Published:Updated:

சாப்பிடும்போது இந்த மேட்டரைப் படிக்காதீங்க!

சாப்பிடும்போது இந்த மேட்டரைப் படிக்காதீங்க!

''இப்ப நாங்க நின்னுக்கிட்டு இருக்குற இந்த இடம் தென் அமெரிக்காவுல இருக்குற உலகின் அடர்ந்த காடான அமேஸான் மழைக் காட்டோட நடுப் பகுதி. அனகோண்டா பாம்புகளும் ராட்சத முதலைகளும் கொடிய மிருகங்களும் வாழுகிற இந்தக் காட்டுக்குள்ள எப்படி நாங்க உயிர் தப்பிப் பிழைக்கப்போறோம்கிறதை உங்களுக்குச் செயல் விளக்கம் கொடுக்கப் போறோம். இங்கே உயிர் வாழ்றது ரொம்ப சவாலான விஷயம் மட்டும் இல்லை. சாகசமும்கூட!''

சாப்பிடும்போது இந்த மேட்டரைப் படிக்காதீங்க!

'இந்தக் காதல் தம்பதியர் தங்களது திருமண வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள்’ என பில்ட்-அப் வார்த்தைகளால் நம் எல்லோரின் பல்ஸ் ஏற்றும் மைக்கேல் ஹாக் -ரூத் இங்கிலாந்து தம்பதியை நீங்கள் டிஸ்கவரி சேனலின் 'மேன் வுமன் வைல்டு’ நிகழ்ச்சியில் பார்த்திருக்கக்கூடும். உண்மையில் நடுச் சாமத்தில் ஒன்பாத்ரூம் எழுந்து போகக்கூட பயப்படும் என்னைப் போன்றவைக்குக் கண்டம்விட்டு கண்டம்போய் இப்படிக் காட்டுக்குள்ளே கிடந்து தொலைந்து தொலைந்து விளையாடுறதுல என்னடா சாகசம்னு கேட்கணும்போல இருக்கும். நல்ல கொலைப் பசியில் டிபன் சாப்பிட உட்கார்ந்தும் சாப்பிட முடியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கே... அய்ய்யோயய்யோயய்யோ! இதோ அந்தக் காதல் தம்பதியரின் சாம்பிள் அட்ராசிட்டி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருமுறை கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருக்கும் போரியல் காட்டுக்குள் சிக்கவைக்கப்படுகிறார்கள் மைக்கேல்-ரூத் தம்பதி. காட்டுக்குள் எவ்வளவு தேடியும் உணவு

சாப்பிடும்போது இந்த மேட்டரைப் படிக்காதீங்க!

கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆர்மியில் வேலைபார்த்த மைக்கேலுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர். வாகான ஒரு இடத்தில் மரம் மட்டைகளை வைத்துத் தூங்குவதற்குக் கூடாரம் அமைத்துவிடுகிறார். ஒரு கவட்டக் கம்பை வெட்டி ஈட்டிபோல ஒன்றைத் தயார் செய்து மீனைப் பிடிக்க காட்டுக்குள்ளே இருக்கும் ஓடைக்குப் போகிறார். அதில் மீனைத் தவிர மற்ற எல்லாம் மாட்டிக்கொள்கின்றன. 'இன்னிக்கு எங்களுக்குத் துரதிர்ஷ்டமான நாள். ரூத் ரொம்ப ரொம்ப வருத்தப்படுவா’ என்பார் கேமராவைப் பார்த்தபடி. அடுத்து அங்கு ஓடும் புனுகுப் பூனையை வேட்டையாட பொறி வைப்பார். மாட்டிக்கொண்டால், 'எங்களை மன்னிச்சுடு’ என்றபடி சோடி போட்டுத் தின்பார்கள். ஒருவேளை புனுகுப் பூனை எஸ்ஸாகிவிட்டால், 'என்னை மன்னிச்சிரு’ என்றபடி ரூத்துக்குப் பாச முத்தம் கொடுப்பார். 'பரவாயில்லை மைக்கேல். நேத்து சாப்பிட்ட கேப்ரியல் தவளை இன்னும் நெஞ்சுக்குள் இருக்கு’ என்பார் பாசக்கார பத்தினி. இரவு தூங்கப் போகும்முன் நூல் கொண்டு பொறி அமைப்பார். மறுநாள் எலிக்குப் பதில் எலிப்புழுக்கை மட்டுமே இருக்கும். 'ஓஓஓஓவ்... கடவுளே... இப்ப நாம இக்கட்டான நிலைமையில இருக்கோம்னு நினைக்கிறேன்’ என்று பரிதாபமாக முகத்தை வைத்தபடி சொல்வார் மைக்கேல். 'ஐயோ மைக்கேல், ஏதாச்சும் சாப்பிட ரெடி பண்ணுங்க’ என்பார் சூழலை உணராத ரூத். 'ரூத் பசி தாங்க மாட்டா. இந்தக் காட்டுக்குள்ள பெனிசியானு ஒரு பூச்சி இருக்கு. அதோட தலையையும் கொடுக்கையும் இப்படிப் பிச்சிப் போட்டுட்டா, ஈஸியா சாப்பிடலாம். இதுல புரோட்டீனும் கால்சியமும் நிறைய இருக்கு’ என்றபடி ஒரு வண்டைப் பிடித்து அப்படியே கபளீகரம் செய்வார். நம்மைப்போலவே வாந்தி எடுக்கத் தயாராகும் முகபாவத்தோடு ரூத், 'உவ்வே’ என்பார். அதெல்லாம் செம போங்கு. கொஞ்ச நேரத்தில், 'ம்ம்ம்ம்.... செம்ம டேஸ்ட்டா இர்ர்ர்ர்க்கு!... இதோட சுவை அழுகின பூசணிக்காயையும் இதோட இறைச்சி கரப்பான் பூச்சியைப்போலவும் இருக்கு’ என ஃபுல் கட்டு கட்டுவார்.

சில காடுகளில் இலை தழைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் இவர்கள் நியூசிலாந்தின் ராயல் காட்டுக்குள் ஓர் ஆமையைப் பிடித்துவிடு கிறார்கள். ரூத்துக்கு அதை வளர்க்க ஆசை.  மைக்கேலுக்கு அதை வறுத்துத் தின்ன ஆசை. இப்படி வருத்தப்படும் மனைவியையும் வறுத்துத் தின்னும் கணவனையும் உலகில் எங்கேயாவது பார்த்திருக் கீங்களா பாஸ்? 'எனக்கு ரொம்பப் பாரமா இருக்குறது, இப்போதைக்கு நீதான் ரூத்’ என்று சீண்டுவார் மைக்கேல். 'ஓ... அப்படினா நான் உங்களுக்குப் பாரமாவா இருக் கேன்...? உங்களுக்கு என் மேல காதலே இல்லை’ என்று செல்லக் கோபம் காட்டுவார் ரூத். 'ஆஹா... ஆஹா... இவிய்ங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதைப் பார்த்தா, அந்த சிக்கல் சண்முகசுந்தரமும் தில்லானா மோகனாம்பாளும் சண்டை போடுற மாதிரியே இருக்குல்ல?’- இது நம்மோட மைண்ட் வாய்ஸ். எல்லாம் சரி, இவிய்ங்க எப்பவுமே இப்படித் தான்னு 'மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை ஒரு சேஞ்சுக்குப் பார்த்தால் அங்கே பேர் க்ரில்ஸ் செமத்தியான செயல் விளக்கம் கொடுத்து நம்மை டரியல் ஆக்குவார்.

'உலகத்திலேயே கடினமான விஷயம் நம்மோட உடம்புல நீர் வற்றிப் போகாம பார்த்துக்கிறதுதான். இதோ இந்த கலஹாரிப் பாலை வனத்துல தண்ணிக்கு வழி இல்லாததால என்னோட சிறுநீரையே நான் குடிக்....!’

ஐயய்யோ... கொடுமை, கொடுமைனு கோயிலுக்குப் போனா..!

- ஆர்.சரண்