யட்சன்
##~##

ற்றுத் தடுமாறிவிட்டு, பாரி சுதாரித்தான். 'இந்தக் கைலேர்ந்து அந்தக் கைக்கு மாத்தற தொழில்... கமிஷன் பிசினஸ்' என்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தேவி அடுத்த கேள்வி கேட்பதற்குள், மெக்கானிக் கடை வந்துவிட்டது.

'மணீ...' என்று அழைத்தாள்.

பெட்ரோலில் மோட்டார்சைக்கிள் செயினைக் கழுவிக்கொண்டு இருந்த 40 வயது மணி, க்ரீஸ் பனியனும் காக்கி டிராயருமாக எழுந்து வந்தார்.

'என்னாச்சி கண்ணு?'

'ஆட்டோக்காரன் மோதிட்டான்.'

'த்சு... த்சு... டெய்ல் லேம்ப் காலி... சைடெல்லாம் அடி வாங்கிருக்குது... ரெண்டு நாளாவது ஆவுமே கண்ணு.'

'இருக்கட்டும்...' என்றாள். ஸ்கூட்டியை ஒப்படைத்த பாரியின் கையைப் பார்த்தாள்.

'ஐயோ... கையெல்லாம் அழுக்கு. வீடு பக்கம்தான். க்ளீன் பண்ணிக்கிட்டு, ஒரு காபி சாப்ட்டுட்டுப் போலாம் வாங்க.'

மறுக்க மனம் இல்லாமல் அவளுடன் நடந்தான். அஞ்சலகம் அருகில் திரும்பிய சந்தில் நுழைந்து, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஒரு சிறு வீட்டை அடைந்து... இரண்டு படியேறி, கதவு திறந்து, 'உள்ள வாங்க...' என்றாள்.

தலையைத் தழைத்து, உள்ளே நுழைந்தான். சிறியதாக இருந்தாலும் வீடு பொலிவுடன் இருந்தது.

'அம்மா..!' என்று குரல் கொடுத்தாள்.

'என்னா தேவி இவ்வளவு நேரம்..?' என்று கேட்டபடி உள்ளிருந்து வெளிப்பட்ட அவளுடைய அம்மா பதறிப்போனாள்.

யட்சன்

'என்னாச்சி தேவி..?'

'ப்ச்... சின்ன விபத்து. செராய்ச்சிக்கிச்சி... அவ்வளவுதான். இவர்தான் ஹெல்ப் பண்ணாரு... பாரி, இதான் எங்கம்மா!'

பாரி திகைப்பு நீங்காமலேயே, 'அக்கா, என்னைத் தெரில..?' என்று கேட்டான்.

அவள் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். 'நீ..? நீங்க..?'

'பாரிய மறந்துட்டியாக்கா..?'

அவனை அடையாளம் கண்டுகொண்டதும், சாவித்திரி அக்கா முகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும் என்று எதிர்பார்த்தான். ஏமாந்தான். பொய்யான புன்னகையுடன், 'பாரியா நீ..? பன்னெண்டு வருஷத்துல ஆள் அடையாளமே தெரியாம மாறிட்ட..?' என்றாள்.

'ஒனக்கு ஒரு பொண்ணு இருக்கறதே எனக்குத் தெரியாதேக்கா..?'

'நாம வேலை பார்த்த லாயர் வீட்டுல,

உட்கார்ந்து பேச எங்க நேரம் கிடைச்சது? ராவெல்லாம் நான் டைப் அடிச்சுட்டு இருப்பேன்... நீ டீ வாங்கிட்டு வர ஓடிட்டு இருப்ப.'

பாரி புரிந்துகொண்டான். மகள் எதிரில், பாண்டிச்சேரியில் என்ன தொழிலில் ஈடுபட்டு இருந்தாள் என்று அவன் உளறிவிடப்போகி றானோ என்ற பதற்றம் சாவித்திரி அக்காவுக்கு. தேவி முகத்தில் ஆச்சர்யம்.

