Published:Updated:

ஆகணும்... அமைச்சர் ஆகணும்!

ஆகணும்... அமைச்சர் ஆகணும்!

''மத்திய பாதுகாப்புத் துறை யின் இணை அமைச்சர் போஸ்டிங் ஒண்ணு காலியாக் கிடக்கு. அதை எனக்குன்னே வெச்சிருப்பாங்க போலிருக்கு. நான் அரசுப் பணியில் இருந்து இப்போ ரிடையர் ஆகிட்டேன். அதனால், சீக்கிரமே என்னை அமைச்சர் ஆக்குங்கனு ராகுலுக்குக் கடிதம் எழுதி

ஆகணும்... அமைச்சர் ஆகணும்!

இருக்கேன். நீங்க விரும்பினால் உங்களுக்கு மட்டும் பேட்டி குடுக்க நான் ரெடி'' - இப்படி ஒரு அழைப்பு போன் மூலம் வந்தால் எப்படி இருக்கும்? 'கண்ணா பேட்டி எடுக்க ஆசையா?’னு கிளம்பிட்டேன்.  பாளையங்கோட்டை சாந்தி நகரில் இருக்கும் தயாளனின் வீட்டைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சந்திப்பதற்கு முன் அவரைப் பற்றிய ஃப்ளாஷ்பேக். பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பகுப்பாய்வுக் கூடத்தில் கெமிஸ்ட் ஆக வேலை செய்து ஒரு வாரத்துக்கு முன்புதான் ரிட்டயர்ட் ஆகி இருக்கிறார் தயாளன்.

அவரது வீட்டுக்கு வருவது தெரிந்ததும் ராணுவ உடையில் மிடுக்காகக் காத்திருந்தார். நம்மைச் சந்தித்ததும்,  ஸ்ட்ரெயிட்டாக பேட்டியைத் தொடங்கிவிட்டார்.

''தம்பி எனக்கு சின்ன வயசில் இருந்தே அரசியலில் ஆர்வம் அதிகம். அரசியல் மூலம்தான் நாட்டுக்கு சேவை செய்ய முடியும். நான் கடந்த 2001-ல் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற உந்துதலில் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்துவிட்டு காங்கிரஸில் சீட் கேட்டேன். ஆனா, யாருமே சீட் குடுக்க மாட்டேனுட்டாங்க. உடனே அதிகாரிகள்கிட்ட மன்னிப்புக் கடிதம் எழுதிக் குடுத்து மறுபடியும் வேலையில் சேர்ந்தேன். ஆனா இப்போ நான் ஃபிரீ பேர்டு. உடனே எந்தத் துறையில் அமைச்சர் போஸ்ட் காலியா இருக்குன்னு விசாரிச்சேன்.  அப்பத்தான் நான் ரொம்பவும் விரும்பும் பாதுகாப்புத் துறையில் இணை அமைச்சர் போஸ்ட் காலியா இருக்கிறது தெரிஞ்சுது.

அந்தத் துறையின் இணை அமைச்சரா ஜிதேந்திர சிங் என்பவர் இருக்கார். இன்னொரு இணை அமைச்சர் போடணும். அதை காங்கிரஸ் எம்.பியான கட்டாரியா என்பவருக்கு பிரதமர் ஒதுக்கினார். ஆனா ஏனோ கட்டாரியாவுக்கு இந்தத் துறையில் இஷ்டம் இல்லை. அதனால் எனக்காகவே அந்த இடம் காலியாக் கிடக்கு. உடனே என்னை இணை அமைச்சரா ஆக்கணும்'' என்றார் சீரியஸாக.

இதை கேட்டதும் எனக்கு லேசாக  கிர் அடிக்கத் தொடங்கியது.  தண்ணீர் குடித்து சமாளித்துக்கொண்டு , 'நீங்க இப்போ எம்.பி இல்லியே. பிறகு எப்படி மினிஸ்டர் ஆக முடியும்?’ என்றேன் சீரியசாக. ''தம்பி, அமைச்சர் ஆன பிறகு, ஆறு மாசத்துக்குள்ள எம்.பி ஆனா போதும். ராகுல் நினைச்சா என்னை ராஜ்யசபா எம்.பி ஆக்கலாமே. மன்மோகன் சிங் என்ன எம்.பி ஆன பின்னாடியா பிரதமர் ஆனாரு? அதனால தட்ஸ் நாட் எ பிராப்ளம்!

எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கணும் என்பதுதான் இப்போது எனக்கு இருக்கும் ஒரே லட்சியம். அதுக்காக நான் ஞானதேசிகனை சந்திச்சுப் பேசி இருக்கேன். இளந்தலைவர் ராகுலையும் அன்னை சோனியாவையும் சந்திக்க நேரம் கேட்டு இருக்கேன். அவங்க நிச்சயமா எனக்கு அப்பாயின்மென்ட் குடுப்பாங்க.  என்னோட சர்வீஸைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு மினிஸ்டராவும் ஆக்குவாங்க. இப்ப இருக்கிற மினிஸ்டர்ஸ்ல நான் யாருக்கும் குறைஞ்சவன் இல்லையே...''  என்று டாப் கியரில் எகிறியவரை இடைமறித்து,

''ஏற்கெனவே காங்கிரஸில் ஏகப் பட்ட கோஷ்டிகள் இருக்கே..' என்ற தும் ''நான் அமைச்சர் ஆகிட்டேன்னா, ஓவர் நைட்டில் அதை சரிபண்ணிடுவேன். எல்லாமே நாம பேசுறதுலதான் இருக்கு! ஒரு வாரத்தில அரை மணி நேரம் கட்சியில் உள்ள தொண்டர்கள் என்னோட பேச்சைக் கேட்டாலே, கட்சி வளர்ந்துடும்!'' என்றார் மிலிட்டரி டிரெஸ்ஸைச் சரிசெய்தபடி.

காங்கிரஸ்னாலே காமெடிதான். ஆனா காங்கிரஸ்ல சேர்றதுக்கு முன்னாலயே இவ்வளவு காமெடி பண்றாரே மனுஷன்!

- ஆண்டனிராஜ்

படம்: எல்.ராஜேந்திரன்