Published:Updated:

ரியல் எஜமான்!

ரியல் எஜமான்!

 சேலம் பிரபல ஸ்ரீசரவண பவன் ஹோட்டல் குழும உரிமையாளர் சிவராமனுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம். வருடத்தில் ஒருநாள் தனது மொத்த ஊழியர்களையும் அழைத்து உழைப்பாளர் திருவிழா நடத்திக் கலக்கிவிடுவார். அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு களை கட்டி யது விழா.

ரியல் எஜமான்!

 அன்று சேலத்தில் உள்ள ஸ்ரீசரவண பவனின் அத்தனை கிளைகளுக்கும் ஓய்வு. டேபிள் துடைக்கும் பையனில் தொடங்கி மேலாளர் வரை அத்தனை பேருக்கும் சிவரா மனே வீடு தேடிப் போய் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து இருக்கிறார். அனைவருக்கும் புத்தம் புதிய ஆடைகள். ''என்னோட வளர்ச்சிக்குக் காரணமே உங்க உழைப்புதான். தினமும் ஆயிரக்கணக்கான பேரை உட்காரவெச்சு வயிறார சாப்பாடு கொடுத்து அனுப்புறீங்க. அவங்க ஆயிரம் முறை சிடுசிடுத்தாலும் அத்தனையையும் உங்க புன்னகை யால் சமாளிக்கிறீங்க. அப்படிப்பட்ட உங்களுக்கு என் கையால் பரிமாற எனக்குக் கொடுத்துவெச்சிருக்கணும்...'' என்று உருக்கமும் நெருக்கமுமாக சிவராமன் சொல்ல... நெகிழ்ந்து போனார்கள் ஊழியர்கள். விழாவுக்கு வந்த அனைவருக்கும் பரிசுப் பொருட் களையும் வழங்கினார் இந்த எஜமான்!

- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு