Published:Updated:

ரோபோடா!

ரோபோடா!

ரோபோட் தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள். விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள 'கென்ஷிரோ’ என்ற ரோபோட்தான் அது! ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ரோபோட்டுகளுக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. கென்ஷிரோவின் சிறப்பம்சமே, பார்ப்பதற்கு மனித உருவில் இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதுதான். முந்தைய ரோபோட்டுகள் நடந்துகொள்வது இயந்திரத்தனமாக இருக்கும். ஆனால், கென்ஷிரோவின் செயல்பாட்டு முறை மனிதனின் அசைவுகளைப் போலவே இருக்கிறது.

ரோபோடா!

கென்ஷிரோவின் முன்னோர்களில் பெரும் பிரச்னையாக இருந்தது எடைதான். முந்தைய ரோபோட்டுகளின் இடுப்புக்கு மேல் உள்ள பகுதி மட்டுமே குறைந்தது 45 கிலோவுக்குக் குறையாமல் இருந்தது. இவ்வளவு எடையைத் தூக்கிக்கொண்டு ரோபோட்டுகளால் சரியாகச் செயல்பட முடியவில்லை. எனவே, புதிய முறையைக் கையாண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, மனித உடலில் ஓர் உறுப்பு சராசரியாக எவ்வளவு எடையைக்கொண்டிருக்குமோ அதே அளவு எடையுடன் கூடிய ரோபோட்டை, அதாங்க... கென்ஷிரோவைப் படைத்திருக்கிறார்கள். 12 வயது ஜப்பானிய சிறுவனின் உடம்பு என்ன வளர்ச்சிகொண்டிருக்குமோ அதை மனதில்கொண்டு, கென்ஷிரோவுக்கு அலுமினியத்தாலான பாகங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கென்ஷிரோவின் உடம்பில் இப்போது 160 தசைகள் உள்ளன. கென்ஷிரோ எழுந்து நின்றால் அவனுடைய உயரம் 158 செ.மீ., எடை 50 கிலோ. கை கால்களில் உடைகளை மாட்டிவிட்டு, நீட்டி, மடக்கச் செய்தால் அசல் மனிதனைப் போலவே இருக்கிறது. ரோபோட் தொழில்நுட்பத்தில் கென்ஷிரோ, இறுதி அத்தியாயம் கிடையாதுதான். ஆனால், மனித நடவடிக்கைக்கு 100% பொருந்திப் போகக்கூடிய ரோபோட்டுகளைக் கண்டுபிடிப்பதில் கென்ஷிரோ ஒரு மைல்கல். முதல்ல கென்ஷிரோவுக்கு 'எந்திரன்’ படத்தைப் போட்டுக் காட்டுங்க. நம்ம சூப்பர் ஸ்டார் சிட்டியைப் பார்த்து, குஜாலா விசில் அடிப்பான் கென்ஷிரோ!

- குணசீலன்