Published:Updated:

இவங்க கலெக்டர் ஆயிட்டா ஐயயோ!

இவங்க கலெக்டர் ஆயிட்டா ஐயயோ!

இவங்க கலெக்டர் ஆயிட்டா ஐயயோ!

இவங்க கலெக்டர் ஆயிட்டா ஐயயோ!

Published:Updated:

சினிமாவுக்குக் கோடம்பாக்கம் எப்படியோ அப்படித்தான் சிவில் சர்வீஸுக்கு அண்ணா நகர். எத்தனையோ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களை உருவாக்கிய அந்த இடத்தை வலம் வந்தால் பல கடின படிப்பாளிகளையும் கடினமான உழைப்பாளிகளையும் ஒன்றாகக் காண முடியும். அதற்குச் சற்றும் குறைவில்லாமல் பல வினோதமான கேரக்டர்களும் உள்ளே இருக்கிறார்கள் என்றார்கள் நம் நண்பர்கள். இதோ அவர்களைப் பற்றிய சுவாரஸ்ய அனுபவங்கள் அவர்கள் வாய்மொழியாகவே...

''ஒருத்தர் பயங்கர ஜாதக நம்பிக்கைப் பேர்வழி. 'எட்டாம் இடத்துல சனி உக்கிரப் பார்வை பார்க்கிறான்.

இவங்க கலெக்டர் ஆயிட்டா ஐயயோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன படிச்சாலும் மண்டையில ஏறாது’னு கால் ஆட்டிக்கிட்டே ஹாயா உட்கார்ந்துருவார். அப்புறமா 'ஒன்பதுல குரு உச்சத்துக்கு வந்துட்டான்’னு சொல்லி ஒரே நாள்ல  பூரா புக்கையும் வாசிப்பார். காலையில ராசிபலன் பார்த்துட்டு ஊர்ல இருக் கும் அவங்க அப்பா 'இன்னிக்கு வடக்கே மூலம், தெற்கே சூலம்’னுல்லாம் சொன்ன பிறகு, அவங்க அப்பாரு சொன்ன டைரக்ஷன்ல உட்கார்ந்து படிப்பார். பரீட்சைக்குப் பேனா பென்சிலை வெச்சு சிறப்புப் பூஜை பண்ணி ஊர்ல இருந்து கொரியர்ல கொடுத்து விடுவாங்க.  எல்லா எக்ஸாமுக்கும் ஒரே சட்டையப் போட்டுக்கிட்டுப் போவார். குளிக்காம நாலு பக்கம் எலுமிச்சைப் பழத்தை வெச்சுக்கிட்டு மந்திரவாதி எஃபெக்ட்ல உட்கார்ந்து யாகம் வளர்க்கிற மாதிரி நடு ஹால்ல நடுராத்திரி உட்கார்ந்து படிப்பார். அதிகாலையில 3 மணிக்கு எழுந்திருச்சு தியானம் பண்ணுவார். அப்புறம் குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போவார். அதற்கப்புறம் படிக்க உட்கார் வார்னுதானே நினைச்சீங்க. அதான் இல்லை. 'இன்னும் மூணு மாசத்துக்கு என் கிரகத்துக்கு ராசி பலன் சரியில்லை. என்ன படிச்சாலும் வேஸ்ட்டு’னு சொல்லிட்டு ரூம் பூரா பழைய ராஜேஷ்குமார் க்ரைம் நாவலை வாங்கிட்டு வந்து பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி உருண்டு புரண்டு எந்நேரமும் படிச்சுட்டு இருப்பார்.''

''இன்னொருத்தர் ரொம்ப டேஞ்சர் ஆசாமி. டி.என்.பி.எஸ்.சி.தான் அவரோட இலக்கு. திடீர்னு 'மூளை ஜாம் ஆகிருச்சு... ரிலாக்ஸ் பண்ண. காசிக்குப் போறேன்’னு விசிட் அடிச்சுட்டு வருவார். வந்ததும், 'என்ன படிச்சு என்ன ஆகப்போகுது? பேசாம நான் சினிமா டைரக்டரா ஆகலாம்னு இருக்கேன்’ என அதற்கு ஒரு பெரும் விளக்கமும் கொடுப்பார். அடுத்த வாரம் ஊருக்குப் போயிட்டு வந்து, 'சென்னையில சின்னதா ஃபாஸ்ட் ஃபுட் கடை போடலாம்னு இருக்கேன்’ என்பார். அதற்கு அடுத்த முறை, 'சிங்கப்பூர்ல மச்சான் இருக்கான். வரச்சொல்லி இருக்கான். ஏதோ சாஃப்ட்வேர் வேலையாம்’ என்பார். அதற்கும்

இவங்க கலெக்டர் ஆயிட்டா ஐயயோ!

விளக்கம் தூள் பறக்கும். இவரின் மொக்கைக்குப் பயந்து ரூமைக் காலி பண்ணி ஓடியவர்கள் ஏராளம். இன்னும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் ஒன், குரூப் 2 எக்ஸாமுக்குத் தீவிரமாகப் படித்துக்கொண்டு மற்றவர்களை படுத்தியும்கொண்டு இருக்கிற அவர் ரூமுக்கு சமீபத்தில் விசிட் அடிச்சப்போ, அவர் பெட்டியில கிதார் ஒண்ணு சாத்தி வைக்கப்பட்டிருந்துச்சு. 'அண்ணே தொந்தரவு தாங்க முடியலை சார். ராத்திரி பூரா டொய்ங் டொய்னு வாசிச்சு உசிரை எடுக்குறார்’ எனப் பசங்க ரத்தக் கண்ணீர் விடுறாங்க.''

''மேலே சொன்ன அனைத்தும், பாஸ் ஆகாதவங்களோட ஸ்டோரி. இன்னொருத்தர் இப்போ ஐ.ஏ.எஸ். பாஸ் ஆகிட்டாரு. செமையான படிப்பாளி. ஆனா அப்பப்போ சரக்கடிப்பார். சரக்குன்னா உங்க சரக்கு, எங்க சரக்கில்ல... ஏதோ உலகமே நாளைக்கு அழியப்போகுதுன்னு நினைச்சுட்டு விடிய விடியக் குடிப்பார். அவருக்கு சிக்கன் வறுத்து வெச்சிருக் கணும். இல்லைன்னா கோபப்படுவார். நல்ல நிறைபோதையில் டான்ஸ் ஆடுவார். எல்லோரையும் அன்னிக்கு அழவெச்சிடுவார். கடைசியா வாந்தி எடுத்து ஃபினிஷிங் டச் கொடுப்பார். அப்புறம் அடுத்த நாள் சம்பவமே நடக்காத மாதிரி பட்டை நாமம் போட்டுட்டு பக்திப்பழமா படிக்க உட்கார்ந்திடுவார். இப்பவும் இந்தப் பக்கம் வந்தா அந்த ரூமைப் பார்த்து சிரிப்பார்.''

அட, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களுக்குப் பின்னாடி இம்புட்டு காமெடியா? ஆத்தி!

-ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism