Published:Updated:

கல்யாணம் ஆகணும்னா கண்டிஷன்ஸ் அப்ளை!

கல்யாணம் ஆகணும்னா கண்டிஷன்ஸ் அப்ளை!

கல்யாணம் ஆகணும்னா கண்டிஷன்ஸ் அப்ளை!

கல்யாணம் ஆகணும்னா கண்டிஷன்ஸ் அப்ளை!

Published:Updated:

ன் முயற்சியில் சற்றும் தளராத ச்சீயான்... சாரி.... விக்ரமாதித்யன், வேதாளத்தைச் சுமந்தபடி நடந்தான். நம் தாத்தாக்கள் சின்னப்புள்ளையா இருந்த காலத்தில் இருந்து வேதாளம் என்ன கண்டிஷன் போடுமோ, அதே கண்டிஷனைப் போட்டது. அதாகப்பட்டது, 'நான் ஒரு கதை சொல்வேன். சொன்ன பின் கேள்வி ஒன்றும் கேட்பேன். சரியான பதில் தெரிந்தும் நீ சொல்லாவிட்டால், உன் மண்டை வெடித்துவிடும். நீ சொல்லிவிட்டால், நான் ஜூட் விட்டுருவேன்’ என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தது.

 'ராஜா ஒரு பிக்பாக்கெட் திருடன். அவன் திருடாத பொருளே இந்த உலகத்தில் கிடையாது. குண்டூசியில் இருந்து குதிரை வண்டி வரை எதையும் திருடுவான். இப்பேர்ப்பட்ட ராஜாவின் இதயத்தையே திருடிவிட்டாள் ஒரு யுவதி. அவள் பெயர் சுமதி.

கல்யாணம் ஆகணும்னா கண்டிஷன்ஸ் அப்ளை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள் ராஜா ''சுமதி. நான் இதுவரை திருட்டுத் தொழிலை செய்து வந்தேன். என்னை மன்னித்துவிடு. ஆனால், உன்னைச் சந்தித்த நாளிலிருந்து அதை விட்டுவிட்டேன்'' என்றான். கொஞ்சம் ஷாக்கானாலும் சுமதி அவனைப் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தாள். ''ஆனா, ஒரு கண்டிஷன். இன்னும் ஒரு வாரத்தில் உழைத்து 2,000 ரூபாய் சம்பாதித்து வரவேண்டும். குறிப்பாக யாரிடமும் கடன், கைமாத்து வாங்கக் கூடாது. அப்பதான் நம்ம திருமணம் நடக்கும். இல்லாட்டி நான் யாரோ... நீங்க யாரோ... இதுல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அடுத்த கண்டிஷன். நம் திருமணம் நடந்தால், மூணு குழந்தைகளையாவது பெத்துக்கணும். ஏன்னா எனக்கு குழந்தைங்கன்னா உசிரு’' என்று சொல்ல, ''டபுள் ஓ.கே.'' என்றபடி சிங்கமெனக் கிளம்பினான் ராஜா.

காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிவரை மாங்கு மாங்கு என்று பல வேலைகள் செய்தான். நாலு நாட்களில் 1,500 ரூபாய் சேர்ந்துவிட்டது. ஐந்தாவது நாள் வைரல் ஜுரம் வந்து எழுந்திருக்கவே முடியவில்லை. டாகடரிடம் போய் வந்ததில் மருந்து மாத்திரை எல்லாம் சேர்ந்து 300 ரூபாய் செலவாகிவிட்டது. ஆறாவது நாள் கஷ்டப்பட்டு 500 ரூபாய் சம்பாதித்துவிட்டான். இன்னும் 300 ரூபாய்தான். ஜுஜுபி, அரை நாளில் சம்பாதித்துவிடலாம்.

மறு நாள் எழுந்து கடைத்தெருவுக்குப் போனால் ஒரு கடையும் திறக்கவில்லை. ''என்ன ராஜா, விஷயம் தெரியாதா? பந்த் இன்னிக்கு''  கலங்கிப்போனான் ராஜா. மீதிப் பணத்துக்கு என்ன செய்வது?

கல்யாணம் ஆகணும்னா கண்டிஷன்ஸ் அப்ளை!

மதியம் 12 மணி வரை அடித்துப் போட்டாற்போல தூங்கினான். 6 நாள் அசதி. மதியம் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். சாப்பிட்டுவிட்டு மெஸ்ஸுக்கு வெளியே வந்து தம்மடிக்கும்போது அவன் கண்ணில் பட்டது அந்த நியான் போர்டு. 'குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டால், உடனடியாக ரூ 1,000 மற்றும் இலவசப் பொருட்கள். அணுகவும் 44, பஜார் தெரு, வடபழனி.'

சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்த்துவிட்டு உடனே கிளம்பினான். 'எப்படியும் சுமதி இல்லாமல் வாழ முடியாது. எனவே ஆபத்துக்குப் பாவமில்லை' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவன், மறுநாள் 2,000 ரூபாயுடன் சுமதியைச் சந்தித்தான். அடுத்த வாரம் டும்டும்டும்!

முதல் இரவு. 'சுமதி என்னை மன்னித்துவிடு. ஒரு நாள் பந்த் வந்துவிட்டதால்... அன்னிக்கு ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியலை. அதனால உன் கண்டிஷனை மீறிட்டேன்''  என்று நடந்ததைச் சொன்னான். சுமதி கத்தி கலாட்டா செய்து ரகளை செய்தாள். ''யூ 420 ... என்னோட வாழ்க்கையையே பாழாக்கிட்டியே. டோன்ட் டச் மீ'' என்று அழுதாள். ஆனால், பின்னிரவில் ராஜாவை ஒரு வளைக்கரம் அணைத்தது. சுமதிதான். ''பரவாயில்லைடா. எனக்காகத்தானே அதை செஞ்சே... மன்னிக்கிறேன். ஆனா, இனிமே என்னை ஏமாத்தக் கூடாது’' என்ற அவளை இழுத்து அணைத்தான் ராஜா.

இந்தக் கதையை மூச்சுவிடாமல் சொன்ன வேதாளம், ''விக்கி இப்ப சொல்லு. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டு சுமதியின் நிபந்தனையை மீறிவிட்டு அவள் வாழ்க்கையைப் பாழாக்கின ராஜாவை எப்படி மன்னித்தாள் அவள்?''

ரெண்டு மூணு சிகரெட்டை இழுத்து முடித்த பிறகு, விக்கிரமாதித்யன் சொன்னான்: ' வேதா.... ராஜா கு.க. ஆபரேஷன் செய்துகொண்டான்னு எந்தக் கூறுகெட்டவன் சொன்னான்? அவன் எதை வேண்டுமானாலும் திருடி நிமிஷத்தில் காசாக்குவான்னு ஆரம்பத்துலயே சொன்னியே... அதை நான் மறப்பேனா? அவன் மீறின கண்டிஷன் எது தெரியுமா? கு.க. விளம்பரப் பலகையைத் திருடி எடுத்துப்போய் 300 ரூபாவுக்கு விற்றுவிட்டான். அவ்வளவுதான்'' என்றான்.

சரியான பதிலால் விக்கிரமனின் மௌனம் கலைந்ததால் வேதாளம்  டாட்டா சொல்லிவிட்டு 'முனி-3’ ஷூட்டிங் பார்க்கப் பறந்தது!

 ஆர்.ஆர்.தமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism