Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

வரவர இந்த விளம்பரங்களில் கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாமல் போகிறது. ஒரு விளம்பரத்தில் 'எனக்கு யார் மாம்பழம் வாங்கித் தருவாங்களோ, அவங்களைக் கட்டிக்குவேன்’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

என்கிறாள் ஒரு பெண். அப்படி அது என்ன பெரிய ஞானப்பழமா என்றும் தெரியவில்லை. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், பெரும்பாலான பெர்ஃப்யூம் விளம்பரங்களில் ஆண் பெர்ஃப்யூமை அடித்த உடனே, கண்டம் விட்டுக் கண்டம் பெண்கள் தாவி வந்து அந்த ஆணை மொய்க்கிறார்கள். இந்த ராமதாஸ் வேறு, ''ஜீன்ஸ் பேன்ட் அணிந்தவர்கள் பெண்களை மயக்கி, காதல் நாடகம் நடத்துகிறார்கள்'' என்று புலம்புகிறார். ஜீன்ஸ் பேன்ட் கம்பெனி ஓனர்கள், ராமதாஸ் பேசுவதையே விளம்பரத்தில் ஒளிபரப்பி, ஏன் பெர்ஃப்யூம் விளம்பரங்களுக்கு டஃப் கொடுக்கக் கூடாது?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன்சிங்கை 'இரவுக் காவலாளி’ என்று வர்ணித்திருக்கிறார். இரவுக் காவல் காப்பது அவ்வளவு எளிதானதா என்ன? திருடன் வீட்டுக்குள் புகுந்துவிடாமல் காப்பாற்றுவதுதான் இரவுக் காவலாளிகளின் வேலை. மன்மோகன்சிங்கோ பகலிலேயே வெளிநாட்டுக்காரர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு, 'சலாம் சாப்’ சொல்பவர். வேண்டுமானால் தமிழில் 'இலவு காத்த கிளி' என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதன் அடிப்படையில் மன்மோகன்சிங்கை 'இலவு காவலாளி’ என்று மாற்றி அழைக்க, பொன்.ராதாகிருஷ்ணனோ, இல.கணேசனோ அறிவுறுத்தலாம்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

'இளைஞர் எழுச்சி நாளை’ முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இளைஞன்’ படத்தைப் பார்த்த பாக்கியசாலிகள் யாரோ தெரியவில்லை. எப்படியோ, தளபதி ஸ்டாலின் சார், 60 வயசு ஆனதுக்குச் சந்தோஷப்பட்டீங்களா, இல்லை, 'இளைஞர் அணித் தலைவருக்கு இவ்ளோ வயசாயிடுச்சே?’னு வருத்தப்பட்டீங்களா? ஆனாலும் உங்களுக்கு 60 வயசு ஆகிறதை, 'இளைஞர் எழுச்சி நாள்’ எனக் கொண்டாடுறது உங்களுக்கே கொஞ் சம் ஓவராத் தெரியலை? ரொம்பத்தான் குறும்பு!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அ.தி.மு.க-வில் யார் பெயரிலாவது அறிக்கை வந்து பார்த்திருக்கிறீர்களா? ஒன்லி ஜெயலலிதா பெயரில்தான் அறிக்கை வரும். தி.மு.க-வில் போன ஆட்சிக் காலத்தில் ஆற்காடு வீராசாமி பெயரிலோ, அன்பழகன் பெயரிலோ அறிக்கை வரும். ஆனால், அதுவும் 'அவர்களுக்கே பேப்பரில் பார்த்துத்தான் தங்கள் பெயரில் அறிக்கை வருவதே தெரியும்’ என்பார்கள். இப்போது 'காவிரி நீரைப் பெற்றுத் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி', 'இலங்கைப் பிரச்னை தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதிய முதல்வருக்கு நன்றி’, 'மலிவு விலை உணவகத்தில் மலிவாகச் சாம்பார் சாதம் போட்ட முதல்வருக்கு நன்றி’ என்றெல்லாம் தா.பாண்டியன் பெயரில் வாரத்துக்கு மூன்று அறிக்கைகள் வெளியாகின்றன. கொஞ்சம் காதைக் கொண்டாங்க, இதுவும் தா.பாண்டியன் 'பெயரில்’ வரும் அறிக்கை தானா?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

பாவம், இந்த ராமதாஸும் சாதிக் கட்சித் தலைவர்களை செட்டு சேர்த்துக்கிட்டு (''பெரிய சேவிங் செட்டு'' - நன்றி : கவுண்டமணி) ஊர் ஊராகப் போய், 'காதல் நாடகத்தை எதிர்க்கிறோம்’னு தொண்டைத் தண்ணி வத்தக் கத்துறாரு. அவரோட சேர்ந்து வர்ற சாதிக் கட்சித் தலைவர்களைப் பக்கத்துத் தெருவுல இருக்கிறவங்களுக்கே தெரியாது. எனக்கு ஒரு ஐடியா. ஜனனி ஐயர், நித்யா மேனன், சமீரா ரெட்டி, அனுஷ்கா ஷெட்டி, நவ்யா நாயர்னு பேருக்குப் பின்னாடி சாதிப் பேரைப் போட்டிருக்கிற நடிகைங்களோட கூட்டணி வெச்சுக்கிட்டு, ராமதாஸ் ஊர் ஊரா மீட்டிங் போடலாமே. கூட்ட மும் ச்சும்மா கலகலன்னு கூடுமே!