Published:Updated:

நல்லா எழுதுவாய்ங்கய்யா எக்ஸாமு!

நல்லா எழுதுவாய்ங்கய்யா எக்ஸாமு!

து ப்ளஸ் டூ தேர்வு நேரம். காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மட்டும் இல்லை... பரீட்சை ஹாலும் பரீட்சை நேரமும்கூட  நம்ம மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கவைக்கும். 'என்னென்ன காமெடி அனுபவங்களை எக்ஸாம் விஷயத்துல பார்த்திருக்கீங்க?’னு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்கிட்ட கேட்டேன். மளமளன்னு கொட்டியது மதுரைப் பேச்சு.

''சில பேரு இருக்கான்... கோயிலுக்குப் பொங்கல் திங்கக்கூட போக மாட்டாய்ங்கே. ஆனா, பரீட்சை ஹால்ல உக்காந்து முக்கா மணி நேரம் சாமி கும்பிடுவாய்ங்கே. சாமி பாஸ் ஆக்கிடும்னு நம்பிக்கை.

நல்லா எழுதுவாய்ங்கய்யா எக்ஸாமு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பார்த்து எழுதுறதுலகூட வரைமுறை வெச்சுக்க மாட்டாய்ங்க சில பேரு. இங்கிட்டு திரும்பி ஒருத்தனைப் பார்த்து எழுதுவான். அங்கிட்டுத் திரும்பி இன்னொருத்தனைப் பார்த்து எழுதுவான். இப்படி சுத்திச்சுத்தி என்ன எழுதுறோம்னுகூட தெரியாம, பதட்டத்துல கண்டதையும் எழுதிவெச்சி ஃபெயிலாப் போயிருவாய்ங்கே.

பொதுவா பிட்டு அடிக்கிறவய்ங்கள்லேயே ரெண்டு குரூப் இருக்காய்ங்க. பஞ்சத்துக்குப் பிட்டு அடிக்கிறவய்ங்க, பாரம்பரியமா பிட் அடிக்கிறவய்ங்க. சூப்பர்வைஸரைப் பார்த்த தும் பாரம்பரிய பிட்டுக்காரன் கணிச்சிருவான். கேப் பார்த்து, அளவா அடிப்பான். அது மேட்டரு. 12.45-க்கு பிட் அடிச்சா, ஒரு அர்த்தம் இருக்கும். ஆனா, 10.10-க்கே பிட்டை எடுத்து எழுத

நல்லா எழுதுவாய்ங்கய்யா எக்ஸாமு!

ஆரம்பிச்சிருவான் பஞ்சத்துக்கு அடிக்கிறவன். இன்னும் சிலபேரு பாலைவனத்துல பரீட்சை எழுத வந்தவன் மாதிரி 10 நிமிஷத்துக்கு ஒருவாட்டி தண்ணி குடிக்கப் போவாய்ங்கே. அது ஒரு ஃபோபியா. ஒருத்தன் எந்திரிச்சுப்போனதும் அப்படியே அம்புட்டுப் பயலுகளும் போயிட்டு வருவாய்ங்கே. அப்புறம் பரீட்சை எழுதி முடிச்சுட்டு கூடிப்பேசுற க்ரூப்பு இருக்கான் பாருங்க, செம ஆபத்தான பயலுக. ஒண்ணும் தெரியாட் டியும் கொழப்பிவிட்ருவான். 'இதுக்கு இதுவா எழுதுனே... போச்சு அவுட்டு’னு சொல்லி பூராப் பயலையும் டவுசரைக் கிழியவெச்சிருவாய்ங்கே.

எக்ஸாம் ஹால்லயே இம்புட்டு அலும்பு பண்றாய்ங்கன்னா, பேப்பர்ல என்ன எழுதி இருப்பாய்ங்கனு சொல்லவா வேணும்?

மர்மக் கதை மாதிரி இந்தக் கேள்விக்கான பதில் 13-ம் பக்கம் பார்க்கனு அம்புக்குறி போட்டு நம்ம¬ளையும் மூணாம் பக்கத்துல இருந்து 13-ம் பக்கம் கூட்டிட்டுப் போவான். காதுல கேட்டதை வச்சு எழுதிப் படுத்திடுவான் ஒருத்தன். 'பாண்டியன் இமயத்தில் மீன் பொரித்தான்’னு முனியாண்டி விலாஸ் மேட்டரை எல்லாம் இங்கே கொண்டுவருவான். இது எப்படி இருக்கு? என்ன சொல்லுங்க... நம்ம பயலுகளுக்கு நீச்சல் பழகிக்கொடுக்குற மாதிரி தேர்வு எழுதும் முறைக்கும் பயிற்சி கொடுக்கணும்... இல்லாட்டி என்னெல்லாம் பண்ணுவாய்ங்களோ?''

- ஆர்.சரண்