யட்சன்
##~##

பாரி திரும்பினான். அழகான இளம்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நீங்க அந்த மேன்ஷன்லயா இருக்கீங்க..?'

'ஆமா...'

'ஒரு சின்ன ஹெல்ப்... எனக்குத் தெரிஞ்சவரு அங்க இருக்காரு. போன் பண்ணா, சுவிட்ச் ஆஃப்னு வருது. தனியா மேன்ஷன்ல போய் விசாரிக்கக் கூச்சமாயிருக்கு. பேரு செந்தில். ரூம் நம்பர் 218. இருந்தார்னா, ரோடு முனைல தீபா வெயிட் பண்றானு சொல்லுங்களேன்.'

'சொல்றேன்.'

'தேங்க்ஸ்.'

இன்றைக்கு என்ன அடுத்தடுத்துப் பெண்களுடன் சந்திப்பு! சின்னதாகச் சிரித்துக்கொண்டே, பாரி மேன்ஷனை அடைந்து, இரண்டாவது மாடி ஏறி, கதவைத் தட்டினான். ஸ்கிப்பிங் செய்துகொண்டிருந்த செந்தில், நிறுத்திவிட்டு கதவைத் திறந்தான். பாரியைப் பார்த்ததும், சட்டென்று பின்வாங்கினான்.

'ஓ... நீங்கதான் செந்திலா?'

'ஏன்..?'

'உங்களைத் தேடி தீபானு ஒருத்தங்க ரோடு முனைல வெயிட் பண்றாங்க.'

''என்னது..?'' செந்திலின் கண்கள் விரிந்தன.

'தேங்க்ஸ்.'

ஸ்கிப்பிங் கயிற்றை எறிந்துவிட்டு, பர்ஸை அள்ளிக்கொண்டு, செருப்புகளை மாட்டியபடி, கதவைச் சாத்திவிட்டு, பரபரவென்று ஓடி படிகளில் இறங்கினான். தீபாவைப் பார்த்தான். ஓடிப்போய் அண்டினான்.

யட்சன்

'ஏய்... என்ன இது சர்ப்ரைஸ்?'

'அரை மணி நேரமா இங்கயே வெயிட் பண்றேன். ஏண்டா போனை ஆஃப் பண்ணியே வெச்சிருக்க? ஏதாவது கடன்காரன் தொல்லையா?'

'அதெல்லாம் இல்ல, தீபா. அஞ்சு நிமிஷம்கூட சார்ஜ் நிக்க மாட்டேங்குது... பொட்டுபொட்டுனு ஆஃப் ஆயிருது. சர்வீஸுக்குக் குடுத்திருக்கேன்.'

'வாடா எங்கூட'- அவன் கையைப் பிடித்து இழுத்துப் போன தீபா, பிரதான சாலையில் இருந்த ஒரு அலைபேசி விற்பனைக் கடைக்குள் நுழைந்தாள்.

'தீபா, இப்ப எதுக்கு புது போன்..?'

'வாயை மூடு... எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த லெவலுக்கு வந்திருக்க... முக்கியமான கால் ஏதாவது வந்தா?'

பல்வேறு மாடல்களில் கண்ணியமாகத் தெரிந்த ஒன்றை 2,700 ரூபாய் கொடுத்து வாங்கினாள். அவனுடைய சிம்கார்டை அதில் பொருத்தினாள். செந்தில் கூச்சத்துடன் போனை வாங்கிக்கொண்டான்.

'என்னால உனக்கு எவ்ளோ செலவு?'

'மொதல்ல புலம்பலை நிறுத்து... ஊர்லேர்ந்து ஒருத்தி உன்னைப் பார்க்கணும்னு திடுக்குனு புறப்பட்டு வந்திருக்காளே... அவள ஜாலியா எங்கயாவது கூட்டிட்டுப் போலாம்னு தோணுதா உனக்கு?'

'எங்க போகணும் சொல்லு?'

'நீ எந்த மெஸ்ல சாப்பிடுவ? எங்க பஸ் ஏறுவ? எந்த சாமியைக் காக்கா பிடிப்பே? எல்லா எடமும் காட்டு' என்று அவனுடன் கை கோத்துக்கொண்டாள்.

