Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

ண்டமாற்று முறை மறைந்துபோய் பணம் என்பது பொருட்களையும் சேவைகளையும் நுகர் வதற்கான ஊடகமாக மாறிவிட்டது. பல்வேறு நாடுகளின் கரன்சிகள், சந்தைகள், எதிர்கால வர்த்தகம் (Futures trading) என்றெல்லாம், பணம் என்ற எளிமையான அமைப்பு இன்று செம சிக்கலானதாக மாறிவிட்டது. வணிகத் துக்கு அடிப்படையாக இருக்கும் பணம்... தேச எல்லைகள், அவற்றுக்கு இடையே இருக்கும் உறவுகள் போன்றவற்றாலும் கட்டுப்படுத்தப் படுகிறது. அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தின் உதவியுடன், தனது கரன்சியை உலக வர்த்தகத்தின் கரன்சியாக நிறுவியிருக்கிறது. 'இன்னும் சில ஆண்டுகளில் சீனாவின் கரன்சிக்கும் இந்த அந்தஸ்து வரக் கூடும்’ என்கிற யூகங்கள் பிசினஸ் உலகில் தொடர்ந்து வதந்தியாகவோ, செய்தியாகவோ அலசப்பட்டு வருகிறது. பணம் என்பது உழைப்பைச் சார்ந்தது என்று எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ள முடியும். கை, கால்களைப் பயன் படுத்திச் செய்யப்படும் உடல் உழைப்பாகவோ, அல்லது மூளையை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்படும் அறிவுசார்ந்த தொழிலாகவோ இருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னுரையை முடித்துக்கொண்டு விஷயத்துக்கு வருகிறேன்.

கணினியில் உழைப்பின் மூலம் உருவாக்க முடிகிற இந்த e-currency பண வடிவு கிடுகிடுவெனப் பிரபலமாகிவருகிறது. அதன் பெயர் பிட்காயின் (Bitcoin). அடுத்த சில மாதங்களில் நிச்சயமாகப் பரவலாக அறியப்படப்போகிற பிட்காயினைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

அறிவிழி

பிட்காயின் என்பது ஒரு தனி நபராலோ, ஒரு நிறுவனத்தாலோ, ஒரு தேசத்தாலோ தயாரிக்கப்பட்டது அல்ல. மாறாக, இது ஒரு ஓப்பன் சோர்ஸ் புராஜெக்ட். நீங்கள் உங்களுக்குத் தேவையான பிட்காயின்களைத் தயாரித்துக்கொள்ள முடியும். அல்லது, மற்றவர்கள் தயாரித்த பிட்காயின்களை வாங்கிக்கொள்ள முடியும். யார் வேண்டுமானாலும் தயாரித்துக்கொள்ள முடியும் என்றால், இதற்கு என்ன மதிப்பு இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றலாம். பிட்காயினின் வடிவமைப்பு ரொம்பவே ஸ்மார்ட். ஒரு பிட்காயின் என்பது உங்கள் கணினியில் இருக்கும் ஒரு கோப்புபோல என வைத்துக்கொள்ளுங்கள். இந்த பிட்காயின் கோப்புக்குள் குறிப்பிட்ட வடிவங்கள் பொதியப்பட்டு இருக்கும். இந்த வடிவங்களை உருவாக்கும் பணியை ‘mining’ என்கிறார்கள். இதைச் செய்வ தற்கு ஏகப்பட்ட கணினித் திறன் தேவைப்படும். உங்களுடைய வீட்டிலோ, அலுவலகத்திலோ சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் மேஜை அல்லது மடிக்கணினி கொண்டு பிட்காயின் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்றால், பல ஆண்டுகள் ஆகலாம். வேகமாக இயங்கும் பெருங் கணினிகளைப் பயன்படுத்தினாலும், சில பிட்காயின்களை மட்டுமே தயாரிக்க இயலும். மொத்தத்தில், நீங்களே கரன்சி அச்சடித்துக் கொள்வது போன்றதல்ல பிட்காயின் தயாரிப்பது. அது மட்டுமல்ல... பிட்காயின் வடிவமைப்பு மொத்தம் 21 மில்லியன் பிட்காயின்களை மட்டுமே அனுமதிக்கும். இன்றைய தேதியில் சுமார் 11 மில்லியன் பிட்காயின்கள் தயாரிக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அறிவிழி

பிட்காயின்களைத் தயாரிப்பது கடினம் என்பதால், இப்போதைக்கு பிட்காயின்களைப் பெற்றுக்கொள்ள ஒரே வழி அவற்றை வாங்கிக்கொள்வதுதான். குறிப்பிட்ட அளவு மட்டுமே இருக்கப்போவது என்பதால், பிட்காயின்களின் மதிப்பு தறிகெட்ட வேகத்தில் அதிகரித்த படி இருக்கிறது. இந்த விதத்தில் பிட்காயின் பொருளாதாரத்தைத் தங்கத்துடன் ஒப்பிடலாம். வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களின் Supply, Demand சார்ந்து அதன் விலை ஏறிக்கொண்டே இருக் கிறது. நான் முதலில் பிட்காயின்பற்றி சென்ற வருடம் அக்டோபர்வாக்கில் கேள்விப்பட்ட போது, ஒரு பிட்காயினின் விலை 10 டாலருக்குச் சற்றே அதிகமாக இருந்தது. இப்போது ஒரு பிட்காயினின் விலை 140 டாலர்களுக்கும் மேல். இந்தக் கணக்கின்படி பார்த்தால், புழக்கத்தில் இருக்கும் பிட்காயின்களின் மொத்த மதிப்பு ஒன்றரை பில்லியன் டாலர்களுக்கும் மேல்.

பிட்காயின்களின் மீது அப்படி என்ன திடீர் ஆர்வம்? அதிமுக்கியக் காரணம், தேச எல்லைகளைக் கடந்து அரசாங்கங்களின் மத்திய வங்கி களின் கட்டுப்பாடுகள் பிட்காயின்களை ஒன்றும் செய்ய முடியாது. பணம் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு மாறுகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள விரும்பும் அரசு இயந்திரங்கள், பிட்காயின் சார்ந்த பொருளா தாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பது நிச்சயம். ஆனால், இன்றைய நாளில் இதைக்

அறிவிழி

கட்டுப்படுத்தவோ, முறைப்படுத் தவோ அரசாங்கங்களால் முடியாது என்பதே உண்மை. பிட்காயின் தொழில்நுட்பத்தைப் பற்றியும், எங்கே பிட்காயின்களை வாங்கிப் பயன்படுத்த முடியும் என்பன போன்ற தகவல் களுக்கு... www.bitcoin.org   

'கும்பமேளாவில் லைஃப்பாய் சோப்பு விளம் பரம் சப்பாத்தியில் பிரின்ட் செய்யப்பட்டு எல்லோருக்கும் விநியோகம் செய்யப்பட்டது ஒரு நல்ல விளம்பர உத்தி.

கொரில்லா மார்க்கெட்டிங் பற்றி எழுதும்போது அண்டனுக்கு இது ஏனோ நினைவுவரவில்லை’ எனப் பின்னூட்டம் இட்டிருந்த விகடன் டாட் காம் வாசகர் ராஜுவுக்கும், மேற்படி நிகழ்வு பற்றிய யூடியூப் உரலியைப் பகிர்ந்துகொண்ட வெளியுறவுத் துறை அதிகாரி தரணுக்கும் எனது நன்றி.

கையால் உணவை உண்ணும் இந்தியப் பழக்கத்தைத் தங்களுடைய விளம்பரத்துக்கு அடிப் படையாகப் பயன்படுத்திக்கொண்ட உக்தி மெச்சத்தக்கது!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism