Published:Updated:

''கருத்தே இல்லாமப் பேசினா அது கருத்துச் சுதந்திரம் இல்லை!''

''கருத்தே இல்லாமப் பேசினா அது கருத்துச் சுதந்திரம் இல்லை!''

''கருத்தே இல்லாமப் பேசினா அது கருத்துச் சுதந்திரம் இல்லை!''

''கருத்தே இல்லாமப் பேசினா அது கருத்துச் சுதந்திரம் இல்லை!''

Published:Updated:

'விஸ்வரூபம்’ பிரச்னை முடிந்தாலும் விஷால் - நடிகர் சங்கம் பிரச்னை முடியவில்லை. நடிகர் சங்கம் அனுப்பிய நோட்டீஸுக்கு விஷால் அனுப்பிய பதில் கடிதத்தில் செம காரம். 'என்னதான் பிரச்னை?’ என்று சில பல விஷயங்களைப் பேச ராதாரவியைச் சந்தித்தேன். பேட்டி முடியும் வரை பரபர பட்டாசு கொளுத்தினார் மனிதர்.  

''கருத்தே இல்லாமப் பேசினா அது கருத்துச் சுதந்திரம் இல்லை!''

''நோட்டீஸ் அனுப்புறதுக்குப் பதிலா கொஞ்சம் விஷாலைக் கூப்பிட்டு பேசி இருந்தீங்கன்னா... ஒரு போன்கால்ல முடிஞ்சிருக்குமே?''

''பாருங்க... சங்கத்துக்குனு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. ஒரு கம்பெனியில 8 மணி நேரம் வேலை பார்க்குறீங்கனா, 8-வது மணி நேரம் நீங்க உங்க முதலாளிக்கே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா, அந்த 8 மணி நேரமும் நீங்க கம்பெனி சொல்றபடிதான் கேட்கணும். இதெல்லாம் அடிப்படை அம்சம். அவர் படிச்சவர்... நாங்க படிக்காத முட்டாளுங்க. ஃபேஸ்புக்ல 'விஸ்வரூபம்’ பிரச்னையில நடிகர் சங்கம்னு போட்டு மூணு கொஸ்ட்டீன் மார்க் போட்டிருக்கிறதாக் காட்டினாங்க. விஷால் இப்போ பெரிய நடிகர். விஸ்வரூபப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது இன்னொரு மிகப் பெரிய நடிகருக்கு. ஏன் இவரே ஆழ்வார்பேட்டைக்குப் போய் நின்னுருக்கலாமே? அதைச் செய்றதை விட்டுட்டு ஏன் ஃபேஸ்புக்ல நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்கணும்? இவ்வளவுக்கும் விஷால் இதுவரை நடிகர் சங்கத்துல நடந்த எந்த மீட்டிங்குக்கும் வந்து கலந்துக்கிட்டதில்லை. 'சண்டக்கோழி’ படத்துல லிங்குசாமிக்கும் அவருக்கும் பணப் பிரச்னை வந்தப்போ, என் வீட்டுக்கே வந்தார். நடிகர் சங்கம்தான் சுமுகமாத் தீர்த்துவெச்சது. இப்போ ஃபேஸ்புக்ல சிறுபிள்ளைத்தனமா இப்படி ஒரு ஸ்டேட்டஸ் போடப்போய் நாங்க விளக்கம் கேட்க வேண்டியதாப் போச்சு. சனியன் ஃபேஸ்புக்னாலதான் பிரச்னை. எழுதிவெச்சுக்குங்க, ஃபேஸ்புக், ட்விட்டர்னால இன்னொரு உலகப் போரே மூளப்போகுது. சகோதரர் விஷால் மட்டும் இல்லை. காமெடி நடிகர் சந்தானம் கூட சங்கக் கூட்டங்களில் கலந்துக்கிறதே இல்லை. நடிகர் சங்கத்தை இவங்கள்லாம் மொதல்ல மதிக்கட்டும். அப்புறம் கேள்வி கேட்கட்டும்!''

''விஸ்வரூபப் பிரச்னையில் நீங்க யார் பக்கம்?''

''கட்டின கைலியோட கமல் வீட்ல போய் நின்னவன் நானு. 'அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராதாரவி தைரியமாக வந்தார்’னுகூட பத்திரிகைல நியூஸ் வந்திருச்சு. கமல்கிட்டேயே, 'நாட்டைவிட்டு வெளில போய்டுவேன்லாம் ஸ்டேட்மென்ட் கொடுத்தது தப்புப்பா. அசிங்கமா இருக்கு’னு சொன்னேன். கமல் என் பால்ய சினேகிதன். கன்னட சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருந்த என்னை, தமிழ் சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்ததே கமல்தான். நைட்டோட நைட்டா சரத்குமாரும் வந்திருந்தார். பொறுமையாத்தான் பேச முடியும்.''

