Published:Updated:

இதுவும் ஒரு நீதிக்கதைதான்!

இதுவும் ஒரு நீதிக்கதைதான்!

இதுவும் ஒரு நீதிக்கதைதான்!

இதுவும் ஒரு நீதிக்கதைதான்!

Published:Updated:

நம் கதையின் நாயகன் ரகு, திருமணமாகி ஒரே வாரத்தில் தன் திருமணத்தைப் பதிவுசெய்த அலுவலகத்துக்குப் போனான்.

''சார், என் மனைவிக்கும் எனக்கும் சரிவரலை. டைவர்ஸ் பண்றதா முடிவு பண்ணிட்டேன். அதனால திருமணப் பதிவை ரத்துசெய்து டைவர்ஸ் சர்ட்டிஃபிகேட் கொடுங்க'' என்று கேட்டான்.

'இது என்ன டிக்கெட் கேன்சல் பண்ற மாதிரி ஈஸியா? கல்யாணம் பதிவுசெய்றதுதான் எங்க வேலை. மத்ததெல்லாம் கோர்ட்டில்தான். அங்கே போய்ப் பாரு' என்று துரத்திவிட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது என்ன அநியாயம்? பழி ஓரிடம், பாவம் ஓரிடமா? டிக்கெட் புக் பண்ணின இடத்தில்தானே கேன்சல் செய்ய முடியும். அதுமாதிரி தானே இதுவும். இதெல்லாம் டூ மச்' என்று புலம்பியபடி கோர்ட்டின் கதவைத் தட்டினான்.

இதுவும் ஒரு நீதிக்கதைதான்!

''ஜட்ஜ் அய்யா, எனக்கும் என் மனைவிக்கும் சரிவரலை. டைவர்ஸ் வழங்கி ஒரு ஆர்டர் போடுங்க' என்றான் ரகு.

கடுப்பான ஜட்ஜ், ''யோவ் லூஸு. டைவர்ஸ் ஆர்டர் என்ன மசால் தோசை ஆர்டர் மாதிரி 10 நிமிஷத்துல போட முடியுமா? போய் ஒரு வருஷம் மனைவியைப் பிரிஞ்சு இருந்துட்டு அப்புறமா வா' என்று விரட்டினார்.

'என்ன அநியாயம் இது? ஜஸ்ட் ஒரு நிமிஷத்துல பொண்ணைப் பார்த்து சரின்னு தலையாட்டினேன். ஒரே மாசத்துல கல்யாணம் நடந்து டுச்சு. இப்போ அதை கேன்சல் பண்ண ஒரு வருஷம் ஆகும்னு சொல்றாரே ஜட்ஜ்’ என்று குமுறியபடி வீட்டுக்குத் திரும்பினான்.

பல்லைக் கடித்துக்கொண்டு சரியாக ஒரு வருடம் ஓட்டிவிட்டான். இந்த அச்சுப்பிச்சுவுடன் எந்தப் பெண்ணும் வாழ முடியாது என்று அறிந்து டைவர்ஸ் கொடுத்துவிட்டார் ஜட்ஜ்.

'ஆகா ஜாலி, சுதந்திரம் கிடைத்து விட்டது' என்று விசிலடித்தபடி வீட்டுக்குத் திரும்பினால், ஒரு பெரிய கூட்டம் வீட்டு வாசலில். சுற்றுமுற்றும் பார்த்தால் உறவும் சுற்றமும் நட்பும்.

'ஏண்டா, என்ன நியாயம் இது? பெரிய அக்கிரமமால்ல இருக்கு. கல்யாணத்துக்கு நூற்றுக்கணக்கான பேருக்கு அழைப்பிதழ் வெச்சி, கூப்பிட்டு மொய் கலெக்ட் பண்ணினே. ஆனா, டைவர்ஸ் பண்ணும்போது மட்டும் ஒருத்தருக்கும் சொல்லாம கமுக்கமாப் பண்ணினா விட்டுடுவோமா? மரியாதையா வாங்கின அன்பளிப்பு எல்லாம் திருப்பித் தா' என்று சட்டையைப் பிடித்தார்கள்.  

தான் சொன்னது தனக்கே பூமராங் ஆனதால் மயக்கமடைந்தான் ரகு.

நியாயமான கேள்விதானே சார் அது?

- ரகோத்தமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism