Published:Updated:

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

Published:Updated:
அறிவிழி
##~##

ணிந்துகொள்ளும் கணினி சாதனங்களைப் பற்றி இந்த வாரம் அலசுவதற்கு முன், கூகுள் சம்பந்தமான ஒரு முக்கியச் செய்தி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய பொருட்களைத் தூக்கியெறிந்து வீட்டை ஒழுங்குசெய்யும் போகிப் பண்டிகை மூடில் இருக்கிறது கூகுள். வேண்டாம் என்று அவர்கள் தூக்கி எறிவதாகச் சென்ற வாரம் அறிவித்திருக்கும்

மென்பொருள் RSS Reader. பல்வேறு வலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றப்படும் வலைப்பக்கங்களை அங்கே சென்று வாசிப்பதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் வாசிக்கும் வசதிகொண்ட இந்த மென்பொருள் சேவையை நிறுத்தப்போகிறது கூகுள். நீங்கள் கூகுளின் RSS Reader பயனீட்டாளராக இருந்தால், இன்னும் இரண்டு மாதங்களில் உங்களது பயன்பாடு நிறுத்தப்படும். கூகுளின் இந்த முடிவு Really Simple Syndication, சுருக்கமாக RSS என்ற தகவல் வடிவு தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகிறது. RSS தகவல் வடிவு விகடன் உள்ளிட்ட பதிப்பாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஓ.கே. தலையிலும் காலிலும் அணிந்துகொள்ளும் கணினியச் சாதனங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

தலையில் அணிந்துகொள்ளும் கூகுள் கிளாஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன காலில்? இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த SXSW மாநாட்டில் ஸ்மார்ட் ஷூ என்ற பெயரில் காலணி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். அலைபேசியுடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்ட இந்த ஷூவை அணிந்துகொண்டு நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்க்கலாம். உங்கள் உடல் அசைவு, இயக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து உள்வாங்கிக்கொண்டு, உங்களைக் கண்டிக்கவோ, உற்சாகப்படுத்தவோ செய்கிறது. உதாரணத்துக்கு: ஒரே இடத்தில் அமர்ந்தபடியே இருந்தால், 'எழுந்து நட’ என்றோ, ஓட ஆரம்பித்தால் 'சபாஷ், இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்றோ சத்தமிட்டுச் சொல்கிறது.

அறிவிழி

உங்கள் கட்டுப்பாடு இல்லாமல் தான்தோன்றித்தனமாக அவ்வப்போது சத்தம் போடும் காலணியைக் காமெடிக்காகச் சிலர் வாங்கக்கூடும். ஆனால், பெரும்பாலான பயனீட் டாளர்கள் வாங்கி வெற்றியடையும் வாய்ப்பு மிகக் குறைவு. கேட்பதற்குப் புதுமையாக இருந்தாலும், ஸ்மார்ட் ஷூ சத்தம் இல்லாமல் மறைந்துபோகும் என்பது எனது அனுமானம்.

காலில் இருந்து கைக்குப் போகலாம். கையில் அணிந்துகொள்ளும் கடிகார வடிவில் கணினியச் சாதனங்கள் இன்றைய நாளில் மிகப் பெரிய டிரெண்ட். இரண்டு வருடங்களுக்கு முன் ஆப்பிளின் ஐபாட் நானோ சதுரமாக இருக்க, புதுமையாக்கல் விரும்பி ஒருவர் அதைச் செருகிவைக்கும் வகையில் Strap ஒன்றைத் தயாரிக்க, குட்டி இசைப் பேழையாக இருந்த ஐபாடைக் கையில் கடிகாரமாகக் கட்டிக்கொள்ளும் டிரெண்ட் ஆரம்பித்தது. இந்த ஐபாடில் கடிகார மென்பொருள் இருந்ததால், அதை இயக்கி அணிந்துகொண்டால், கடிகாரம் கட்டிக்கொண்டதுபோலவே இருக்கும். இயர்போன் அணிந்துகொண்டால் பண்பலை வானொலிகூடக் கேட்கலாம் என்பதால், பரபரப்பாக விற்றது இந்த வாட்ச் ஸ்ட்ராப். புதிதாக வரும் எதையும் முயற்சிசெய்யும் Early Adopter வகையறாவைச் சார்ந்தவன் என்பதால், இந்த கடிகாரத்தைச் சில மாதங்கள் அணிந்து பார்த்தேன். பேட்டரி வாழ்க்கை ஐபாடுக்கு மிகவும் குறைவு என்பதால், கடிகாரத்தை எப்போதும் கழற்றி சார்ஜ் செய்யவேண்டியிருந்த எரிச்சலில் கடிகாரம் அணியும் பழக்கத்தை விட்டுவிட்டேன்.

சென்ற வருடம் PebbleWatch அறிமுகமானபோது மீண்டும் ஸ்மார்ட் கடிகாரக் காய்ச்சல் பயனீட்டாளர் களைப் பற்றிக்கொண்டது. பெபிள்வாட்ச் உங்களிடம் இருக்கும் அலைபேசியுடன் ப்ளூடூத் மூலம் இணைந்துகொண்டு, பல்வேறு வகையான மென்பொருள்கள் மூலம் பயனீட்டு அனுபவங்களைச் செம்மைப்படுத்துகிறது. உங்களை அலைபேசியில் அழைப்பவர்களின் காலர் ஐ.டி-யைப் பார்க்கலாம்; பேச முடியவில்லை எனில் குறுஞ்செய்தி அனுப்பலாம். அலைபேசியில் இருக்கும் இசைப்பேழையை இயக்கலாம். ஓட்டப்பயிற்சி எடுக்கும்போது எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறீர்கள்; அதன் மூலம் எத்தனை கலோரிகளைக் கரைத்திருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட்டுச் சொல்கிறது பெபிள். இதுபற்றிய முழுத் தகவல்களுக்கு getpebble.com.

பெபிளின் பிரமாண்ட வெற்றியைப் பார்த்துப் பல நிறுவனங்களும் கடிகாரத் தயாரிப்பில் இறங்கி இருக்கின்றன. இதில் முக்கியமானது ஆப்பிள். அவர்கள் தயாரிக்கும் கடிகாரம் இந்த வருட முடிவுக்குள் சந்தைக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.

மொபைல் சாதனப் பிரிவில் ஆப்பிளுடன் நெருக்கமாக மோதிக்கொண்டிருக்கும் கொரிய நிறுவனமான சாம்சங் தங்களது பிராண்ட் கடிகாரத்தை வடிவமைத்துக்கொண்டிருப்பதாகச் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கடிகாரம் தவிர, கைகளில் பிரேஸ்லெட்போல அணிந்துகொண்டு உடல் அசைவு, இயக்கம், தூக்கம் போன்ற வற்றைக் கண்காணித்து, பதிந்துவைத்து நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதைக் கண்டறியும் activity tracker சாதனங்களும் சந்தையில் வெளிவருகின்றன.

நான் கடந்த பல மாதங்களாக அணிந்திருக்கும் Jawbone UP சாதனத்தை நான் ஒரே இடத்தில் அசையாமல் 15 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருந்தால் எனக்கு நினைவூட்டும்படி நிரலிட்டு வைத்திருக் கிறேன்.

இந்தக் கட்டுரை எழுத ஆரம்பித்த பின்னர், மூன்று முறை கிர்ரென அதிர்வுகொடுத்து நினைவூட்டியதால், இத்துடன் முடித்துக்கொண்டு அடுத்த வாரம் தொடர்கிறேன்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism