Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு

ஆஃப் த ரெக்கார்டு

• டாப்பான நடிகை சுள்ளான் நடிக்கும் நக்கல் படத்தில் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டாராம். காரணம் மன்மத நடிகரோடு சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கம்தான்!

• மேடம் சேனலில் படம் விற்கச் சென்றால், அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார்களாம். இன்னொரு பக்கம் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்க, லட்சக்கணக்கில் பணம் கேட்கப்படுவதால், புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள்!

ஆஃப் த ரெக்கார்டு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• நம்பர் பட ஷூட்டிங்குக்காக ஒரே அறையில் தங்கினோம் என்று பேட்டி கொடுத்து பரபரப்புப் பட்டாசு கொளுத்திய மங்கள நடிகையும் நடிகரும் செம லவ்வில் இருக்கிறார்களாம். வினயம்தான்!

• மன்மத நடிகர் பண விஷயத்தில் செம உஷார். அப்பா தொடங்கிய ஒன்சைடு லவ் படம் நிறுத்தப்பட்டதற்குக் காரணமே மகன்தானாம். 'அவரோட படம் இந்தக் காலத்துக்கு வொர்க்-அவுட் ஆகாது. பைசா கொடுக்காதீங்க’ என்று அம்மாவை எச்சரித்ததுதான் படம் நின்றதுக்குக் காரணமாம்!

• அலைகள் நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் அவருடன் பாடிகார்டாக பின்னாலேயே தளபதி போல வலம் வந்தவர் ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர். தலைவரின் பணத்தில் சில கோடிகளை மாஸ்டர் லபக் செய்துவிட்டாராம். அவரின் பெயரைச் சொன்னாலே, கடுப்பாகிறார் சினிமா தலைவர்!

• வெற்றி நடிகர், உயிர் நடிகர் இருவரையும் வைத்து கம்யூனிஸ்ட் இயக்குநர் படம் இயக்குவதாக இருந்தார். ஆனால், இரண்டு நடிகர்களின் படங்களும் அடுத்தடுத்து ஃப்ளாப் ஆவதால், தயாரிப்புத் தரப்பில் ரொம்பவே யோசிக்கிறார்களாம்!