Published:Updated:

டீன் கொஸ்டீன்

செல்போன் டவர் அருகில் வசிக்கலாமா?

##~##
ஆர்.மிருதுளா, சென்னை-75.

 ''நான், 10-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். விமான பைலட் ஆக வேண்டும் என்று ஆசை. அப்படியானால், நான் 11-ம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பைலட் படிப்புக்கு எவ்வளவு செலவாகும்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குபேரன், ஒருங்கிணைப்பாளர், மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப்.

''பைலட் படிப்பு படிக்க 11-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் இணைந்த பாடப் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்கள் அவசியம். தமிழ்நாட்டில் 'மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப்’பில் பயிற்சி பெறக் குறைந்தது 15 முதல் 16 லட்ச ரூபாய் வரை செலவாகும். நாங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு அனுமதி கிடைக்கும். மூன்று ஆண்டு காலப் பயிற்சி மற்றும் பரீட்சைகளுக்குப் பிறகு, தேர்ச்சி அடைபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 350 மணி நேரப் பயிற்சியில் தேறுபவர்களுக்கு 'ஸ்டூடன்ட் பைலட் லைசென்ஸ்’ வழங்கப்படும். 'கமர்ஷியல் பைலட் லைசென்ஸ்’ பெறக் கூடுதலாக 200 மணி நேரப் பயிற்சியை முடிக்க வேண்டும். கண் பார்வை /- 2.5 பவருக்குள் இருக்க வேண்டும், ஐந்து அடிக்குக் குறையாத உயரம் அவசியம், அதிக எடை இருக்கக் கூடாது போன்ற அடிப்படை உடல் தகுதிகள் அவசியம். சென்னை, ஹைதராபாத், டெல்லி என இந்தியா முழுக்க மொத்தம் 14 இடங்களில் விமான ஓட்டுநருக்கான பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. சிறப்பான முறையில் பயிற்சியில் தேறுபவர்களுக்கு அரசாங்கம் மற்றும் தனியார் விமான நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு மூலம் வேலை கிடைக்கும். ஆரம்ப சம்பளமே லட்சங்களில் துவங்கும் பிரகாசமான ஸ்கோப் உள்ள வேலை இது!''

மு.தாரிணி, மதுரை-3.

டீன் கொஸ்டீன்

''நான் நீண்ட நாட்களாக ஜலதோஷத்தால் அவதிப்பட்டு வருகிறேன். மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இதுவரை மருந்து, மாத்திரைகள் மூலம் நிரந்தரத் தீர்வு எதுவும் கிட்டவில்லை. எனக்கு என்னதான் பிரச்னை?''

பால் சுதாகர் பொதுநல மருத்துவர், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்.

டீன் கொஸ்டீன்

''நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த் தால், ஒருவேளை சைனஸால் நீங்கள் பாதிக் கப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது மூக்கின் இரு துவாரங்களுக்கு இடையில் இருக்கும் 'செப்டம்’ (septum) என்ற அமைப்பு சராசரிக்கும் அதிகமாக வளைந்து இருக்கலாம். ஆனால், தக்க பரிசோதனை மூலம் ஊர்ஜிதம் செய்யாமல் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். உடனடியாக அனுபவம் வாய்ந்த ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகுங்கள். அடிப்படை ரத்தப் பரிசோதனை, பேரா நாசல் எக்ஸ்ரே போன்ற சில பரிசோதனைகள் மூலம் அவர் உங்கள் பாதிப்பைக் கண்டறிவார். ரத்தப் பரிசோதனை மூலம், உங்கள் உடலில் வெள்ளை அணுக்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், ஆஸ்துமாவால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எக்ஸ்ரே பரிசோதனை சைனஸ் தொல்லையா என்பதைச் சுட்டிக்காட்டும். பயப்பட வேண்டாம். எந்தப் பிரச்னைக்கும் தக்க தீர்வு உண்டு!''

கே.விஜயா, திருச்சி-2.

''சாதாரணமாக செல்போன் பயன்படுத்தினாலே கதிர் வீச்சினால் பாதிக்கப்படுவோம் என்று செய்திகள் கிலி கிளப்புகின்றன. ஆனால், நான் குடியிருக்கும் வீட்டின் மாடியிலேயே ஒரு செல்போன் டவர் இருக்கிறது. இதனால் எங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? வரும் எனில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?''

