Published:Updated:

'அய்யோ அம்மா காப்பாத்துங்க...'

'அய்யோ அம்மா காப்பாத்துங்க...'

##~##
சே
லம் வெண்ணங்குடி முனியப்பன் கோயில். புது வண்டிக்கு பூஜை போடுவதில் துவங்கி, காது குத்துவது, கல்யாணத்துக்கு நாள் குறிப்பது என எல்லா நாட்களும் பிஸியாக இருப்பார் முனியப்பன். கோயிலுக்குப் போனால்... கறிச் சோறோ, சர்க்கரைப் பொங்கலோ நிச்சயம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 முனியப்பனிடம் ஆளாளுக்கு ஏதோதோ கோரிக்கைவைக்க... நான், 'மேட்டர் கிடைக்க வேண்டும்’ என்று மனம் உருகி வேண்டினேன்.  'அய்யோ, அம்மா காப்பாத்துங்க... குத்துறாங்களே...’ என்று சிறுமி ஒருத்தியின் கதறல் சத்தம். என்னமோ, ஏதோ எனப் பார்த்தால்... காது குத்து!

'அய்யோ அம்மா காப்பாத்துங்க...'

சேலம் சத்திரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்-ரஞ்சிதம் தம்பதியரின் குழந்தைகளுக்குக் காது குத்து விழா. தாய்மாமன் செல்வகுமார் சீர்வரிசைகளுடன் இரண்டு ஆட்டுக் கிடாக்கள் சகிதம்  ஆட்டோவில் வந்தார். 'சட்டுபுட்டுணு கெடாயை வெட்டுங்கப்பா... நேரமாயிட்டே இருக்குல்ல...’ - வழக்கம் போல் பெருசு ஒருவர் வயிற்றைத் தடவிக்கொண்டே குரல் கொடுக்க... முதலில் ஆடுகளுக்கு கழுத்து வெட்டு விழா ஆரம்பம் ஆனது!

அதே நேரம்.. மாமன் மடியில் தங்கச்சிப் பாப்பா வர்ஷினியை உட்காரவைத்தார்கள். சுற்றிலும் வாழைப் பழம், மைசூர்பாகு, ஜிலேபி என ரவுண்டுகட்ட... வர்ஷினிக்குச் செம சந்தோஷம். திடீரென ஒருவர் கத்தியுடன் அவளது தலையைத் தடவ... சந்தோஷம்... சந்தேகமானது. மிரண்ட கண்களுடன் கையில் இருந்த ஜிலேபியைச் சாப்பிடா மல் திருப்பித் திருப்பிப் பார்த் துக்கொண்டு இருந்தாள். நைஸாக மொட்டை போட்டுவிட்டார்கள். அடுத்து அண்ணன் பிரசாத்தின் முறை. பையன் கொஞ்சம் வளர்ந்துவிட்டபடியால் அவனுக்குச் சந்தேகமும் வளர்ந்துவிட்டது. அழுதபடியே மொட்டை போடவிட்டவன், கிடைத்த சாக்கில் நான்கைந்து ஜிலேபிகளை மொக்கினான்.  

'அய்யோ அம்மா காப்பாத்துங்க...'

இருவரையும் பக்கத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் இரண்டு முக்கு முக்கி, மொட்டைத் தலையில் சந்தனம் பூசினார்கள். தாய்மாமன் மடியில் இருந்த வர்ஷினியை நாலைந்து பேர் அமுக்கிப் பிடிக்க... வலியே தெரியாமல் நச்செனக் காது குத்தி, தங்கத் தோட்டை மாட்டினார் ஆசாரி. தோட்டைப் பார்த்தவளுக்கு அழத் தோன்றவில்லை!

ஆனால், பிரசாத் படுத்தி எடுத்துவிட்டான். அவன் திமிறியதில் ஆசாரிக்கு ஆங்காங்கே ஊசிக் குத்து. ஒருவழியாக அவனுக்கு பொம்மை செல்போனைக் கொடுத்துச் சமாளித்தார்கள்.

'அய்யோ அம்மா காப்பாத்துங்க...'

மொய்ப் படலம் துவங்க...  குழந்தைகள் கையில்

'அய்யோ அம்மா காப்பாத்துங்க...'

1,000, 500 நோட்டுகள் படபடத்தன. கொஞ்ச நேரத்தில் கறி வாசனை கமகமத்தது. 'சாப்பாடு ரெடி. பந்தி போட்டுடலாம்’ என உறவுக்காரர் ஒருவர் குரல் கொடுத்தார். அப்புறம் என்ன, கேட்டவுடன் மேட்டருடன் கறி சோறும் கொடுத்த வெண்ணங்குடி முனியப்பனின் மகிமையே மகிமை!

- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்