'ஓ... முன்னாடியே பழக்கமா? பேசிட்டு இருங்க... வந்துடறேன்' என்று உள்ளே போனாள்.

சாவித்திரி அக்கா நெருங்கி வந்தாள். அவன் கன்னத்தை ஆதூரத்துடன் தடவிக்கொடுத்தாள். உள்ளே திரும்பிப் பார்த்தபடி...

'தேவிக்கு என் பொழப்பு தெரியாது. எப்படி நெடுநெடுனு வளர்ந்துட்ட!' என்றாள்.

'எப்பக்கா சென்னைக்கு வந்தே?'

'அதாவுது பத்து வருஷம்... பாண்டில லாட்ஜை இடிச்சு, ஏதோ துணிக்கடை கட்டினாங்க. போலீஸ் கெடுபிடியும் அதிகமாச்சு. தேவியைத் தூக்கிக்கிட்டு, இங்க வந்துட்டேன். டைப்பிங் கத்துக்கிட்டது சமயத்துல கை கொடுத்துச்சு. கோர்ட் வாசல்லயும் ரெஜிஸ்திரார் ஆபீஸ் வாசல்லயும் பொழப்பு ஓடிட்டு இருக்கு. தேவியப் படிக்கவெச்சு, பெரிய ஆளா ஆக்கணும்னு ஆசை. நல்லாதான் படிச்சிட்டு இருந்தா... எவனோ ஒருத்தன் 'இவ்வளவு அழகா இருக்க... சினிமால பெரிய லெவலுக்கு வரலாம்’னு ஆசை காட்டி இழுத்துட்டுப் போயிட்டான். கடைசில டான்ஸராயிட்டா... போவட்டும்... உன்னப் பத்திச் சொல்லு?'

'ஹேண்டில்பாரை விட்டுட்டு சைக்கிள் ஓட்றப்ப, சின்னச் சின்ன கல்லுல மோதுற போக்குக்கு டயர் தானா திரும்புமே, அப்படி என் வாழ்க்கை அங்க இங்க மோதி, இப்ப சென்னைக்குக் கொண்டுவந்திருக்குக்கா.'

நைட்டிக்கு மாறி, ஈர முகத்தைத் துடைத்துக்கொண்டே தேவி எட்டிப் பார்த்தாள்.

'பாரி... இந்தாங்க சோப்... கையக் கழுவிக்குங்க.'

'உலகம் ரொம்ப சின்னது இல்ல?' என்றபடி பாரி உள்ளே போனான்.

'அம்மா சூப்பரா ஒரு காபி குடு பார்க்கலாம்.'

கைகளைச் சுத்தம் செய்து காபியை உறிஞ்சியபோது, 'ஃப்ரெண்டைப் பார்க்கப் போயிட்டு இருந்தீங்க... என்னால தொந்தரவு' என்றாள் தேவி.

'அப்படிலாம் இல்ல...'

'இப்பதான் வீடு தெரிஞ்சுடுச்சு இல்ல..? அடிக்கடி வந்து போயிட்டுரு!' என்றாள் சாவித்திரி.

விடைபெற்று வெளியே வந்த பிறகு, பாரிக்குக் கால்கள் பூமியில் பதியாமல் ஓரடி மேலேயே அந்தரத்தில் நடப்பதுபோல் இருந்தது. மைதானத்தைக் கடந்தபோது, நாகுவும் அவன் தம்பியும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதைப் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது அவர்கள் மீது வன்மமோ, கோபமோ பீறிடவில்லை. இந்த மனநிலையில் கையைத் தூக்கிக் கன்னத்தில் அடிக்கக்கூட முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

பாரி பேருந்தில் இருந்து இறங்கி, தெருவைக் கடந்து, மேன்ஷன் இருந்த சந்தில் நுழையவிருந்த நேரம், 'எக்ஸ்கியூஸ்மீ...' என்று ஒரு பெண் குரல் அவனை நிறுத்தியது.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism