Published:Updated:

கல்லறை மனிதன்!

கல்லறை மனிதன்!

செர்பியாவில் வசிக்கும் பிரட்டிஸ்லாவ் என்ற 40 வயது மனிதருக்கு 'கல்லறை மனிதன்’ என்ற பெயரும் உண்டு. கடந்த 15 வருடங்களாக கல்லறையிலேயே தங்கி இருப்பதுதான் காரணம். மோசமான பொருளாதார நிலையில் உள்ள செர்பியாவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிஸ் என்ற இடமும் ஒன்று. அங்கே, தான் குடி இருந்த வீட்டை 15 வருடங்களுக்கு முன்பு தீயின் கோரப்பசிக்கு பலி கொடுத்ததில் இருந்து பிரட்டிஸ்லாவ் தங்குவது 'மூன்றுக்கு மூன்று' என்று இருக்கிற இந்தப் பழைய பாழடைந்த கல்லறையில்தான். இவருக்குக் கிடைத்த இந்தக் கல்லறைகூட செர்பியாவில் இரண்டு லட்சம் பேருக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அவலமானது.

கல்லறை மனிதன்!

முதலில் கல்லறைத் தோட்டத்தின் வெளிப்புறத்தில் மட்டும் தங்கியவர் குளிர்காலத்தின்போது, முதலில் பயமாக இருந்தாலும் பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கல்லறைக்குள் இறங்கித் தங்கிவிட்டார். கல்லறைக்குள் இருப்பவர்கள், கல்லறைக்கு வெளியில் இருப்பவர்களைவிட நல்லவர்கள் என்பதை இவர் உணரத்தொடங்கியதை அடுத்து, கல்லறையையே தன் இருப்பிடமாக்கிவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கல்லறையை ஒட்டி இருக்கிற தேவாலயத்துக்கு வருகிறவர்கள் தரும் காசை வைத்துக் காலத்தை ஓட்டுகிறார் மனிதர்.

அந்திமக் காலத்தில் 'அந்த நாலு பேருக்கு நன்றி' பாட்டு கூட இவருக்குத் தேவைப்படாது என்பது எவ்வளவு வசதி பாருங்கள்!

- சீலன்