Published:Updated:

இறுக்கி அணைக்காம ஒரு உம்மா கொடு!

இறுக்கி அணைக்காம ஒரு உம்மா கொடு!

வ்வொரு முறையும் இணையத்தில் புதுப்புது கவர்ச்சிப் படங்களை அப்டேட் செய்து, இளைஞர்களை சூடேத்துவதுதான் பாலிவுட் பப்ளிகுட்டி பாப்பா வீணா மாலிக் என்கிற வீணாப்போன மாலிக்கின் தலையாய கடமை.

ஒவ்வொரு புகைப்படத்திலும்  வித்தியாசம்(?!) காட்டும் இவர்,  தன்னுடைய 29-வது பிறந்தநாளை எப்படி வித்தியாசமாகக் 'கொண்டாடப்போகிறார்’ என்று வீணாவின் ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. (இத்தனைக்கும் 'பர்த் டே டிரஸ்', அதாவது பிறக்கும்போது இருந்த டிரஸ்ஸோடு(?!) பலமுறை போஸ் கொடுத்திருக்கிறார்).

இறுக்கி அணைக்காம ஒரு உம்மா கொடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2011-ம் ஆண்டு 'கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் - ஆஃப் இந்தியா தோட்ஹா’ என்ற டி.வி. ரியாலிட்டி ஷோவில் ஒரு நிமிடத்தில்  சல்மான்கானுக்கு  108 குழந்தைகள் கையில் முத்தமிட்டதுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. ஆனால், சல்மான்கானை முந்த வேண்டும் என்று 137 இளைஞர்களை ஒரே ஒரு நிமிடத்தில் முத்தம் கொடுக்கவைத்து சல்மானின் சாதனையை முறியடித்தார் வீணா மாலிக்.  

இறுக்கி அணைக்காம ஒரு உம்மா கொடு!

இதற்காகவே வீணா மாலிக்கின் 137 அதிதீவிர ரசிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்குத் தலைக்கு ஒரு டோக்கனும் வழங்கப்பட்டது. இதுவரை வீணா மாலிக்கின் புகைப்படத்தைப் பார்த்து மட்டுமே ஏங்கிக்கிடந்த 137 பேரும், ஏதோ ஒலிம்பிக்கில் மெடல் வாங்கப்போவதைப்போல 'சாதனை’க்கான நேரத்தை ரொம்பவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காய்ந்துகிடந்தவர்களின் முன்னே தன்னுடைய புறங்கையை நீட்டி ''முத்தமிடுங்கள்'' என்று வீணா மாலிக் சொன்னதும், பார்க்க வேண்டுமே பக்கிங்க முகத்தில் அத்தனை ஏமாற்றம்! ஆனாலும் 'காய்ஞ்ச மாட்டுக்குக் கம்பங்கொல்லை கிடைக்காட்டியும் கடலை உருண்டையாவது கிடைக்கிறதே’ என்று எகிறியடித்து எல்லோரும் ஒரு நிமிடத்தில் வீணா மாலிக் கையைக் கடலாக்கினர் தங்களுடைய எச்சிலினால்.

இந்தக் கூத்து முடிந்ததும், ''இது என்னுடைய உலக சாதனைக்கான தொடக்கம்தான். இன்னும் பலவிதமான 19 கின்னஸ் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியுள்ளது'' என்று வீணா மாலிக் சொன்னதும் 137 பேரும் இடத்தைவிட்டு  நகராமல் அடுத்த சாதனை எப்படியும் 'நல்லபடியாகவே' அமையும் என்று அதே இடத்திலே காத்துக்கிடந்தார்கள்.

அட பயபுள்ளைகளா, வீட்ல ரேஷன் கடைக்குப் போய் கியூவில நிக்கச் சொன்னா, நிக்க மாட்டீங்களே!

- க.பிரபாகரன்