Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

##~##

ஓ.கே... ஆரம்பத்திலேயே, 'Facebook Creditsம் பார்த்துவிடுவோம்...

 நட்பு வட்டங்கள் அளவளாவும் ஃபேஸ் புக்கை ஒரு மைதானத்துக்கு உருவகமாகக் கொள்ளலாம். பரந்து, விரிந்துகிடக்கும் இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் கால்பந்து விளையாடலாம்; மற்றொருபுறம், கபடி ஆடலாம். பயனீட்டாளர் ஆன நீங்கள் பார்வையாளராகவும் இருக்கலாம்; விருப்பம் இருந்தால் இறங்கி வந்து ஏதாவது ஓர் ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம். இந்த ஆட்டங்களை நடத்தும் நிறுவனங்கள், அந்த ஆட்டத்தில் விளையாடும் விதிகளையும், விளையாட அனுமதிக் கட்டணங்களையும் வரையறுத்து வசூலித்துக்கொள்ளலாம். (இப்படி ஒரு விளையாட்டு நிறுவனமான Zynga-வின் புகழ்பெற்ற Farmville பற்றி தெரியாதவர்கள் இணைய உலகில் மிக அரிது!) இந்த விளையாட்டுகளில் தேவைப்படும் நிழல் பொருட்களை (Virtual Goods ) வாங்கவும், விற்கவும் தமக்கே ஆன நிழல் கரன்சியைப் பயன்படுத்துகின்றன இந்த நிறுவனங்கள். உதாரணத்துக்கு, Zynga-வின் போக்கர் விளையாட்டில் சிப்கள் கரன்சி. இந்த நிழல் கரன்சிகளை நிஜ கரன்சிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால், பல்வேறு விளையாட்டு நிறுவனங்கள் தங்களுக்கே உரிய கரன்சியைப் பயன்படுத்தாமல், தனது நிழல் கரன்சியான 'Facebook Credits’-ஐ மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவித்து இருக்கிறது ஃபேஸ்புக். இதன் மூலம், ஃபேஸ்புக் சார்ந்த பொருளாதார உலகமே விரைவில் உருவாகப்போவது உறுதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வருங்காலத் தொழில்நுட்பம்

பக்கத்துத் தெரு Safeway பலசரக்குக் கடை யில் பொருட்கள் வாங்கிவிட்டு கேஷ் கவுன்ட்டரில் நின்றபோது அவரது மானிட்டரில் வெளியான விளம்பரம் 'ஃபேஸ்புக் கிரெடிட்டை வாங்கி விளையாடுங்கள்’ என்றது. பால், தயிர், தக்காளி இத்யாதி மளிகைப் பொருட்களை வாங்கி ஃபேஸ்புக் கிரெடிட் மூலம் அதற்குப் பணம் கொடுக்கும் நாள் தூரத்தில் இல்லை!

வருங்காலத் தொழில்நுட்பம்

இன்னொரு முக்கியமான விஷயம்... டி.வி-க்குள் இணையத்தையும், இணையத்துக்குள் டி.வி-யையும் எப்படிக் கொண்டுசெல்லலாம் என்ற பிரமாண்ட ஐடியாக்கள் நல்லதுதான்; அதே நேரத்தில் அன்றாட வாழ்வில் புதுமையாக எதையாவது செய்யும் ஜி.டி.நாயுடு டைப் மக்களுக்குச் சேவை புரிய இணையதளம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

குயிர்க்கி (உரலி: http://www.quirky,com/)என்ற இந்த வலைதளம் புதுமையான ஐடியாக்களை உருவாக்குபவர்களையும், அந்த ஐடியாக்களை பிராக்டிகலாக வடிவமைப்பவர்களையும், தொழில் முதலீட்டாளர்களையும், புதுமையான வற்றை வாங்கிப் பயன்படுத்த விருப்பம் உள்ள வர்களையும் ஒன்றிணைக்கிறது. இதன் பிசினஸ் மாடல் இதில் பங்கு பெறும் அனைவருக்கும் நன்மை கொண்டுவருவது. எப்படி?

புதுமைக்கான ஐடியாக்கள் பொங்கி வழிந்தபடி இருக்கிறதா? பயணம் செய்யும் பேருந்து இருக்கையில் இருந்து, படுத்து உறங்கும் பாய் வரை, லேசான மாற்றங்கள் செய்தால் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படுமே என்ற எண்ணம் தோன்றுகிறதா? ஆம் என்றால், நீங்கள் ஒரு புதுமைப்பித்தர். உங்களது ஐடியாக்கள் அட்டகாசமான வைதான். ஆனால், அதை implement செய்ய டிசைனர்கள், முதலீட்டாளர்கள், பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தேவை. இந்த புதுமைப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதும், நுகர்வோர்கள் வாங்குவார்களா என்பதை முன்னறிந்துகொள்ளும் சந்தை அலசல் தேவை. இந்த 'தேவை’களை நிறைவேற்ற முடியவில்லை என்றால், உங்களது புதுமை ஐடியா அளவிலேயே மறைந்துவிடும்.

குயிர்க்கி மேற்கண்ட அனைவரையும் ஒரே தளத்தில் இணைக்கிறது. உங்களது ஐடியாவை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அது குயிர்க்கி ஆர்வலர்களால் பார்க்கப்படும். அது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தால், டிசைனர்கள் சிலர் அதை மெருகுஏற்றுவார்கள். மெருகேற்றப்பட்ட ஐடியா மாடலாக மாற்றப்பட்டு, தயாரிக்கப்பட்டு நேரடியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் விற்கப்பட்டு, உங்களது ராயல்டி பணம் வழங்கப்படும். http://www.quirky.com/learn வலைப்பக்கம் இதை எளிமையாக விஷுவலில் காட்டுகிறது.

வருங்காலத் தொழில்நுட்பம்

இப்படி பலரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதில் விருப்பம் இல்லையா? கவலை வேண்டாம். Tongue Cleaner என்ற ஒரு பொருளை மட்டும் விற்கும் OraBrush.com போல நீங்களே எல்லாவற்றையும் செய்துகொள்ளலாம். காமெடியாக இருப்பதைப்போலத் தோன்றும் இந்த வலைதள நிறுவனம், சமூக ஊடகத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி பெருவெற்றி காண முடியும் என்பதற்கு நல்ல உதாரணம். அதைப்பற்றி விளக்கமாக, அடுத்த வாரத்தில் பார்க்கலாம்!

LOG OFF