''கருத்தே இல்லாமப் பேசினா அது கருத்துச் சுதந்திரம் இல்லை!''

( 'தாயில்லாமல் நான் இல்லை...’ என்ற பாடல் ரிங்டோனாக ஒலிக்க... மொபைலில் பேசிவிட்டு அமர்ந்தார்.)

''முதலில் தி.மு.க-வில இருந்தீங்க. அப்புறம் அ.தி.மு.க. போனீங்க. இடையில விலகி இருந்தீங்க. அப்புறம் அ.தி.மு.க. இப்போ அ.தி.மு.க-வுல இருக்கீங்களா, இல்லையா?''

''இப்பவும் அ.தி.மு.க-வுலதாங்க இருக்கேன். நான் எங்கே இருக்கணும்னு நினைக்கிறேனோ, அங்கே இருப்பேன். நேத்து அங்கே இருந்தேன். இன்னிக்கு இங்கே இருக்கேன். நாளைக்கு... யாருக்குத் தெரியும்? அது என் இஷ்டம். 'அம்மா இப்போ பெஸ்ட்டா ஆட்சி செய்றாங்க’னு சொல்றேன். உடனே, 'அப்போ கடந்த அம்மா ஆட்சி வொர்ஸ்ட்டா?’னு சிண்டு முடியக் கூடாது. 'விஸ்வரூபம்’ பிரச்னையிலயும் அம்மாவோட அணுகுமுறை பெஸ்ட்டா இருந்தது. அதனால, படம் ஈஸியா ரிலீஸ் ஆனது. என்னைப்பற்றித் தெரிஞ்சவங்களுக்கு நான் எங்கே இருந்தாலும் திராவிடப் பாரம்பரியத்தைப் பேசிக்கிட்டு அமைதியா இருக்குறது நல்லாத் தெரியும்!''

''கருத்து சுதந்திரத்தைப் பத்தி உங்க கருத்து என்ன?''

''கருத்தா சொன்னாத்தான் சுதந்திரம். கருத்தே இல்லாமப் பேசுறதுக்குப் பேரு கருத்துச் சுதந்திரம் இல்லை. நம்ம கருத்து நாலு பேரைக் கஷ்டப்படுத்தினா, அது கருத்து சுதந்திரம் இல்லை. யார் மனசையும் புண்படாமப் படம் எடுக்கணும்கிறதே நல்ல விஷயங்க. கமலுக்குப் பிரச்னை ஏற்கெனவே 'ஹேராம்’, 'உன்னைப்«பால் ஒருவன்’ல லைட்டா வந்து அப்படியே அமுங்கி இப்ப வெடிச்சிருக்கு. என்னதான் என் நண்பனா இருந்தாலும் கமல் போல ஒரு நல்ல நடிகர்கிட்டே போய் இப்படி நடிங்க... அப்படி நடிக்காதீங்கனு சொல்லக் கூடாது. 'விஸ்வரூபம்’ படத்துக்கு முன்னாடி கமல் கொஞ்சம் ஆராய்ஞ்சு செஞ்சிருந்தா, பெட்டரா இருந்திருக்கும். நான் இன்னும் படம் பார்க் கலை. அதனால படத்தைப் பத்திச் சொல்ல முடியாது. கமல்போல நல்ல நடிகர் இந்தமாதிரி சர்ச்சைகளில் சிக்கி ஸ்பாயில் ஆகிடக் கூடாது. எடிட்டிங்ல ஒரு சண்டைக் காட்சி பார்த்தேன். இந்த வயசுலேயும் என்னமாப் பண்ணி இருக்கார். சான்ஸே இல்லை. கமலும் இனி கவனமா இருப்பார்னு நம்புறேன்''

''கமலோட கருத்து சுதந்திரம் சரி. குஷ்புவும் ஒரு கருத்தைச் சொன்னதால அவர் மீது செருப்பு வீசப்பட்டது பத்தி...''

''ஏங்க... அது அவங்க கட்சி விவகாரங்க. நான் எப்படிச் சொல்றது? நீங்க கேட்கிறதால ஒண்ணு சொல்றேன். பேராசிரியர் மாதிரி ஆளுங்க பேச வேண்டிய விஷயத்தை இவங்க பேசுனா? இதுக்கு மேலே சொல்ற துக்கு இல்லை!''

- ஆர்.சரண்,

படங்கள்: எம்.உசேன்