'அதுக்காகவா வந்த?'

'நாளைக்குத்தான கடைசி ஆடிஷன்னு சொன்ன..? நேர்லயே ஆல் தி பெஸ்ட் சொல்லணும்போல இருந்தது. அரை நாள் லீவு போட்டேன்... பஸ் பிடிச்சேன்... வந்துட்டேன்.'

அவளோடு நடந்தபோது, உலகமே கருணையாக மாறிவிட்டதுபோல் அவனுக்குத் தோன்றியது. குறுக்குச் சந்தில் இருந்த மெஸ்ஸைக் காட்டினான். தேநீர் அருந்தும் இடத்தைக் காட்டினான். போட்டோக்களை அச்சிட்ட கடையைக் காட்டினான். எல்லாவற்றையும் ஆவலுடன் பார்த்தாள்.

'தகவல் சொல்லி அனுப்பினியே, அவன் பேரு பாரி. ஆபத்தானவன் தீபா.'

'பார்த்தா உன்னைவிடக் கம்பீரமா, கண்ணியமா இருந்தான்..?' என்று கண்ணடித்தாள்.

செந்திலின் புதிய புகைப்படங்களைக் காட்டியபோது, இரண்டைப் பறித்துக்கொண்டாள்.

'இதுல அவனவிட அழகா இருக்கடா... கண்ணுல குறும்பு தெரியுது. என்கிட்டயே இருக்கட்டும். உன்கூடப் பேசணும்னு தோணிச்சுன்னா, இதுகூடப் பேசுவேன்' என்று கைப்பையில் வைத்துக்கொண்டாள்.

'செந்தில், எனக்கு உன் கையைப் பிடிச்சுக்கிட்டு, அலையில நிக்கணும்... நீ கடிச்ச மாங்கா பத்தையைப் பிடுங்கிக் கடிக்கணும்... மணல்ல முழங்காலைக் கட்டி உட்கார்ந்து நீ பேசறதைக் கேக்கணும்... கொஞ்ச நேரம் உன் மடில படுத்து கடல் காத்தை அனுபவிக்கணும்.'

'இன்னிக்கேவா..?'

'இப்பவே...'

மாங்காய் பத்தை, மசாலாக் கடலை, சுட்ட சோளம், கால் நனைக்கும் அலைகள், கூந்தல் கோதும் கடற்காற்று என்று எல்லாம் அனுபவித்து முடித்தபோது, இருள் சூழ்ந்திருந்தது.

'வீட்டுல என்ன சொல்லிட்டு வந்த தீபா?'

'ஃப்ரெண்டு அக்காவப் பொண்ணு பார்க்க வராங்க, ஹெல்ப்புக்குக் கூப்பிட்டிருக்கா... சென்னை வரைக்கும் போயிட்டு வரேன்னு ஒரு பொய்.'

'இந்த சுடிதார்ல ரொம்ப அழகா இருக்கடி.'

'இந்த வசனம்தான் கொடுத்தாங்களா?' என்று குறும்பாகச் சிரித்தாள். அவன் மடியில் படுத்தபடி நிமிர்ந்து முகம் பார்த்தாள்.

'இப்ப ஆடிஷன்ல செஞ்சத அப்படியே நடிச்சுக் காட்டு.'

'இங்கயா?'

'அவுட்டோர்ல ஆயிரம் பேருக்கு முன்னால நடிப்பே. எனக்காகச் செய்ய மாட்டியா?'

'வம்புக்காரிடி நீ.'

அவன் நடித்துக் காட்டியபோது, சத்தம் இல்லாமல் கைகளைத் தட்டினாள்... 'பின்றடா!'

ஆனந்தத்தில், செந்திலுக்கு நெஞ்சு விம்மி மூச்சு முட்டியது.

'எதுக்குடி எம் மேல இவ்ளோ அன்பைக் கொட்டுற?'

'எல்லாம் சுயநலம்தான்...' என்றாள்.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism