Published:Updated:

மைனாவுக்கு பிடிச்ச கோவை!

மைனாவுக்கு பிடிச்ச கோவை!

 ##~##
ந்த ஆங்கிளில் பார்த்தாலும் அழகாக இருக்கிறார் அமலா பால்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகமே காதலைக் கொண்டாடிய பிப்ரவரி 14-ம் தேதி. கோவை ரேஸ் கோர்ஸ் அருகே ஒரு ப்யூட்டி க்ளினிக்கின் திறப்பு விழா.

செல்லும் இடம் எல்லாம் சிங்கிள் ரோஸுடன் ஆர்ப்பரிக்கும் கோவைப் பசங்களைச் சமாளிப்பதற்குள், 'ஹைய்யோடா!’ என்றாகிவிட்டது அமலாவுக்கு. வெட்கத்திலும் பதற்றத்திலும் பொண்ணு குனிந்த தலை நிமிரவே இல்லை. சடசடவென ஃப்ளாஷ்கள் போட்டுத் தாக்க... சில நேரம் குளுகுளு, சில நேரம் சிடுசிடுவென இருந்த அமலாவிடம் சில கேள்விகளைத் தட்டினேன்.

மைனாவுக்கு பிடிச்ச கோவை!

''எப்படி இருக்கு எங்க கோயமுத்தூருங்க?''

''லவ்லி! கோவையில் பொண்ணுங்க அழகா இருப்பாங்கன்னு சொல்வாங்க. ஆனா, இந்த ஊர்ப் பசங்களும் ரொம்ப ஸ்மார்ட். கோவைக்கும் கேரளாவுக்கும் பெரிய வித்தியாசமே தெரியலை. சில்லுனு இருக்கு. வார்த்தைக்கு வார்த்தை 'வாங்க... போங்க’னு மரியாதையாப் பேசுறாங்க. கோவை எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சுங்க!''

''சரி, வந்த இடத்துல உங்களுக்கு என்ன கோபம்?''

''இல்லை... இல்லை. இத்தனை போட்டோகிராஃபர்களை எதிர்பார்க்கலை. ஏதோ பிரதமர் ரேஞ்சுக்கு என்னைச் சுத்தி இவ்வளவு மீடியா குவிஞ்சா, பயமா இருக்கும்ல.  நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய ஆளு இல்லையே. இருந்தாலும், என் மேல வெச்சிருக்கிற அன்பை நினைச்சா... சந்தோஷமா இருக்கு. இப்பிடியே ஊட்டி வரைக்கும் ஒரு டிரைவ் போயிட்டு வரணும்னு ஆசை. ஆனா, இவ்வளவு பேர் சூழ்ந்துக்கிட்ட நிலைமையில்... இன்னொரு முறை சஸ்பென்ஸாதான் வரணும்!''

மைனாவுக்கு பிடிச்ச கோவை!

''ஓ.கே. ஓவர் டு சினிமா... இந்தத் தடதட வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''

''கடவுள் உட்பட எல்லாருக்கும் என் நன்றி. தமிழ்நாட்டில் ஒரு ஹிட் கொடுத்தால், ஓஹோன்னு லைஃப்பே தர்றாங்க. மலையாளத்திலும் நிறையப் பண்ணணும். விக்ரம், ஆர்யா படங்கள் அடுத்தடுத்து இருக்கு. அழகான கனவு மாதிரி இருக்கு இந்த வருஷம்!''

- எஸ்.ஷக்தி, அட்டை மற்றும் படங்கள்: தி.விஜய்