போ எங்களுக்கு எல்லாம் சிவக்கிறதே இல்ல. இந்த பிளஷை வெச்சுதான் மேனேஜ் பண்ணிக்கிறோம்" எனக் கன்னத்தில் அப்பிக்கொண்டவர். "முடியில் கிளிப் போட்டால் போதும்" என ஒரு பட்டாம்பூச்சி கிளிப்பை எடுத்து இரண்டு விநாடியில் முடியை வாராமலே மாட்டிக் கொண்டார். 'எந்த டிரெஸ் போடலாம்?’ என ஐந்து முறை அவர்  கப்போர்டில் துழாவு துழாவு எனத் துழாவியவர் கடைசியில் ஒரு சுடிதாரை செலக்ட் செய்து, அதற்குத் தகுந்த வளையல், கம்மல், செயினை அதே போல துழாவித் துழாவி எடுத்துப் போட்டார். என்னைப் பார்த்து 'எப்படி இருக்கு’ என இடுப்பில் கை வைத்து போஸ் கொடுத்துக் கேட்க, (ப்ப்பா... யாருடா இந்தப் பொண்ணு பேய் மாதிரி!) 'ம்ம்ம்... டக்கரா இருக்குப்பா!’ என நான் மனதைத் திடப்படுத்திக்கொண்டு பொய் சொல்லும்போது, மணி சரியாக 5.45.

"ஓ.கே. நான் ஃப்ரெண்ட் வீட்டுக்குக் கிளம்புறேன்" என ஹீரோயின் போல தலை ஆட்டியவரிடம் துள்ளி எழுந்து, "உன் நெத்தியில இன்னும் பொட்டு வைக்கவே இல்ல" என ஏதோ கண்டுபிடிப்பு போல உற்சாகமாகச் சொல்ல, "சீச்சீ... இந்த டிரெஸ்ஸுக்குப் பொட்டு வெச்சா நல்லாவே இருக்காதுப்பா. இதுகூட உனக்குத் தெரியலை" என்று பெரிய சைஸ் பல்ப் கொடுத்தார்.

என்ன பாஸ், உங்களுக்கும் சேம் ப்ளட் வந்திருக்கா? அப்புறம் என்ன, கையக் கொடுங்க!

-நா.சிபிச்சக்கரவர்த்தி