Published:Updated:

தங்கமே தமிழனுக்கு இல்லை கட்டுப்பாடு!

தங்கமே தமிழனுக்கு இல்லை கட்டுப்பாடு!

த்தனையோ மேதைகளையும், பேரறிஞர்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த 'டைம் பாஸ்' இதழ், முத்துச்சாமியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம்கொள்கிறது. யார் இந்த முத்துச்சாமி? "குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளவே கூடாது. கடவுள் கொடுப் பதை மனிதன் தடுப்பது அயோக்கியத்தனம்" என்று முழங்கிவரும் கொள்கை முரசு இவர். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே பலசரக்குக் கடை நடத்தி வரும் முத்துச்சாமி பேசுகிறார். காதுகொடுங்க மக்கா!

"மக்கள் தொகை பெருகிடுச்சின்னா, உணவுப் பஞ்சம் வந்திடும். எவனுக்கும் வயித்துக்குச் சோறு கிடைக்காதுனு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவாகச் சிலர் பிரசாரம் செய்துக்கிட்டு இருக்கானுங்க. அது எல்லாமே சுத்தப் பொய். 'அய்யய்யோ நம்மள நம்பி இன்னொரு வயிறு பிறந்திடுச்சே'னு கவலைப்படாதீங்க சார். அந்த வயிறு கூடவேதான் ரெண்டு கையும், ரெண்டு காலும் பிறந்திருக்கிறதைக் கவனிங்க. அது தனக்காக மட்டுமின்றி, உங்களுக்காகவும் ஓடி ஓடி உழைக்கும்.

தங்கமே தமிழனுக்கு இல்லை கட்டுப்பாடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரெண்டு குழந்தை போதும்னு நீங்க சொல்ற மாதிரி... அந்தக் காலத்து ஆளுங்களும் சொல்லி இருந்தா... கண்ணதாசன், அம்பேத்கார், தேவநேயப் பாவணர், ரவீந்திர நாத் தாகூர், ஐன்ஸ்டீன், திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் பிறந்திருப்பார் களா? நான்கூட என் பெற்றோருக்கு 3-வது பிள்ளைதான். (இவரும் அந்த மாதிரி அறிஞர்கள் வரிசையில வர்றாராம்...)

கடவுள் ஒவ்வொரு உயிரையும் ஜோடி ஜோடியாகத்தான் படைக்கிறான். அதனால்தான் எந்த மதப் புனித நூலிலும் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லவில்லை. (ஆஹாங்!) ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும்போது, உலகின் ஒரு மூலையில் பிறந்த குழந்தையின் «ஜாடி இந்த மண்ணுக்கு வராமல் தடுக்கப்படுகிறது. இதனால்தான் இப்போது திருமணத்துக்கு சரியான ஜோடிப் பொருத்தம் அமைவது இல்லை. அமைந்தாலும் விவாகரத்து ஆகிவிடுகிறது. (ஆஹாஹாங்!)

மக்கள் தொகை அதிகமாச்சுன்னா நெருக்கடி அதிகமாகிடும்., உணவுப் பஞ்சம் வரும், பூமிப்பந்து தாங்காதுனு சிலர் சொல்றாங்க. இயற்கையே ஒரு கட்டுப்பாடு வெச்சிருக்கு தம்பி. உதாரணத்துக்கு எங்க அப்பா-அம்மாவுக்கு 7 குழந்தைங்க. நான் குடும்பக் கட்டுப்பாடு பண்ணலை. ஆனா, எனக்கு 3 குழந்தைதான். எவ்வளவு முயற்சி(?!) பண்ணியும் மேற்கொண்டு குழந்தை பிறக்கலியே..?!

தங்கமே தமிழனுக்கு இல்லை கட்டுப்பாடு!

மக்கள் தொகையைக் குறைச்சிக்கிட்டே போனா, ஒரு காலத்துல நம் நாடு சரிசெய்யவே முடியாத மோசமான நிலைக்குப் போய்விடும்.  அதனாலதான் சொல்றேன். இப்பவே எவ்வளவு முடியுமோ, அத்தனைக் கொழந்தைங்க பெத்துக்கோங்க. மத்ததை ஆண்டவன் பார்த்துப்பான்" என்றார்.

இந்த அற்புதக் கருத்தை வலியுறுத்தி, கடந்த 15 ஆண்டுக ளாக பிட் நோட்டீஸ் கொடுத்து வருகிறார் முத்துச்சாமி. அந்த நோட்டீஸில் ஸ்ரீராம் ஸுகதாஸ் அன்பர்கள் என்று அச்சிட்டிருப்பதைப் பார்த்து, "அண்ணே... உங்க அமைப் புல எத்தனை பேர் இருக்காங்க?' என்று கேட்டேன். மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு எதையோ எண்ணினார். மறுபடியும் நான் கேட்க, பம்மியபடி, "முன்னாடி நிறையப் பேர் இருந்தாங்க தம்பி. இப்ப நான் மட்டும்தான்" என்றார் வருத்தமாக.

ஓ... அதான் மக்கள் தொகையைப் பெருக்கச் சொல்றீங்களா?

- கே.கே.மகேஷ்

படம்: ஆர்.எம்.முத்துராஜ்