Published:Updated:

விமர்சனம்

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள்!

##~##

பிறக்கும்போது எல்லோருக்கும் நினைவாற்றல் ஒரே அளவாகத்தான் இருக்கும். வளர, வளர நம் நினைவாற்றலும் வளர்கிறது அல்லது குறைகிறது. 'வர வர எதுவுமே ஞாபகமில்லை; வயசாயிடுச்சோ?’ என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். பெரும்பாலும், எல்லோருக்குமே பிடித்த பாடல்கள், திரைப்படங்கள் நினைவில் நீங்கா இடம் பெற்றுவிடுகின்றன. ஆனால், பாடங்கள் அந்த அளவுக்கு நினைவில் இருப்பதில்லை. இந்த நிலை ஏன்? நினைவாற்றலைப் பெருக்கிக்கொள்ள என்னதான் வழி? நமக்கு நாமே ஆசான்... என்பதுபோல், அதீத நினைவாற்றலுக்குரிய பூஸ்ட்டைத் தந்திருக்கிறது 'மெமரி பூஸ்டர்’ எனும் இந்த அற்புத நூல். 

'சமையல் அறை, டைனிங் டேபிள் என மணமாகச் சுவாசித்தபடி, சங்கீதத்தில் லயித்தபடி, வாயில் எதையாவது கொறித்தபடி படிப்பது எப்போதும் மனதில் பதியாது. கவனச் சிதறல் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே படித்த பாடம் மனதில் பதியும்’ என்று படிக்கும் சூழலை பளிச்செனச் சொல்கிறார் நூலாசிரியர் லதானந்த்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விமர்சனம்

குடும்பச் சூழலால் இறுக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமை; புரிந்துகொள்ளச் சிரமப்படும் மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் எடுத்து விளக்குவது ஆசிரியரின் கடமை; படிப்பதைத் தங்களுக்குப் பிடித்த ஒன்றைச் செய்யும் மனோபாவத்துடன் அணுகுவது மாணவர்களின் கடமை என மூவரின் கடமைகளைப்பற்றிக் கச்சிதமாய் சொல்கிறார்.

கண்களை மூடிக்கொண்டு ஒரு தியானம்போல் சாப்பிடும் முறைகூட, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும் என்று உணவுக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பையும் விளக்கி இருக்கிறார்.

தெரிந்த விஷயங்கள் மூலம் நினைவில் இருத்தவேண்டிய செய்திகளை இணைக்கும் கலையை அற்புதமாக விளக்கி இருக்கிறார்.நிமோனிக்ஸ் என்னும் நினைவாற்றல் கலையை அடிப்படையில் இருந்து புரியவைக்கிறது இந்த நூல்.  

அக்ரோஸ்டிக், அக்ரோனிம், கதை உத்தி, எண்களை நினைவில் கொள்ளும் சூட்சமங்கள் எனப் பல்வேறு வழிகள் நினைவுக்குப் பலம் தரும் விஷயங்கள், சுய அனுபவங்கள், சினிமாவில் வரும் வசனங்கள், பாடல்கள், அரிய புத்தகங்கள் என உதாரணங்கள் காட்டி நகைச்சுவை மிளிர அசத்தியிருப்பது அருமை.  

மறதிக்கு மருந்தாய், நினைவுக்கு விருந்தாய் அமைந்திருக்கும் இந்த நூல் மாணவர்களின் மெமரியை மேலும் மெருகூட்டும்!