Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Published:Updated:

ஜெயலலிதா பிறந்த நாளின்போது என் மண்டையில் மூன்று பல்புகள் எரிந்தன.

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

பிறந்த நாளைக்கு முன்பே ஜெயலலிதா விடுத்திருந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாசகம் இது. ''என்னுடைய பிறந்த நாள் அன்று யாரும் என்னைச் சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்''. - பிறந்த நாளைக்கு மட்டும்தானா?  பொதுவாக எல்லோருமே அவரவர் பிறந்த நாள் கேக்கை அவரவர்தான் வெட்டுவோம். ஆனால், ஜெயலலிதா பிறந்த நாளைக்கு மட்டும் வருடா வருடம் கட்சி அலுவலகத்தில் அவர் பெயரைச் சொல்லி அ.தி.மு.க. நிர்வாகிகள் கேக்கை வெட்டி அடுத்தவருக்கு ஊட்டுகிறார்கள். அதனாலதான் அவங்க புரட்சித் தலைவியோ?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

ஜெயலலிதாவை வாழ்த்தி நாளிதழ்களில் வெளியான விளம்பரங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு விளம்பரத்துக்குக் கீழே 'நத்தம் விஸ்வநாதன், மின்சாரம், மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர்’ என்றிருந்தது. தமிழ்நாட்டில் எது இல்லையோ அது ரெண்டையும் இவருக்கு டிபார்ட்மென்ட்டா ஒதுக்கியிருக்காங்களே, ஏன்ன்ன்ன்?

மீப காலமாக வரும் படங்களில் தமிழ் சினிமா இயக்குநர்கள் கூட்டாகவோ தனியாகவோ ஒரு சில முடிவுகளை எடுத்திருப்ப தாகத் தெரிகிறது. தொடர்ச்சியாகப் படங்களைப் பார்க்கும்போது கவனித்தது, (அவதானித்ததுன்னும் சொல்லலாம்) அவையாவன:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தப்பித் தவறிக்கூட தமிழ் நாட்டில் கதை நடந்துவிடக் கூடாது. ஒரு சீனில்கூட தமிழ்நாடு வந்துவிடக் கூடாது. உதாரணங்கள் : போடா போடி, விஸ்வரூபம், ஆதி பகவன். ரொம்ப வருஷத்துக்கு முன்பு, 'பூ மழை பொழிகிறது', 'ஜப்பானில் கல்யாணராமன்’ மாதிரியான படங்களை எல்லாம் 'வெளிநாட்டைக் காட்டுவாங்க’ என்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாகப் பார்த்தார்கள். போற போக்கைப் பார்த்தால் இன்னும் ஐந்து வருடங்களில் 'தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம்’ என்று கூட்டம் கூட்டமாகப் போய்ப் பார்ப்பார்களோ? ஹும்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

படத்தில் ஒரு பாடலையாவது தமிழ் தெரியாத ஒரு பாடகர் பாட வேண்டும். உதாரணங்கள் : 'கடல்’, 'சமர்’, 'ஆதி பகவன்’. என் நண்பனின் மனைவி மணிரத்னத்தின் தீவிர ரசிகை. 'கடல்’ படம் பற்றி வந்த பல கெட்ட செய்திகளை அறிந்துகொண்ட நண்பர் 'கடல்’ படத்துக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, பிடிவாதம் பிடித்துக் கூட்டிப்போனாராம் மனைவி. மண்டை காய்ந்து உட்கார்ந்திருக்கும்போது, தமிழைக் கொலை செய்து, 'அடியே... அடியே... என்னை எங்கேடி கூட்டிப் போறே’ என்று பாட்டு வந்திருக்கிறது. 'வேற எங்க? இப்படி ஒரு கொடுமையான படத்துக்குத்தான்’ என்று சொல்லியிருக்கிறார் நண்பரின் மனைவி!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

ஒரு காலத்தில் வில்லன்கள் மட்டும்தான் சரக்கடிப்பார்கள். அவர்கள் சரக்கு அடித்து கவர்ச்சி நடனத்தை ரசிக்கும் கேப்பில்தான் ஹீரோக்களே அவர்களை வீழ்த்துவார்கள். பிறகு ரஜினி காலத்தில் ஹீரோக்களும் சரக்கு அடிக்க, 'நல்லவனுக்கு நல்லவன்’ ராதிகாக்களும் 'புதிய பாதை’ சீதாக்களும் படாத பாடுபட்டு ஹீரோக்களைத் திருத்துவதையே ஃபுல் டைம் டியூட்டியாக வைத்திருந் தார்கள். இப்போது வரும் படங்களில் எல்லாம் ஹீரோ சிகரெட் குடிக்கிற காட்சிகள் வருகிறதோ இல்லையோ, ஹீரோயின்கள் சரக்கு,  சிகரெட் அடிக்கும் காட்சிகள்தான் அதிகம் வருகின்றன. உதாரணங்கள் : 'மங்காத்தா’, 'துப்பாக்கி’, 'சமர்’, 'ஆதி பகவன்’. ஏன் குடித்து வீணாகும் ஹீரோயினை ஹீரோ திருத்துவதாக ஒரு புதுமையான சினிமா எடுக்கக் கூடாது இயக்குநர்களே? புதிய போதை... நல்லாருக்குல்ல!