Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'விஷ்ணு’ படம் பார்த்திருக்கிறீர்களா? இளைய தளபதி விஜயும், விஜய் இளைய தளபதி ஆவதற்குக் காரணமாக இருந்த சங்கவியும் இணைந்து நடித்த ஆரம்பகாலப் படம். விஜயின் ஆரம்பகாலப் படங்களில் மூன்று விஷயங்கள் முக்கியமாக இருக்கும். சங்கவி, கில்மா பாடல்கள், 'இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்’. அது இருக்கட்டும். ஜாக்கிசான், சல்மான்கான், ஜெட்லீ, இட்லி என்று பல படங்களில் பல ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் 'விஷ்ணு’ படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சியைப் போல எந்த உலக சினிமாவிலும் பார்த்ததில்லை.

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

விஜய்யும் சங்கவியும் ஊட்டியில் இருக்கும்போது, அங்கு ஒரு புரோட்டா கடை இருக்கும். 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா, தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா’ என்ற தத்துவப் பாடலை விஜய் பாடுவார். யெஸ், 'இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர்...: என்று கீழே எழுத்து ஓடும். ஆடி முடித்த களைப்பில் விஜய் இருக்கும்போது, சங்கவி ''பசிக்கிறது'' என்பார். விஜயும் காசு கொடுத்து ஒரு புரோட்டாவை வாங்கிவிடுவார். அப்போது அங்கே ரவுடிகள் கூட்டம் ஒரு வாகனத்தில் வந்து இறங்கும். அவர்கள் புரோட்டா கடைக்காரரிடம் புரோட்டா கேட்க, ''ஒரு புரோட்டாதான் இருந்தது. அதை விஜயிடம் கொடுத்துவிட்டோம்'' என்று சொல்வார் கடைக்காரர். அவர்கள் வந்து விஜய்யிடம் வம்பிழுக்க, ஒரு ஸ்டூலில் புரோட்டாவை வைத்து, ''தைரியமான ஆளா இருந்தா புரோட்டாவை எடுத்துப் பார்'' என்பார் விஜய். அப்புறம் என்ன மூன்று ரூபாய் புரோட்டாவுக்காகச் சண்டை போட்டு தள்ளுவண்டி, கார் கண்ணாடி என்று 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை உடைத்துத்தள்ளுவார்கள். இப்போது சொல்லுங்கள், ஒரு புரோட்டாவுக்காகச் சண்டை போட்ட காட்சி உலக சினிமாக்களில் எங்காவது உண்டா?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

''காங்கிரஸ் கட்சி மீது மட்டும் அல்ல, பாரதிய ஜனதா மீதும் மக்கள் அதிருப்தியோடு இருக்கிறார்கள்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார் அத்வானி. 'வயசாகிப்போச்சு, இனிமே கட்சியில் முக்கியப் பொறுப்பு எதுவும் கிடைக்காது’ என்று தெரிந்ததும் உண்மையைப் பேச ஆரம்பித்திருக்கிறார். அதுக்காகக் கடப்பாறையைக் கட்சிக்குள்ளேயேவா செருகுவது?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

டி.என்.பி.எஸ்.சி-க்குப் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன். 'ரொம்ப்ப்ப நல்லவர்’ என்று சொல்லப்பட்ட முன்னாள் தலைவர் டி.ஜி.பி நட்ராஜ் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அது இருக்கட்டும். இந்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனின் வழக்கைத் திறம் பட நடத்தும் 'சாமர்த்தியத்தால்’தான் பல வழக்குகளில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தோற்றது. எம்.ஜி.ஆர். சமாதியில் இருப்பது இரட்டை இலை அல்ல, குதிரையோட ரெக்கை என்ற வரலாற்றுப் புகழ்வாய்ந்த வாதத்துக்குச் சொந்தக்காரரே இந்த நவநீதகிருஷ்ணன்தான். அப்போ டி.என்.பி.எஸ்.சி. கொஸ்டீன் பேப்பர்ஸ் எப்படி இருக் கும்?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அரசு சேவையை மக்கள் பெறுவதில் காலக்கெடு நிர்ணயம் செய்து சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது மத்திய அரசு. அதாவது நீங்கள் சாதிச் சான்றிதழ் வாங்க தாசில்தார் ஆபீஸ் போகிறீர்கள் என்றால், எப்போது அது உங்கள் கைக்கு வந்து சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. 'நாளைக்கு வாங்க’ என்பதுதானே அரசு அலுவலங்களில் ஃபேவரைட் வசனம். ஆனால், இனிமேல் அப்படிச் சொல்ல முடியாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய சான்றிதழைக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் இந்தச் சட்டத்தின்படி அதிகாரிகள் அபராதம் கட்ட வேண்டியிருக் கும். 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாம். ஆனா எனக்கு வழக்கம்போல ஒரு டவுட். தெலுங்கானா பிரச்னை, ஈழத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, லோக்பால் மசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதான்னு பல பிரச்னைகளில் தா.....மதத்தைச் செய்துகொண்டே இருக்கும் மத்திய அரசுக்கு என்ன அபராதம்?