Published:Updated:

இதுக்குப் பேருதான் முழுச்சுதந்திரம்!

இதுக்குப் பேருதான் முழுச்சுதந்திரம்!

ஃபேஷன் நகரம் என வர்ணிக்கப்படும் பாரீஸ் நகரில் இப்போதுதான் பெண்கள் பேன்ட் அணியலாம் என்ற சட்டப்பூர்வ அறிவிப்பே வந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?ஃபேஷன் டி.வி-யில் ஒய்யார நடைபோடும் அழகிகளின் ஃபேஷன் ஷோக்கள் அதிகம் நடக்கும் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் கடந்த 200 ஆண்டுகளாகப் பெண்கள், ஆண்களைப் போல பேன்ட் அணிவதற்குத் தடை இருந்தது. அப்படி அணிய வேண்டும் என்றால் பாரீஸ் நகரின் சிறப்புக் காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்தச் சட்டம் 1799-ம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சு அரசால் கொண்டுவரப்பட்டது. அப்படி விருப்பம் இருந்தால், காவல் துறை அனுமதி வாங்க வேண்டும் என்ற விதித் தளர்வும் அமலில் இருந்தது. இதற்காகவே பிரத்யேகமாக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அனுமதி வழங்கப்

இதுக்குப் பேருதான் முழுச்சுதந்திரம்!

பட்டு வந்தது. நம் ஊரில் மாதக் கடைசியில் டிராஃபிக் போலீஸ் கடமையை 'செவ்வனே செய்வதைப் போல’ அங்கும் காவல் துறை பேன்ட் அணிந்த பெண்களுக்கு டார்ச்சர் கொடுக்க, போராட்டக் குரல்கள் எழுந்தன. 1892-ம் ஆண்டு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. குதிரைச் சவாரி செய்யும் பெண்களுக்கு மட்டும் இந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சட்டமும் நாளடைவில் மாற்றங்களைச் சந்தித்தது. 1909-ம் ஆண்டு சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களுக்கு பேன்ட் அணிய அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், மற்ற பெண்கள் பேன்ட் அணிவதற்கான தடை அப்படியே இருந்தது. பேன்ட் அணியத்தான் தடையே தவிர, அங்கு எப்போதும் அறிவிக்கப்படாத தேசிய ஆடையாக ஸ்கர்ட் இருந்தது. ஸ்கர்ட்டும் ஆபத்தான பிரதேசங்களைத் தாண்டி ஏறி இருந்ததைக் கண்டிக்க அங்கு சட்டம் இயற்றப்படவில்லை என்பது விந்தையிலும் விந்தை.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2010-ல் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் சிலரும் பெண்ணியவாதிகள் சிலரும், 'இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். பெண்களும் ஆண்களைப்போல பேன்ட் அணிவதில் எந்தத் தடைகளும் போடக் கூடாது’ என வாதிட்டனர். கிட்டத்தட்ட அதற்கு அனுமதியும் கிடைத்தாற்போல இரண்டு வருடங்களாக பெண்கள் சர்வசாதாரணமாக பேன்ட் அணியத் தொடங்கினார்கள். இந்த 'பிரேக் தி ரூல்ஸ்’ நன்றாகவே ஒர்க்-அவுட் ஆனது. 'சட்டத்துக்கு முன்பு ஆணும் பெண்ணும் சமம் என்னும்போது ஆண்களைப் போல பேன்ட் அணிவது மட்டும் எப்படித் தவறாகும்?’ என்பது பிரான்ஸ் பெண்ணியவாதிகளின் வாதம். அந்த நாட்டின் பெண்கள் நல உரிமைக்கான அமைச்சர் நஜ்ஜத் வாலவுட் பெல்காகெம் இதனையே கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். கிட்டத்தட்ட அவர் தலைமையில் குழு அமைத்து பழைய சட்டத்தை மாற்றி எழுதினார்கள். தற்போது பிரெஞ்சு அதிபர் ஜார்ஜஸ் நிக்கோலஸ் ஹாலந்தி, 'இனி தடை ஏதும் இல்லை... பெண்கள் பேன்ட் அணிவதற்கு’ என்று திருவாய் மலர்ந்து அருளினார். 'அர்த்தமற்ற தடைச் சட்டம் விலக்கப்பட குரல் கொடுத்த பெண் அமைச்சர் நஜ்ஜத் வாலவுட் பெல்காகெம்முக்கு நன்றிகள்’ என்ற பதாகையைத் தாங்கியபடி, பாரீஸ் நகரெங்கும் பெண்கள் விடிய விடிய ரவுண்ட் வந்தனர். முக்கியமான விஷயம் சட்டம் கொண்டுவரப்பட்ட அன்று மசோதா தாக்கல் செய்ய, பேன்ட் அணிந்து வந்து கவனம் ஈர்த்தார் பெண் அமைச்சர் நஜ்ஜத்.  பாரீஸே இப்போது பேண்டு வாத்தியங்களோடு பேன்ட் அணிந்த பெண்களால் களைகட்டுகிறது!

-ஆர்.சரண்