Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Published:Updated:
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

சில பாடல்களை மேலோட்டமாகக் கேட்டால் அதில் உள்ள அனர்த்தங்களும் தவறுகளும் தெரியாது. ஆனால், திறமைவாய்ந்த கவிஞர்கள் எழுதிய புகழ்பெற்ற பாடல்களாக இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதில் உள்ள லாஜிக் மிஸ்டேக்குகள் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பெரிய இடத்துப் பெண்’ என்ற படத்தில் 'கட்டோடு குழலாட... ஆட...’ என்ற பாடல். கண்ணதாசன் எழுதியது. அற்புதமான பாடல்தான். இரண்டு பெண்கள் பருவப் பெண்களின் அழகு பற்றிப் பாடுவார்கள்.

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தொடர்ச்சியாக அழகுத் தமிழில் வரிகள் பின்னும். இடையில் எம்.ஜி.ஆரும் வந்து பாடலில் சேர்ந்துகொள்வார். அப்போது ஒரு வரி வரும், 'பச்சரிசிப் பல்லாட... பம்பரத்து நாவாட... மச்சானின் மனமாட... வட்டமிட்டு நீ ஆடு’ பச்சரிசிப் பல் ஆடினால், அது கிழவியாகத்தானே இருக்கும்? பாட்டுப் பாடுவதோ பருவப் பெண்களின் அழகு பற்றி. இங்க இடிக்குதா லாஜிக்?

இதேபோல் 'எம்(டன்) மகன்’ என்ற படத்தில் 'கோலிக் குண்டு கண்ணு கோவைப் பழ உதடு’ என்ற பாடல். பாடல் : யுகபாரதி. இதிலும் அழகுத் தமிழில், அதுவும் கிராமத்துத் தமிழில் கோபிகாவின் அழகை வர்ணிப்பார் பரத். (அதாங்க யுகபாரதி!)

'கோழிக்குண்டு கண்ணு... கோவைப்பழ உதடு...’ என்று போகும் பல்லவியின் முடிவில், 'நீ எதுக்குப் பொறந்தியோ என் உசிரை வாங்குறே?’ என்று பரத் பாட, அதற்கு கோபிகா பதில் சொல்வதாக வரும் பாடல் வரி, 'நான் உனக்குப் பொறந்தவ, ஏன் பாய்ஞ்சு பதுங்குறே?’. அதாவது பரத்துக்காகவே பிறந்தவர்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

கோபிகா என்பதுதான் யுகபாரதி சொல்ல நினைத்தது. 'நான் உனக்காகப் பொறந்தவ’ என்று சொன்னால் ஓ.கே. 'நான் உனக்குப் பொறந்தவ’ என்று சொல்லும்போது 'பரத்தின் மகள் கோபிகா’ என்றாகிப்போகிறது. கவிஞர்களே, ரொம்பக் கவனமா இருக்கணும். இல்லைனா லாஜிக் மேல லாரி ஏறிடும்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

பவர் ஸ்டார் மற்றவர்களால் கலாய்க்கப்பட்டு அஞ்சாறு படம் புக் ஆகவும், ஆளாளுக் குக் கிளம்பிவிட்டார்கள். அதிலும் 'திருமதி தமிழ்’ ராஜகுமாரன் செய்யும் அலும்புக்கு அளவே இல்லை. தினம் தினம் பேப்பரில் தன்னைத்தானே கலாய்த்து விளம்பரம் கொடுத்துக்கொள்வதும், அவர் பவர் ஸ்டார், நான் சோலார் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டம் சூடிக்கொள்வதும்... வேணாம், முடில. 'அவன் என்னைக் கேவலமாத் திட்டுவான். நான் அவன் குடும்பத்தை ரொம்பக் கேவலமாத் திட்டுவேன்’ என்பது வடிவேலு காமெடி. ஆனால் இந்த காமெடி பீஸ்களோ, 'அவனைக் கேவலமாக் கலாய்ச்சீங்கல்ல, என்னை இன்னும் கேவலமாக் கலாய்ங்க. அப்போதான் பப்ளிகுட்டி கிடைக்கும்’ என்கிறார்கள்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

ஈழப் பிரச்னையில் தீர்வு கிடைக்க மாணவர்கள் போராட்டம் நடத்தும் வேளையில் ஜெயலலிதா வண்டலூர் உயிர்க்காட்சிச் சாலையில் புலிக்குட்டிகளுக்குப் பெயர் வைக்கப் போகிறார் என்றதும் 'ஏதோ நடக்கப் போகிறது’ என்று பார்த்தேன். ஜெயலலிதாவும் புலிக்குட்டிகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார், அர்ஜூனா, ஆத்ரேயா, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று. (இதற்கு முன் அங்கு உள்ள ஒரு நீர்யானைக்குப் பெயர் த்ரிஷாவாம். ஸ்லிம்மாய் இருக்கும் த்ரிஷாவின் பெயரை நீர்யானைக்கு வைத்தவர்களுக்குக் கண்டனங்கள்). ஒரு பெயர்கூடத் தமிழ்ப் பெயர் இல்லை. தமிழில் பெயர் சூட்டுவதை ஒரு பணியாகவே செய்தது திராவிட இயக்கம். அந்தத் திராவிட இயக்கங்களில் ஒன்றின் தலைவி ஜெயலலிதா. இதுவரை குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போதுகூட ஜெயலலிதா தமிழ்ப் பெயர் சூட்டியதாக நினைவில்லை. இப்போது புலிக்குட்டிகளுக்கும் அப்படியே. அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! தமிழுக்குப் போடும் நாமமும் வாழ்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism