Published:Updated:

விறகு சுமக்கும் டாக்டரம்மா!

விறகு சுமக்கும் டாக்டரம்மா!

விறகு சுமக்கும் டாக்டரம்மா!

ராமநாதபுரத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது புல்லங்குடி கிராமம். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, வயல் வேலை செய்கிறார் டாக்டரம்மா. ஆச்சர்யமாக இருக்கிறதா? பள்ளிக்கூடம் பக்கம் வெயிலுக்குக்கூட ஒதுங்காத இவரை, இந்த ஊரில் எல்லோருமே டாக்டரம்மா என்றுதான் அழைக்கிறார்கள். மருத்துவம் படிக்காமல் எப்படி டாக்டர் ஆகலாம் என்று எந்த அதிகாரியும் இவர்மீது வழக்குப் போட முடியாது. காரணம், இவரோட பேரே டாக்டரம்மாதான்!

குலசாமிப் பேரையும், பிரபலமானவர்களின் பெயர்களையும்தான் நம் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பார்கள். 'இதென்ன டாக்டரம்மா’னு பேரு. கேட்கவே புதுசா இருக்கே என்று, புல்லங்குடி கிராமத் துக்குச் சென்று விசாரித்தால், சிறுசிலிருந்து பெருசு வரைக்கும் அவர் வீட்டுக்கு வழி காட்டுகிறார்கள். அப்போதுதான்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விறகு சுமக்கும் டாக்டரம்மா!

காட்டுக்குச் சென்று, விறகு வெட்டி, சுமந்து வந்த களைப்பில் இருந்த டாக்டரம்மாவிடம் பெயர்க் காரணத்தைக் கேட்க, விறகுக் கட்டை இறக்கி வைத்துவிட்டு, ''இதைக் கேக்கத்தான் இம்புட்டு தூரம் வந்தீகளா? அந்தக் காலத்துல அப்படி வெச்சுப்புட்டாக. சிறப்பா சொல்றதுக்கு இதுல ஒண்ணுமில்லை. இப்படிப் பேர் வெச்சவுக, என்னைப் பள்ளிக்கூடத்துல சேர்த்துப் படிக்கவைக்க நினைக்கலை. நானும் வெயிலுக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதில்லை. பேருக்கேத்த வாழ்க்கையும் இல்லை. அதனாலதான், இன்னைக்கு நான் கஷ்டப்பட்டுக் கஞ்சி குடிக்க வேண்டியிருக்கு. கைநாட்டுதான் வைப்பேன். ரேஷன் கார்டு, ஓட்டு போடுற கார்டு வரைக்கும் டாக்டரம்மானுதான் இருக்கு. ஏதாவது கணக்கெடுக்கும்போது ஆபீசருங்க பேரைக் கேட்பாங்க, டாக்டரம்மானு சொல்வேன். சரிம்மா, பட்டப் பேரைச் சொல்லாதே, உண்மையான பேரைச் சொல்லுன்னு அதட்டுவாங்க. அப்புறம் ஆதாரத்தையெல்லாம் காட்டுன பொறவுதான் ஒப்புக்குவாங்க.  ஏம்மா... இந்த மாதிரி பேரை வெச்சீங்கனு என்னோட அம்மா அப்பாகிட்டே கேட்டதுக்கு, வெக்கணும்னு நினைச்சோம் வெச்சுட்டோம்னு சாதாரணமாச் சொன்னாக. ஆனா, இந்தப் பேரை வெச்சுகிட்டு ஒவ்வொருத்தர்கிட்டேயும் விளக்கம் சொல்ல நான் படுற பாடு இருக்கே '' என்று நொந்துகொண்டார். (நம்மையும் சேர்த்துச் சொல்கிறாரோ?)

பக்கத்து வீட்டுக்கார பாட்டியோ, '' பொறக்கும்போது வெள்ளை வெளேர்னு பொறந்ததால, டாக்டரம்மா மாதிரி இருக்கானு இந்தப் பேரை வெச்சாங்க. (அந்தக் காலத்துல டாக்டரம்மா கருப்பா இருக்க மாட்டாங்களோ?) அது மட்டுமில்லை, சிரமமான பிரசவம் பார்த்த டாக்டரம்மாவை மறக்கக் கூடாதுனு, அவங்க பேர் தெரியாததால இப்படி வெச்சுட்டாக. ஆமா, இதுக்கு இப்ப பணம், கிணம் தரப்போறீங்களா?'' என்றார்.

''கவலைப்படா தீங்கம்மா, சீக்கிரம் தேர்தல் வரும்’' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி னேன்!

செ.சல்மான்

படங்கள்: உ.பாண்டி