Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

Published:Updated:
ஆஃப் த ரெக்கார்டு!

அரசியல் மேடையில் கர்ஜிக்கும் இயக்குநர் நடித்த படம் தயாராகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்னும் வியாபாரம் ஆகாமல் முடங்கிக்கிடக்கிறது. சரி, சேனலுக்காவது விற்கலாம் என்று போனால், 'அவர் நடித்த படமா, ஐயோ’ என்கிறார்களாம் சேனல்காரர்கள். புதுசு புதுசாக் கண்டுபிடிக்கிறாங்களேய்யா காரணத்தை!  

ஆஃப் த ரெக்கார்டு!
ஆஃப் த ரெக்கார்டு!

பதவிக்கு ஆப்பு விழுந்த இனிஷியல் இயக்குநர் மேலிட மேடத்தைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டாராம். ஆனால் கார்டன் கதவு திறக்காததால் கடுப்பான இயக்குநர், 'நாமளும் அரசியலில் இறங்கினாத்தான் சரிப்படும்’ என்று மகனை முடுக்கியுள்ளாராம். மகனும் ஓ.கே. சொல்ல, வடபழனியில் உள்ள தன் திருமண மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து டிஸ்கஸ் செய்கிறாராம். வாங்க தலைவா, எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுறோம்!  

ஆஃப் த ரெக்கார்டு!

சித்திர நடிகையுடன் சில்லுன்னு நெருக்கம், ஷூட்டிங்குக்கு மப்பேத்தி வருவது, சரியான கதையை செலக்ட் செய்யாதது என சர்ட்டிங் சூட்டிங் நடிகரின் படங்கள் வரிசையாக ஃப்ளாப் ஆவதற்குக் காரணங்களை அடுக்குகிறார்கள். இப்போது தனக்கு செட் ஆகாத கதை என்று தோன்றினால், அதைத் தன் நாடகப் பட்டறை நடிகர்கள் நடிப்பதற்கு சிபாரிசு செய்கிறாராம் நடிகர். இது நல்லதுக்கா, கெட்டதுக்கானு தெரியலையே!

ஆஃப் த ரெக்கார்டு!

இன்ஸ்டால்மென்ட் பிசினஸை ஆரம்பித்து வைத்த கோட் சூட் அண்ணாச்சி தன் மகன் நடித்த மூன்று படங்கள் ரிலீஸ் ஆவதற்காக கோடிக்கணக்கில் ஃபைனான்ஸ் செய்திருக்கிறார். ஆனாலும் படங்கள் பிசினஸ் ஆவதுபோல் தெரியவில்லை. 'இப்படிப் பணம் வீணாகுதே. எப்போதான் இவன் வாழ்க்கையில வசந்தம் வரும்’ என்று புலம்புகிறாராம் அண்ணாச்சி!

ஆஃப் த ரெக்கார்டு!

மணிரத்னம் படத்தின் பெயர் கொண்ட நடிகைக்கும் அந்த டைரக்டருக்கும் உள்ள நெருக்கம் பலரும் அறிந்ததுதான். ஏற்கெனவே ஒரு விவகாரமான படம் எடுத்து நாயகியின் இமேஜை 'காலி’ செய்த இயக்குநர் இப்போது புதிதாக ஒரு படத்தைத் தயாரித்து இயக்குகிறார். இதிலும் நடிக்க நாயகிக்கு அழைப்பு விடுக்க, இதுவரை எந்தப் பதிலும் வரவில்லையாம்!