கார்த்திகேயன், தலைமைப் பொறியாளர், சென்னை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

''நிச்சயம் பெரிய அளவில் பாதிப்பு வரும் விஜயா. சாதாரண பேஸிக் மாடல் செல் போனே non ionising radiation  கதிர்வீச்சினை வெளிப்படுத்தும். நிறைவான தூக்கம், நேரத் துக்கு விழிப்பது போன்ற அன்றாட விஷயங் களையே அது பாதிக்கும். காது கேட்பதில் மந்தத் தன்மையை உண்டாக்குவது, தூக்கம் இல்லாமை, செயலில் வேகம் இல்லாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒற்றை செல்போனே இவ்வளவு சிக்கல்களை உண்டாக்கும் என்றால், ஒரு செல்போன் டவர் எவ்வளவு அதீத ரேடியேஷனைவெளிப் படுத்தும் என்று இதற்கு மேலும் நான் விளக்க வேண்டுமா? ஆபத்தைத் தலைக்கு மேலே வைத்து இருக்கிறீர்கள். எனது சிபாரிசு... உடனடியாக அந்த வீட்டை நீங்கள் மாற்றுவது நலம்!''

கே.ராஜாங்கம், பொள்ளாசி.

''நான் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவன். ஆனால், சில சலுகைகளுக்காக ஆதிதிராவிட வகுப்புக்கு மாற விரும்புகிறேன். இதற்காக நான் யாரை அணுக வேண்டும்?''

டீன் கொஸ்டீன்

ராமச்சந்திரன் வருவாய்த் துறை, சிவகாசி.

''மதம் மாறுவதுபோல, உங்கள் சாதியை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. பெற்றோர் கலப்புத் திருமணம் செய்தவர்களாக இருந்தால், அவர்கள் இருவரில்  ஒருவரின் சாதியை உங்கள் சாதிச் சான்றிதழில் பதிந்துகொள்ளலாம். அதிலும் முதலாவது குழந்தைக்கு எந்த சாதியைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுதான் அடுத்ததாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் தொடரும். ஒருவேளை, சாதிச் சான்றிதழில் உங்கள் சாதி தவறாகப் பதிவாகி இருந்தால் மட்டுமே, அதனை மாற்றச் சொல்லி அருகில் இருக்கும் வி.ஏ.ஓ- விடம் முறையிடலாம்!''      

து.வெங்கடேஷ், சிதம்பரம்.

''என் தந்தை விரைவில் ஓய்வு பெற இருக்கும் அரசு ஊழியர். பணியில் இருந்து ஓய்வுபெற்றதும் அவருக்குக் கிடைக்கும் பி.எஃப்., கிராஜுவிட்டி தொகையை எதில் உபயோகமாக முதலீடு செய்வது என்பதில் எனக்கு ஏக குழப்பமாக இருக்கிறது. அவருடைய மருத்துவச் செலவைச் சமாளிக்கும் விதத்திலும் ஏதேனும் முதலீடு செய்ய வேண்டும். என்ன செய்வது?''

கே.ராமலிங்கம், முதலீட்டு ஆலோசகர்.

''உங்கள் தந்தை இதுவரை மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லை என்றால், உடனடியாக ஒன்றைப் பதிவு

டீன் கொஸ்டீன்

செய்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம், மெடிக்ளைம் பாலிசிகளில் 'கேஸ்லெஷ்’ என்ற வசதி இருக்கிறது. அதில், பணம் எதுவும் கட்டாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். இந்த மருத்துவக் காப்பீட்டில் சில ஆயிரம் ரூபாயை பிரீமியமாகக் கட்டினால், சில லட்ச ரூபாய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். மற்றபடி, மாதச் செலவுக்குத் தேவைப்படும் பணத்துக்காக,  மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வகையான லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டில் நுழைவுக் கட்டணம் மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. மேலும், வங்கி சேமிப்புக் கணக்குபோல் எப்போது வேண்டுமானலும் தேவையான அளவு பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். ஐந்து முதல் ஏழு சதவிகிதம் வரை வருமானம் கிடைக்கும். இந்த ஃலிக்விட் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்ட் தேவைப்படும்!''

டீன் கொஸ்டீன்