தமிழகம் எங்கும் மதுக் கலாச்சாரத்தால் உடலும் உள்ளமும் நைந்து, சமூகத்தின் கேலிக்கு ஆளாகிப் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி அடைந்து சின்னாபின்னமாகியிருக்கிற குடி அடிமைகளின்மீது உள்ளார்ந்த பரிவு காட்டி, அவர்களை மீட்டு எடுக்கும் வழிகளை ஆராய்கிறார் நூலாசிரியர் டி.எல்.சஞ்சீவிகுமார். குடியைப் புதிதாகக் கற்றுக்கொண்ட ஒரு தலைமுறைக்கு அதை விட்டொழிக்கத் தீர்வுகளும் இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

உலகிலேயே ஒரு குடும்ப நோய் எது என்றால் அது குடிநோய் மட்டுமே. அதையும் தாண்டி அது ஒரு சமூக நோய் என்பதைப் புரியவைத்திருக்கிறார் நூலாசிரியர். , குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வழிமுறைகளை விவரித்து இருப்பது அருமை.

மது மீட்பு விஷயத்தில் படிப்படியாகப் பல்வேறு சிகிச்சை முறைகள் உண்டு. அவைகளில் ஹோலிஸ்டிக் ஹெல்த், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் தெரபி, காக்நெட்டிவ் தெரபி ஆகிய மதுமீட்புச் சிகிச்சைகள் நம்பிக்கை அளிப்பனவாக இருக்கின்றன.

உதாரணத்துக்கு காக்நெட்டிவ் தெரபி பற்றி...

பொதுவாகவே, டைரி எழுதுவது என்பது நெஞ்சில் ஊறிய நினைவுகளை நினைத்துப் பார்த்து நம்மை நாமே செதுக்கிக்கொள்ளும் ஓர் அற்புதக் கலை. பழைய நினைவுகளைப் படிக்கும்போது நல்லதை நினைத்து உற்சாகமும், வேதனையை நினைத்து மனம் வெம்புவதையும் உணர முடியும். அதைப் போன்றதுதான் காக்நெட்டிவ் தெரபி.

குடி நோயாளிகளைத் தினமும் குடிப்பதற்குத் தூண்டிய சூழல், செயல், நிலை, எண்ண ஓட்டங்கள், ஆழ்மனதில் குடியைப் பற்றிய அலசல் என அன்றைய தினம் நடந்தவற்றை வீட்டுப் பாடம்போல் டைரியில் எழுதவேண்டும். ஒவ்வொரு விஷயமாக அலசும்போதுதான், 'குடிக்கத்தான் வேண்டுமா? குடிக்காமலும் இருக்க முடியும்’ என்பது தெளிவாகப் புலப்படும். இதனால் குடிக்கும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியும்படியாக இருக்கும். இது குடியைத் தவிர்ப்பதற்கான நல்லதொரு வழி என்கிறார் நூலாசிரியர் சஞ்சீவிகுமார்.

டாஸ்மாக் மது விற்பனையில் இருக்கும் அரசியல் குளறுபடிகளையும் நூல் விரிவாக அலசுகிறது. குடிநோயாளிகளை வைத்துக் காசு பார்க்கும் அங்கீகாரம் இல்லாத போலி மதுமீட்பு சிகிச்சை மையங்கள் புற்றீசலாய்ப் பெருகிவிட்டதையும், அதனால் நிலைகுலையும் குடும்பங்களைப் பற்றி அக்கறையுடன் அலசி இருக்கிறார்.

மதுவுக்கு அடிமையாகி, கட்டிய மனைவியைக் கலங்கடித்து, முற்றிய குடி போதையில் நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையான பல குடும்பங்களின் பேட்டிகள், போதையால் குடும்பத் தலைவரை இழந்து பிள்ளைகளோடு தவிக்கும் பரிதாபப் பெண்களின் கண்ணீர் அனுபவங்கள், மதுவிலிருந்து மீண்டவர்களின் வெற்றிக் கதைகள் என மதுவில் இருந்து மீளத் துடிக்கும் மனிதர்களுக்கும், மீட்டு எடுக்க விரும்பும் குடும்பத்தாருக்கும் 'மயக்கம் என்ன?’ புத்தகம் ஓர் அற்புத வழிகாட்டி!