Published:Updated:

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானுக்குத் திருமணம் ஆன புதிது. எல்லாச் சம்பிரதாயங்களும் முடிந்து உறவினர்கள் எல்லாம் ஊருக்குப் போய்விட, தம்பதியர் இருவர் மட்டுமே இருக்கும் முதல் நாள். மனைவி காபி போட்டுக் கொடுத்தாள். ''சூப்பர் காபி, 15 ரூபாய் லாபம்'’ என்றான் ஜான். "எப்படி?'' என்றாள் மனைவி. ''தினமும் 20 ரூபாய் கொடுத்து, ஓட்டலில் காபி குடிப்பேன். நீயே வீட்டுல போட்டுட்டதால அஞ்சு ரூபாய்தான் ஆகியிருக்கும். அதான்" என்றான். மனைவி முகத்தில் வெட்கப் புன்னகை. கணவனின் உடைகளைப் பொறுப்பாய் அயர்ன் செய்து தந்தாள் புது மனைவி. ''ரொம்ப நீட்டா அயர்ன் பண்ணியிருக்கே. எனக்கு 10 ரூபாய் மிச்சம்'' என்று புகழ்ந்தான் லிட்டில் ஜான். அப்படியே அன்று முழுவதும் காலை சிற்றுண்டி, மதியம் லஞ்ச், மாலை காபி, இரவு டின்னர் இப்படி எல்லாவற்றுக்கும் வெளியே சாப்பிடும் செலவுடன் ஒப்பிட்டுக் கணக்குப் போட்டு மகிழ்ந்தான். மனைவியும் புகழ்ச்சியில் திளைத்தாள். மறுநாள் காலை எழுந்ததும் 'ஆஹா, சூப்பர் அனுபவம். 500 ரூபாய் லாபம்'' என்று சொன்ன வேகத்தில் செம சூடான காபி முகத்தில் வந்து விழுந்தது ஏன் என்று லிட்டில் ஜானுக்குப் புரியவில்லை!

 - ரகோத்தமன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz