Published:Updated:

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வணக்கம் நண்பர்களே...

''ஸ்கூலுக்கு நேரமாகுது சீக்கிரம் சாப்பிடு'', ''பஸ் வந்துருச்சு ஓடு... ஓடு''

##~##

இது

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

போன்ற பரபரப்புகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இல்லை. பள்ளி மணிச் சத்தம், 'கீப் கொயட்’ என்ற ஆசிரியரின் அதிரடிக் குரல், ஹோம் வொர்க், புத்தகப் பை என எல்லாவற்றுக்கும் லீவு. இனி நண்பர்களுடன் அரட்டை, விளையாட்டு, கார்ட்டூன் சேனல் எனக் குதூகலமாக இருப்பீர்கள். இவை எல்லாவற்றையும்விட விடுமுறையின் மற்றொரு சிறப்பு... சுற்றுலா.

சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, நம் அறிவை விரிவாக்கும் அனுபவ ஆசிரியர். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருப்பது சுற்றுலாதான். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்லும்போது நமது முன்னோர்களின் கலாசாரம், வாழ்வியல் முறைகளை அறியலாம். தீம் பார்க் போன்ற இடங்களில் அறிவியலின் புதுமைகளைச் சந்திக்கலாம். மலை, காடு, அருவி எனச் செல்லும்போது இயற்கையின் பிரமாண்டத்தையும், அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையையும் உணரலாம்.

உங்கள் கைகளில் தவழும் இந்த இணைப்புப் புத்தகம், சிறிய சுற்றுலா வழிகாட்டியாக உங்களுக்கு உதவும். தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளை மாவட்டரீதியாகப் பிரித்து, 'நறுக்... சுருக்’ வரிகளில் கொடுத்து இருக்கிறோம். அப்புறம் என்ன? அப்பா, அம்மாவிடம் இதைக் காட்டுங்க... அழகா ஒரு டூர் பிளான் போடுங்க. ஜாலியாப் போய்ட்டு வாங்க... சந்தோஷத்தோடு அறிவையும் சேகரிச்சுட்டு வாங்க!

அன்புடன்

ஆசிரியர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், பொழுதுபோக்க, இடங்கள் உண்டு தாராளமாய்... ஏராளமாய்! தீம் பார்க், மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர்கள்   என செலவுவைக்கும் இடங்களும் உள்ளன. இதைத் தவிர, மிகக் குறைந்த செலவில் எல்லோரும் பார்க்கும் இடங்களும் உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

உலகின் நீளமான கடற்கரைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மெரீனா, மாலை நேரத்தில் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இடம். சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தும் வருவதற்கு பேருந்து வசதி உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கிண்டி சிறுவர் பூங்கா. பல வகை மான்கள், பறவைகள், பாம்புகள், முதலைகள், ஆமைகள் உண்டு. பாம்பு விஷம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதையும் இங்கே நேரடியாகச் செய்து காட்டுகிறார்கள்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

எழும்பூர் - கன்னிமாரா நூலகத்தை ஒட்டி உள்ளது அரசு அருங்காட்சியகம். உலகப் புகழ்பெற்ற அமராவதி மென்கல் சிற்பத் தொகுப்பு இங்கே உள்ளன. தலைமைச் செயலகம் பகுதியில் இருக்கிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம். தேசிய அரசியல் தலைவர்களின் அசல் கையெழுத்து ஆவணங்கள், பழங்கால நாணயங்கள், அந்தக் காலத்தில் பயன்படுத்திய பல்வேறு பொருட்களைப் பார்த்து மகிழலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

 கோட்டூர்புரம் பகுதியில் இருக்கும் பிர்லா கோளரங்கம் விண்ணியல் அறிவுச் சுரங்கம். அண்டவெளியில் உள்ள கோள்கள், அவற்றின் செயல்பாடுகள் எனப் பல்வேறு ஆச்சர்யங்களைத் திரையில் கண்டு ரசிக்கலாம். தொலைநோக்கி மூலம் வான்வெளிக் காட்சிகளைப் பார்த்து வியக்கலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் என்றதும் நினைவுக்கு வருபவை கோயில்களும்,அங்கே நெய்யப்படும் பட்டுப் புடைவைகளும்தான். காஞ்சிபுரத்துக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இருக்கிறது  புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகள்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தமிழர்களின் சிற்பக்கலைப் பெருமையை உலகுக்குச் சொல்லும் மாமல்லபுரம். கடலோரக் கற்கோயில், மகிஷாசுரமர்த்தினி குகை, அர்ஜுனன் தவம், ஐந்து கோயில்கள், குகைக் கோயில்கள் எனப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மாமல்லபுரத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புலிக் குகை. இதன் அருகிலேயே வராக குகை. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மண்டபம். சிற்ப அருங்காட்சியகமும் உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலம்பாறைக் கோட்டை. நவாப்புகள் கட்டியது. இங்குள்ள கழி முகத்துவாரமும் குளிர்ந்த மணல்வெளியும் சிறப்புமிக்கவை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மாமல்லபுரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள படகுத்துறை  முதலியார்குப்பம். குதூகலமான படகு சவாரிக்கு ஏற்ற இடம். கிழக்குக் கடற்கரைச் சாலையில், மற்றொரு படகுத்துறை முட்டுக்காடு. நீர் விளையாட்டுகள், புதிய படகு ஓட்டுனர்களுக்கான பயிற்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சென்னையில் இருந்து 44 கி.மீ. தொலைவில் வடநெமிலியில் உள்ளது மிகப் பெரிய முதலைப் பண்ணை. ரோமுலஸ் விட்டேகர் என்ற வெளிநாட்டவரால் நிறுவப்பட்டது. இங்கே மணிக்கு ஒரு முறை பாம்பு விஷம் எடுக்கும் நிகழ்ச்சியைக் காணலாம். அனகோன்டா பாம்புகளையும் பார்க்கலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சென்னை டு மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது சோழமண்டலம் ஓவிய கிராமம். தமிழகத்தின் பிரபல ஓவியர்கள் பலர் இங்கு தங்கி ஓவியங்கள், சிற்பங்களை உருவாக்கி, பொது மக்களின் பார்வைக்கும் வைப்பார்கள். பார்வையிடக் கட்டணம் ஏதுமில்லை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இந்தியாவின் பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்று. சுதந்திரமாக நடமாடும் விலங்குகள், பறவைகள், ஊர்வன எனப் பல உயிரினங்களைப் பார்க்கலாம். லயன் சஃபாரி, எலிபென்ட் சஃபாரியும் உண்டு.  

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நமக்கு மட்டும் அல்ல, உலகின் பல நாட்டுப் பறவைகளுக்கும் கோடைக்கால சுற்றுலாத் தலமாக இருப்பது வேடந்தாங்கல். பலவகைப் பறவைகளை இங்கே கண்டு மகிழலாம். தொலைநோக்கி மூலம் பார்க்கும் வசதியும் உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருவள்ளூர், திருவண்ணாமலை

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி இருக்கும் மாவட்டம் திருவள்ளூர்.  இங்கே இருக்கும் பழவேற்காடு, ஒரு குட்டி வேடந்தாங்கல். இந்த ஏரியை உப்பாறு என்பார்கள். கடல் நீரும் பக்கிங்ஹாம் கால்வாய் நீரும் கலக்கும் ஏரி. மீனும் இறாலும் நிறையக் கிடைக்கும். இந்த ஏரியின் நீர் மட்டம் திடீரென உயர்வதும் குறைவதுமாக இருக்கும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் பட்டினத்தாரின் சமாதி இருக்கும் இடம் திருவொற்றியூர். இதுவும் ஒரு சுற்றுலாப் பகுதி.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கார்த்திகை தீபத்துக்குப் புகழ்பெற்ற ஊர் திருவண்ணாமலை. இங்கே பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது சாத்தனூர் அணை. இங்கே இருக்கும் இரும்பாலான தொங்கு பாலம் ஓர் அதிசயம். இந்தப் பகுதியைச் சுற்றிப் பார்க்க சிறுவர் ரயில், படகு சவாரி உள்ளன. இதோடு, நீச்சல் குளம், முதலைப் பண்ணை, வண்ணமீன்கள் காட்சியகமும் உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வேலூர்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் தொடங்கிய பெருமை மிக்க இடம் வேலூர். இங்கே உள்ள கோட்டையில்தான் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டு ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போராட்டம் தொடங்கியது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வேலூரின் மையப் பகுதியில் இருக்கும் கற்கோட்டையைச் சுற்றிலும் உள்ள 8,000 அடி நீளமான அகழியில் படகு சவாரி செய்யலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பழங்கால மற்றும் தற்கால அபூர்வப் பொருட்களும் வட ஆற்காடு மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களும் உள்ள இடம் வேலூர் அருங்காட்சியகம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

100 ஏக்கர் பரப்பளவில், 600 கோடி செலவில் தங்கம் மற்றும் தாமிரத்தால் நிறுவப்பட்டுள்ள இடம் ஸ்ரீபுரம் தங்கக் கோயில். இந்தக் கோயில்  பிரகாரத்துக்குச் செல்லும் சுற்றுப்பாதை நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

 எளிமையான செலவில் சென்று வருவதற்கேற்ற அழகான மலைவாசஸ்தலம் ஏலகிரி. 'பாரா க்ளைடிங்’ இங்கே புகழ்பெற்றது. மலையின் கீழே உள்ள ஒரு குன்றின் மீது அழகாகக் கொட்டும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி பார்க்க ஏற்ற இடம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சந்தன மரமும் பழமரங்களும் நிறைந்தது ஜவ்வாது மலைத்தொடர். இங்கே பீமன் மடவு என்ற அருவி உள்ளது. இந்த மலைத்தொடருக்குக் கீழே அமிர்தி விலங்கியல் பூங்கா உள்ளது. பறவைகள், விலங்குகள், சந்தன மரங்கள், மூலிகைச் செடிகள், அருவி என ரம்மியமான இடம்.

விழுப்புரம், கடலூர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் மண்டகப்பட்டி. இங்கே மகேந்திரவர்மன் உருவாக்கிய குடைவரைக் கோயில் உள்ளது. அழகிய சிற்பங்களுடன் மனதைக் கவரும் இந்தக் கோயில், தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட மற்றொரு குடைவரைக் கோயில் உள்ள இடம் சிங்கவரம். இங்கே உள்ள ரங்கநாதரும் பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானது. இன்னொரு சிறப்பு, இது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிலையைவிட நீளமானது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தேசிங்கு ராஜாவின் செஞ்சிக் கோட்டை இருக்கும் இடம் செஞ்சி. 700 ஆண்டு பழமையானது. போர் வீரர்கள் தங்கிய இடங்கள், குதிரை லாயங்கள் எல்லாம் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்லும். இதன் அருகிலேயே யானைக் குளம், தத் உல்லாக்கான் மசூதி ஆகியவையும் உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

செஞ்சியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருநாதர் குன்றில் இரண்டு குகைகள் உள்ளன. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களை ஒரே பாறையில் செதுக்கி இருப்பதைக் காணலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ராஜகிரியின் வடக்கே மலைக் குன்றில் உள்ளது கிருஷ்ணகிரிக் கோட்டை. இரண்டு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், செங்கல் மாளிகை, பார்வையாளர்கள் தர்பார், சிறிய பீரங்கி ஆகியவை பார்க்க அற்புதமானவை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

இந்தோ-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அழகான கோட்டை ராஜகிரி மலைக்கோட்டை. இங்கே நாயக்கர் கால கட்டடக் கலை அமைப்பிலான ரங்கநாதர் கோயிலும் உள்ளது. பெரிய இரும்பு பீரங்கி உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கடலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீமுஷ்ணம். இங்கே பூவராகசுவாமி கோயில் புகழ்பெற்றது. யானைகள், குதிரைகள், போர் வீரர்கள் எனப் பல சிற்பங்கள் கொள்ளை அழகு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நாட்டியக் கலையின் கடவுளான நடராஜருக்கு பிரமாண்டமான கோயில் கொண்ட நகரம் சிதம்பரம். ஆலயத்தின் மேற்கூரையைப் பராந்தகச் சோழன் பொன்னால் வேய்ந்தார்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

இயற்கைக் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத இடம் பிச்சாவரம். 11,000 ஏக்கர் பரப்பளவில் சுரபுன்னைக் காடுகள் சூழ்ந்த பகுதி. பிச்சாவரம் ஏரியில் படகு சவாரி செய்வது அற்புதமான அனுபவமாக இருக்கும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கிருஷ்ணகிரி, தர்மபுரி

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஓசூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கிறது கிருஷ்ணகிரி அணை. 1957-ல் கட்டப்பட்ட இந்த அணையைச் சுற்றி உள்ள பூங்காக்கள் பார்ப்பவர் மனதைக் கவரும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

லிட்டில் இங்கிலாண்ட்’ என்று பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்ட ஊர், தளி. இங்கே உள்ள பள்ளத்தாக்குகள், குன்றுகள், அதனைச் சூழ்ந்த மேகக் கூட்டங்கள் கொள்ளை அழகு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தர்மபுரி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று ஒகேனக்கல். தர்மபுரியில் இருந்து 48 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. கொஞ்சம் வேகமாக விழும் நீர் வீழ்ச்சி என்பதால் ஜாக்கிரையாகக் குளித்தால், உடலும் மனமும் லேசாகி வரலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருக்கிறது தியாகி சுப்ரமண்ய சிவா நினைவகம். அவரது அபூர்வப் புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்களைக் காணலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நாகப்பட்டினம்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நாகப்பட்டினத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது தரங்கம்பாடி. இங்கே இருக்கும் கோட்டை, டச்சுக்காரர்கள் கட்டியது. சுதந்திரத்துக்குப் பின் பயணிகள் மாளிகையாக செயல்பட்டது. 1977-க்குப் பிறகு அரசு நினைவுச் சின்னமாக உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சோழர்களின் முன்னாள் தலைநகர் அமைந்து இருக்கும் இடம் பூம்புகார். இங்கே இருக்கும் சிலப்பதிகாரக் கலைக்கூடம் மிகவும் பிரசித்திபெற்றது. ஏழு அடுக்கு மாளிகை இது. சிலப்பதிகாரக் காட்சிகளை விளக்கும் சிற்பங்களும், ஓவியங்களும் உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

312 ஹெக்டேர் பரப்பளவில் வன விலங்குகள் சரணாலயம் உள்ள இடம் கோடியக்கரை. பல வகை விலங்குகள், வெளிநாட்டுப் பறவைகள் இங்கே உள்ளன. இங்கே இருக்கும் கடற்கரையில் கடல் குதிரைகள், கடல் ஆமைகள், கடல் பசுக்கள் ஆகியவற்றையும் பார்க்கலாம். ஏராளமான பவளப்பாறைகளும் இங்கே உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மேலும், மத நல்லிணக்கத்தைச் சொல்லும் வகையில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், சிக்கல் முருகன் கோயில் ஆகியவை உள்ள மாவட்டம் நாகப்பட்டினம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தஞ்சாவூர், திருவாரூர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது தஞ்சை பெரிய கோயில். ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தமிழரின் பெருமையைச் சொல்லும் 1,000 ஆண்டுகளைக் கடந்த கோயில்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ளது 'சிவகங்கைப் பூங்கா. உலகின் முதல் 'மழைநீர் சேகரிப்புத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது இங்குதான். பெரிய கோயிலில் விழும் மழை நீர், இந்தப் பூங்காவின் குளத்துக்கு வந்து சேர்வதுபோல் ராஜராஜ சோழன் பாதை அமைத்திருக்கிறார்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தஞ்சை நகரின் மற்றொரு சிறப்பான இடம் சரபோஜி மன்னர்கள் அரண்மனை. பழங்கால கலைப் பொருட்கள், சரபோஜி மன்னர் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்களைக் கண்டு ரசிக்கலாம்.  

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தஞ்சாவூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ளது தாராசுரம். இங்கே உள்ள ராஜ ராஜேஸ்வரன் கோயில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய கோயில்களில் ஒன்று. அதிராம்பட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில், கடற்கரை ஓரமாக கட்டப்பட்டுள்ள மனோரா, இரண்டாம் புலிக்கேசியுடன் போரிட்டு வென்றதன் நினைவாக சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருவாரூர் என்றதும் நினைவுக்கு வருவது தேர். நம் நாட்டின் மிகப் பெரிய கோயில்களுள் ஒன்று திருவாரூர் கோயில். தமிழ்நாட்டின் பெரிய தேர், திருவாருர் கோயில் தேர். இங்கே ஆண்டு தோறும் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ளது அலையாத்திக் காடு. இங்கே 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 73-க்கும் அதிகமான மீன் இனங்கள் உண்டு. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளிநாட்டுப் பறவைகளின் சரணாலயமாகவும் விளங்கும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பறவைகளுக்கான மற்றொரு சரணாலயமாக இருப்பது வடுவூர் ஏரிப் பகுதி. கிட்டத்தட்ட 178 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இங்குள்ள ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்துக்கான நடைபாதை, பறவைகளுக்கு அருகிலேயே உங்களைக் கூட்டிச் செல்லும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

இந்தியாவின் முதல் 'முனிசிபாலிட்டி’ உருவான இடம் மன்னார்குடி. இந்த ஊரில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் 1,000 கால் மண்டபத்தோடு பிரமாண்டமாக இருக்கும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருச்சி, கரூர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முக்கொம்பு. இங்கே உள்ள அணையின் பெயர் மேலணை. கல்லணையை மாதிரியாகக்கொண்டு கட்டப்பட்ட அணை. இங்கே மிகப் பெரிய பரப்பளவில் பூங்கா உள்ளது. மெகா ராட்டினங்கள் முதல் ஊஞ்சல் வரை ஒரு நாள் முழுக்கப் பொழுதுபோக்கலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ள இந்த மலைக்கோட்டையின் உயரம் 215 அடி. 417 படிக்கட்டுகள் உள்ளன. இது 6-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் ஆரம்பிக்கபட்டு நாயக்க மன்னர்களால் முடித்துவைக்கப்பட்டது. இங்கே உள்ள குடைவரைக் கோயில்களிலும் அதிசயிக்கத்தக்கவை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருச்சிக்கு மிக அருகிலேயே உள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். விஷ்ணு கோயில்களில் மிகவும் பிரமாண்டமானது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருச்சியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கரிகாலன் கட்டிய கல்லணை. தமிழகத்தின் மிகவும் பழமையான அணை. பென்னி குக்கின் முல்லைப் பெரியார் அணைக்கு மிகவும் முன்னோடி இது. இந்தக் கல்லணையின் நீளம் 1,080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் வடக்கே 80 கி.மீ தொலைவில் உள்ளது பச்சைமலை. நிறைய வனவிலங்குகளும், நீர்நிலைகளும்கொண்டது. டிரெக்கிங் போன்ற சாகஸப் பணங்களுக்கு ஏற்ற இடம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மணப்பாறைக்குத் தெற்கே உள்ளது பெண்ணையாறு அணை. பெருமாள் மலை மற்றும் செம்மலையின் மேல் கட்டப்பட்டு இருக்கும் இந்த இடம், சின்னச் சின்ன மலையேற்றங்கள், சுற்றுச்சூழல் கேம்ப், மீன் பிடித்தல் போன்றவைக்கு ஏற்றது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மேலூரில் இருக்கிறது அய்யனார் கோயில். கோயிலைச் சுற்றி களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய பெரிய குதிரைகளின் சுடு சிற்பங்கள், இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருச்சியில் இருந்து 72 கி.மீ தொலைவில் புளியஞ்சோலை. இங்கே இருக்கும் சுனைகளும், அருவிகளும் இதற்குக் கூடுதல் அழகு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஆரம்ப கால சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது உறையூர். அப்போது இருந்த உறையூர் 'மணற் புயலால்’ அழிந்துபோய்விட்டதாகக் கருதப்படுகிறது. கோச்செங்கன் சோழன் என்ற மன்னர் இங்கே 78 மாடக் கோயில்களைக் கட்டினார்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வணிக நகரமான கரூர், கோயில்களுக்கும் புகழ்பெற்றது.

புதுக்கோட்டை, சிவகங்கை

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

புதுக்கோட்டை அருங்காட்சியகம் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் உள்ளது. இங்கே புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கூத்துக் கலைப் பொருட்கள் உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது சித்தன்னவாசல். இங்கே கி.மு 2000 நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி கல்வெட்டு, உலகப்புகழ் பெற்ற ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில்கள், சமணர் படுகைகள், கண் கவர் பூங்கா எனப் பிரமிப்பூட்டும் பல பகுதிகள் உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 15 கி.மீ உள்ளது, திருமயம் கோட்டை. இங்கே உள்ள மலைக்கோட்டை சரித்திரப் புகழ் பெற்றது. ஓர் உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும், கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ளது. கோட்டையின் உச்சியில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கியும், கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகளும் உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஹைதர் அலிக்கும், தொண்டைமானுக்கும் இடையே 1780-ம் ஆண்டு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போர் நடந்த இடம், ஆதனக்கோட்டை. இந்தப் போர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களின் வரலாற்று ஆதாரமாக இந்தக் கோட்டை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டம் தொடர்பான நிறைய பதிவுகளைக்கொண்டது கீரனூர். புதைகுழிகளும் அப்போதைய வேலை தொடர்பான ஆவணங்களும் இங்கே உள்ளது. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஒன்றும் உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் இருந்து 19-ம் நூற்றாண்டு வரை முக்கியமான ராணுவத் தலைமையகமாகச் செயல்பட்டு வந்துள்ளது கீழானிலைக் கோட்டை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருக்குன்றக்குடி என்று அழைக்கப்படும் பாறைக் கோயில் கூனாண்டார் கோயில். இரண்டாம் நந்திவர்மனால் உருவாக்கப்பட்டது. திருக்கோகர்ணத்தில் உள்ள கோகர்ணீஸ்வர ஆலயத்தைப் போன்றது இதன் வடிவமைப்பு. 101 தூண்களுடைய ரத மண்டபமும் துவாரபாலகர்கள் சிலையும் இங்குள்ள அழகான கலை அமைப்புகள்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஒரே பாறையில் கட்டப்பட்ட இரண்டு குகைக் கோயில்கள் உள்ள இடம், மலையாடிபட்டி. குண்டலினி யோகா தொடர்பான சிலைகள் நிறைய உள்ளன. இவை எல்லாமே 1,200 வருடப் பழமையானவை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வீரத்துக்குப் புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம், கோயில்களுக்கும் புகழ்பெற்றது. அவற்றில் முக்கியமானது பிள்ளையார்பட்டி கோயில்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி வாழ்ந்த இடம் பிரான்மலை, கம்பரின் நினைவகம் உள்ள நாட்டரசன்கோட்டை எனச் சரித்திர இடங்களையும் காணலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ராமநாதபுரம், தூத்துக்குடி

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தமிழகப் புண்ணியத் தலங்களில் சிறப்பானது ராமேஸ்வரம். இந்தக் கோயிலில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால், பாவங்கள் விலகும் என்ற நம்பிக்கை உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம். 1914-ல் கட்டப்பட்ட இந்தப் பாலம் சமீபத்தில் தனது நூற்றாண்டைக் கடந்தது. இது இந்தியாவின் இரண்டாவது நீளமான கடல் வழிப் பாலம் ஆகும்.  

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பாம்பன் பாலத்துக்கு மேற்கே உள்ளது, 'குருசடைத்தீவு’. இயற்கை மற்றும் கடல் ஆய்வாளர்களுக்கான சொர்க்க பூமி. ஏராளமான மீன் இனங்கள், பவளப் பாறைகள் உள்ள பகுதி இந்தத் தீவு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தூத்துக்குடி மாவட்டம், கடலோரத்தில் இருக்கும் அழகிய கிராமம், மணப்பாடு. இங்கே உள்ள தேவாலயத்துக்கு அருகில் சவேரியார் குகை உள்ளது. ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான சவேரியார், இந்தக் குகையில் தங்கிக் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினாராம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். கோயிலை ஒட்டிய கடற்கரையும். சரவணப்பொய்கைப் பூங்காவும் பொழுதுபோக்குக்கு ஏற்றது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கோவில்பட்டியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கே இருக்கும் கழுகாசலமூர்த்தி திருக்கோயில் ராமாயணத்தோடு தொடர்புடையது. அருகே உள்ள மலையில் சமணர்கள், புத்தர்களின் சிலைகள் உள்ளன. இந்த இடத்தை 'தென்னகத்தின் எல்லோரா’ என்பர்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரனாரின் பிறந்த வீடு, ஓட்டப்பிடாரத்தில் உள்ளது. தற்போது வ.உ.சி-யின் வீடு, பொது நூலகமாகச் செயல்படுகிறது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆட்சி செய்த இடம் பாஞ்சாலங்குறிச்சி. தூத்துக்குடியில் இருந்து 30 கி.மீ தொலைவில் வீரபாண்டியக் கட்டபொம்மன் கோட்டை உள்ளது. இதில் ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. ஆங்கிலேயர்களின் பீரங்கியால் தாக்கப்பட்ட கட்டபொம்மனின் கோட்டை, முள்வேலி அமைத்துப் பாதுகாக்கப்பட்டுகிறது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருநெல்வேலி  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கயத்தாறில், 16.10.1799 அன்று கட்டபொம்மன் புளியமரத்தில் தூக்கில் இடப்பட்டதன் நினைவாகச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மகாகவி பாரதியார் பிறந்த வீடு தூத்துக்குடியில் இருந்து 44 கி.மீ தொலைவில் உள்ள எட்டயபுரத்தில் உள்ளது. பாரதி பயன்படுத்திய பொருட்கள், பாரதி அமர்ந்து கவிதை எழுதிய மாடிப்படி, திண்ணை ஆகியவற்றைக் காணலாம். பேருந்து நிலையம் எதிரில், பாரதியார் மணி மண்டபம் உள்ளது. பாரதியின் வீட்டுக்குச் செல்லும் வழியில், கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனின் அரண்மனையும் பின்புறம், உமறுப் புலவரின் மணிமண்டபமும் உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பனிமய மாதா ஆலயம் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பனிமய அன்னை ஆலயம், தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ளது. இந்தத் தலத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ரோஸ் பார்க் என்ற பூங்கா உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருநெல்வேலி

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது, பாபநாசம். இங்கே மலைக்கு அடியில் அகஸ்தியர் அருவி உள்ளது. பாபநாசத்தில் இருந்து மலைக்கு மேல் 10 கி.மீ. தொலைவில்தான் காரையார் அணைக்கட்டு. இதற்குச் செல்லும் வழியில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோயிலும் உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மணிமுத்தாறு அணைக்கட்டு. தென்தமிழகத்தில் உள்ள பெரிய அணைக்கட்டுகளில் ஒன்று. மணிமுத்தாறில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது சிங்கம்பட்டி. இந்தியாவில் ஜமீன் ஆட்சி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் தமிழகத்தில் சிங்கம்பட்டி ஜமீனும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு ஜமீனும் மட்டும் உள்ளன. சிங்கம்பட்டி அரண்மனையில் குதிரை வண்டி, ராஜ உடைகள், அப்போதைய ஜமீனுக்கு விவேகானந்தர் பரிசாகக் கொடுத்த மர யானை போன்ற பொருட்களைக் காணலாம். அனுமதி இலவசம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

அருவிகள் பல இருந்தாலும் குற்றால அருவிகளில் உள்ள மகத்துவம் வேறு எங்கும் இல்லை. நடராஜர் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்று குற்றாலம் சித்திரசபை. இங்கே உள்ள குற்றாலநாதர் திருக்கோயில் சுவரில் மூலிகைகளால் வர்ணம் தீட்டப்பட்ட நடராஜர் உருவமும் உள்ளது. தவிர, குற்றாலத்தில் சுட்டிகளுக்காக இரண்டு பெரிய பூங்காக்கள் உள்ளன.  

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ளது, மாவட்ட அறிவியல் மையம். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், தேசிய அறிவியல் காட்சிச் சாலைகளின் பிரிவாகச் செயல்படுகிறது. கடல் பற்றி விரிவான மூன்று கண்காட்சிகள், கோளரங்கம், அறிவியல் மற்றும் நாடகக் காட்சி, நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, மற்றும் 5 ஏக்கர் பரப்பில் அறிவியல் பூங்கா உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

களக்காடு வனவிலங்கு சரணாலயம் நெல்லையில் இருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே புலிகள், சிங்கவால் குரங்கு, நீளவால் குரங்கு அதிகம் உள்ளன. வன அலுவலகத்தில் அனுமதி பெற்று வாகனத்தில் செல்லலாம். நெல்லையில் இருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் உள்ளது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கிருஷ்ணாபுரம். இங்கே உள்ள பெருமாள் கோயிலில் உள்ள கற்சிற்பங்கள் நாயக்கர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. பழங்காலத்து நாணயங்கள், பொருட்கள், நூற்றாண்டுகளுக்கு முன்பு மண்ணுக்குள் புதைந்த சிலைகள், முதுமக்கள் தாழிகள், தொல்லியல் துறை சார்ந்த பொருட்கள் ஆகியவற்றைக் காணலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நெல்லை சந்திப்பில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது நெல்லையப்பர் கோயில். சிவபெருமான் திருநடனம் புரிந்த 5 சபைகளில், இது தாமிர சபையாகும். கி.பி 7-ம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாற பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருவள்ளுவர் இரட்டைப் பாலம் இந்தியாவிலேயே முதன்முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம். நெல்லை சந்திப்பில் உள்ளது. இது, ரயில் பாதையைக் கடப்பதற்காகக் கட்டப்பட்டது. 800 மீட்டர் நீளத்துடன், 25 குறுக்குத் தூண்கள், 13 வில்வளைவுத் தூண்கள் உடையதாக 30.30 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நெல்லையில் இருந்து 72 கி.மீ. தொலைவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது கப்பல்மாதா திருத்தலம். கோவாவைச் சேர்ந்த இறையியல் திருச்சபையினரால் 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கன்னியாகுமரி

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தமிழகத்தின் தென் எல்லை கன்னியாகுமரி. இங்கே சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காணலாம். வானம் வாரி இறைக்கும் வர்ணஜாலம் அது. முக்கடலும் சங்கமிப்பது இங்குதான். கடற்கரையில் காந்தி மண்டபம் உள்ளது. காந்தியின் அஸ்தி இங்கே பாதுகாக்கப்படுகிறது. கடலுக்கு நடுவே விவேகானந்தர் பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளன. இந்த இரண்டையும் பார்க்கப் படகில் செல்வது ஜாலிப் பயணம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கன்னியாகுமரிக்கு 2 கி.மீ. முன்பே அரசு பழப்பண்ணை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் தன் அரண்மனைத் தேவைக்காக மாமரங்களை நடவு செய்தாராம். தற்போது தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. இந்தியாவிலேயே பழப்பயிர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரே பண்ணை. 300-க்கும் மேற்பட்ட மாமர வகைகள் இங்கே உள்ளன. எல்லா நாட்களிலும் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது சுசீந்திரம் தாணுமலையான் திருக்கோயில். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு சேரக் காட்சி அளிக்கும் தலம். இங்கே உள்ள அனுமன் சிலை 18 அடி உயரம்கொண்டது. இந்தத் தலத்தில் விநாயகர், பெண் வடிவில் காட்சி அளிக்கிறார்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயரமும் 1 கி.மீ நீளமும்கொண்டது இந்தப் பாலம். திருவட்டார் அருகில் உள்ள மாத்தூர் என்ற இடத்தில் உள்ளது. தொங்கு பாலம், தொட்டிப் பாலம், மாத்தூர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருவிதாங்கூர் மன்னரின் சமஸ்தானத்துக்கு உட்பட்ட அரண்மனை உள்ள இடம் பத்மநாதபுரம். அரண்மனையின் உள் பகுதி மட்டும் 6 ஏக்கர் பரப்பில் உள்ளது. போர்த் தளவாடங்கள், பழங்காலப் பொருட்கள் ஆகியன உள்ளன. இங்கே உள்ள ராமசாமி ஆலயத்தில் ராமாயண இதிகாசத்தில் இருந்து பல காட்சிகள் 45 பிரிவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

 நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது வட்டக்கோட்டை. பண்டைய மன்னர்கள் ஆட்சி செய்த கோட்டை ஒன்று இங்கே உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திற்பரப்பு அருவி. குற்றாலத்தைப் போல் குளித்து மகிழ ஏற்ற இடம்.

தேனி

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தேனியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வைகை அணை. இங்கே சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்கா உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வைகை அணையில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது வனவியல் பயிற்சிக் கல்லூரி. தமிழ்நாட்டிலேயே இங்கேதான் வனவியல் பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கே உள்ள அருங்காட்சியகத்தில் 1,320 வகையான விலங்குகள் பதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அருங்காட்சியகம் இதுதான். சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் அனுமதி உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தேனியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில். 12-ம் நூற்றாண்டில் ராஜசிம்ம பாண்டியன் என்பவரால் கட்டப்பட்டது. இங்கே எடுக்கப்பட்ட செப்பேடுகளில் இருந்துதான் நாம் இன்று படிக்கும் தமிழ் மன்னர்களின் வரலாறுகள் கிடைத்தன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தேனியில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது குரங்கனி. தென்னிந்தியாவிலேயே உயரமான பகுதி இது (1,600 அடி). இங்கே முதுவான் என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்துகொள்ளலாம். இங்கே ஓர் அருவியும் உள்ளது.  

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தேனியில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது மேகமலை. எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால், இந்தப் பெயர். மதுரையை எரித்த கண்ணகி, இந்த வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இங்கே ஒரு கண்ணகி கோயிலும் உள்ளது. இதன் அடிவாரத்தில் 'சின்ன சுருளி’ என்ற அருவியும் உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மேகமலையில் இருந்து வரும் மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு மூன்றும் இணைந்து  விழும் இடம் சுருளி அருவி. மூலிகைகள் அதிகமாக விளையும் பகுதி. இங்கே ஒரு குகைக் கோயில் உள்ளது. அது சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது.

மதுரை

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மதுரை தமுக்கம் மைதானம் அருகில் உள்ளது காந்தி மியூசியம். காந்தியின் அரிய புகைப்படங்கள் மற்றும் அவரது குடில் உள்ளன. இங்கே உள்ள அருங்காட்சியகத்தில் பழங்காலச் சிலைகள், கல்வெட்டுகள், கலாசாரச் சிற்பங்களையும் காணலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மாலை நேரத்தில் சுட்டிகளுக்கு செமத்தியான ஜாலி ஸ்பாட் ராஜாஜி பூங்கா. ராட்டினம் போன்று விளையாட நிறைய அம்சங்கள் இருக்கின்றன. காந்தி மியூசியத்துக்கு மிக அருகில் உள்ளது இந்தப் பூங்கா.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

1636-ல் மதுரை மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது திருமலைநாயக்கர் மஹால். இங்கே உள்ள ஓவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலமும்கொண்டவை. இங்கே, மாலை வேளைகளில் நடைபெறும் ஒலி, ஒளிக் காட்சிகள்... திருமலை நாயக்கரின் காலத்தின் கலை, வீரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோயில். தமிழத்தில் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று. பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் எல்லாம் கோயிலின் ஹைலைட்ஸ்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.  

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திருப்பரங்குன்றம் கோயிலின் மலை அடிவாரத்தில் சுட்டிகளுக்காகவே அமைக்கப்பட்டது எக்கோ பார்க். ஹெர்பல் பிளான்ட் ஹவுஸ், அறிவியல் கோட்பாடுகளை நேரடியாகச் செய்துபார்க்கும் வகையில் அமைந்து இருக்கும் சாதனங்கள் எனச் சுட்டிகளுக்கு அறிவுத் தீனி போடுகிறது. மாலையில் இங்கு நீர் ஊற்று நடனம் நடைபெறும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

விருதுநகர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ராஜபாளையம் அருகே 5 கி.மீ. தொலைவில் உள்ளது அய்யனார் அருவி. அடர்ந்த வனப் பகுதிக்கு இடையே சிறு குன்றின்மீது அமைந்துள்ள அய்யனார் கோயிலும், அதனருகே சுமார் 15 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியும் இதன் சிறப்புகள்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

காமராஜர் நினைவு இல்லம். விருதுநகர், காமராஜர் பிறந்து வளர்ந்த இடமாகும். தற்சமயம் அவரது உடுப்புகள், கைக்கடிகாரம், இதர பொருட்கள், அரிய புகைப்படங்களுடன் அருங்காட்சியகமாக உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

 வத்திரயிருப்பு அருகே அமைந்துள்ளது பிளவக்கல் அணை. இந்த அணையும் அதனைச் சுற்றி இருக்கும் வனப் பகுதிகளும் இங்கே ஒரு பூங்காவை அமைத்து, நல்ல சுற்றுலாத் தலமாகத் திகழ வாய்ப்பு அளித்துள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

செண்பகத்தோப்பு திருவில்லிப்புத்தூர் அருகே பரந்து விரிந்துள்ள வனப் பகுதி. புலி, சிறுத்தை, புள்ளிமான், பலவித மான்கள், சாம்பல் நிற அணில் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ள சரணாலயம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

திண்டுக்கல்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மலைகளின் இளவரசி கொடைக்கானல், கோடைக்காலத்துக்கு ஏற்ற சுற்றுலாத்தலம். வத்தலக்குண்டில் இருந்து 61 கி.மீ. தொலைவில் உள்ளது. டம்டம் பாறை, வெள்ளி அருவி, பிரையன்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, கொடைக்கானல் லேக், பாம்பர் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, தொப்பி தூக்கிப் பாறை, கோக்கர்ஸ் வாக் எனப் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் மிக நீளமானது. மே மாதம் கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி நடைபெறும். அப்போது, சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு  போட்டிகள் வைத்துப் பரிசு அளிப்பர்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் கொடைக்கானல் பகுதியில், கிழக்குப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி மலையில் அமைந்திருக்கிறது இயற்கை எழில் தவழும் தடியன்குடிசை. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காபி, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய்த் தோட்டங்கள் இந்தப் பகுதியில் அதிகம் உள்ளன. ஆரஞ்சு, அவகோடா, எலுமிச்சை மரங்கள் நிறைந்துள்ளன. ஏலக்காய் வாரிய அலுவலகம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இங்கே உள்ளன. வெளவால் தோற்றம்கொண்ட குள்ளர்கள் வாழ்ந்த குகைகளைக் கண்டுகளிக்கலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தடியன்குடிசைக்கு வடக்குப்புறம் ஆடலூர் செல்லும் வழியில் குடகனாறு உள்ளது. ஆடலூர் பன்றிமலையின் கீழ்ப் பகுதியில் பளியர் மலைவாழ் மக்கள் மலைக் குகையில் வசிக்கின்றனர்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தடியன்குடிசையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பட்லாங்காடு பகுதியில் தேனீ வளர்ப்புப் பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன. எப்போதும் குளுமையாக இருக்கும் இதமான பகுதி.

அரியலூர், பெரம்பலூர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ வடக்கே, அரியலூர் மாவட்டத்தில் உள்ளது கரைவெட்டிப் பறவைகள் சரணாலயம். 45 ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் இந்த சரணாலயத்தில், நவம்பர் மாதத்தில் இரண்டரை லட்சம் பறவைகள் வரை வரும். மே மாதம் வரை பறவைகளைக் கண்டு களிக்கலாம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

அருமையான சிற்பங்கள் மற்றும் இயற்கை அழகு தரும் இடம் கங்கை கொண்ட சோழபுரம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பெரம்பலூரில் இருந்து 17 கி.மீ. வடக்கே உள்ளது ராஜன்குடிக் கோட்டை. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, அந்தக் காலக் கட்டுமானப் பணிக்கு சிறந்த சான்று.

 சேலம், நாமக்கல்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சேலம் என்றதும் குளுகுளு நினைவுக்கு வருவது ஏற்காடு மலை. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது இந்த மலை வாசஸ்தலம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சேலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விநாயகா மிஷின்ஸ் கோயில். இது 1,108 லிங்கங்களைக்கொண்ட மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சேலம் மாவட்டத்தின் மற்றொரு அடையாளம், தாரமங்கலத்தில் இருக்கும் கைலாசநாதர் கோயில். மிகவும் சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்று.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நாமக்கல் என்றதும் நினைவுக்கு வருவது ஒரே கல்லினாலான 200 அடி உயர ஆஞ்சநேயர் சிலை. நரசிம்மர், ரங்கநாதசுவாமி கோயில்களும் இங்கே முக்கியமானவை.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

சித்தர்கள் வாழும் மலை எனப்படும் கொல்லிமலை இங்குதான் உள்ளது. மருத்துவ மூலிகைகள் நிறைந்த மலை. இங்கு சென்று வந்தாலே ஆரோக்கியம் கூடும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கொல்லிமலையில் உள்ளது அறப்பளீசுவரர் கோயில். இதன் கீழ்ப்புறம் செங்குத்தாக உள்ள 1000 படிகளை  இறங்கிக் கடந்தால், அதி அற்புதமான  ஆகாய கங்கை  அருவியின் சாரலில் நனையலாம்,  சற்று தள்ளி நீரோட்டத்தில்  குளிக்கலாம்.

ஈரோடு, திருப்பூர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பகுத்தறிவுத் தந்தை பெரியார் பிறந்த ஊர் ஈரோடு. இங்கே உள்ள பெரியார் நினைவகத்தில் அவர் பயன்படுத்திய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ளது முக்கூடல். பவானி, காவிரி, அமுதா ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம். இங்கே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் சிறப்பு வாய்ந்தது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பவானி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பவானி சாகர் அணையும், கோபிக்கு அருகில் உள்ள கொடிவேரி அணையும் காணவேண்டிய இடங்கள்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

ஈரோடு மாவட்டத்தின் மற்றொரு சிறப்பு வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வணிக நகரங்களில் மிக முக்கியமானது திருப்பூர். விடுதலைப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரனின் நினைவகம் இங்கே பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது புல்மலைக் காடுகள். 'ஷோலா’ என்ற அரிய வகைக் காட்டுப் பகுதி இது. மரங்கள் போல் வளர்ந்த மிகப் பெரிய புற்களை இங்கே பார்க்கலாம். வனவிலங்குகளும் உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

உடுமலைப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சலிங்கம் அருவி. டிரெக்கிங் செல்ல ஏற்ற இடம்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கோயம்புத்தூர்

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கோவை - பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ்சாலையில் உள்ளது குரங்கு அருவி. அதற்கு அருகில் ஆழியார் அணை உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

உடுமலைப்பேட்டையில் இருக்கும் அமராவதி அணைக்கு அருகே உள்ள முதலைப் பண்ணை காணவேண்டிய இடங்களில் ஒன்று.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

உடுமலை - பழனி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது திருமூர்த்தி அணை.  இங்கே உள்ள நீச்சல் குளமும் படகு சவாரியும் சுட்டிகளை உற்சாகப்படுத்தும்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

கோவை மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று டாப் ஸ்லிப். இது ஆனைமலையின் ஒரு பகுதி. நீலகிரி பல்லுயிரியல் மண்டலத்தின் கீழ் வரும் இந்திரா காந்தி தேசியப் பூங்கா மற்றும் வன உயிர் சரணாலயம் இங்கே உள்ளது.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

பரம்பிக்குளம் வன உயிர் சரணாலயம், இரவிக்குளம் தேசியப் பூங்கா மற்றும் சின்னார் வன உயிர் சரணாலயம் ஆகியவை அருகில் அமைந்திருக்கும் சில முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் வன உயிர் சரணாலயம் முதுமலை தேசியப் பூங்கா மற்றும் வன உயிர் சரணாலயம். தற்போது புலிகள் காப்பகமாகவும் செயல்படுகிறது. 'நைட் சஃபாரி’ வசதியும் உண்டு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!
ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மலைக்கோயிலான மருதமலை உள்ளிட்ட கோயில்களும் கோவை மாவட்டத்தில் ஏராளமாக உள்ளன.

நீலகிரி

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

நீலகிரி என்றதும் உள்ளம் துள்ளும் இடம் ஊட்டி. பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன், தொட்டபெட்டா, லேக், ஆகியவை இந்த இடத்தின் சிறப்பு.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

குன்னூர் மற்றும் கோத்தகிரியும் பார்க்க வேண்டிய அற்புதமான பகுதிகள். சிம்ஸ் பார்க், செயின்ட் காத்ரினா நீர்வீழ்ச்சி, கொடநாடு வியூ பாயின்ட், டால்பின் நோஸ் என நிறைய இடங்கள் உள்ளன.

ஜோரா போகலாம் ஜாலி டூர்!

மற்றுறொரு சிறப்பான இடம் கூடலூர். முதுமலைக்காடுகள், பைக்காராவில் லேக், அருவி ஆகியவை நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

தொகுப்பு: கே.யுவராஜன்,    இ.கார்த்திகேயன்,

ஓவியங்கள்: முத்து ச.காளிராஜ்,  கா.பெனாசீர், சே.பிரசன்னா,  ச.பா.முத்துகுமார், ஜெ.ராம்குமார், பி.விவேக் ஆனந்த்.  

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தி.விஜய், எல்.ராஜேந்திரன்,  பா.காளிமுத்து, ஏ.சிதம்பரம்,   ரா.ராம்குமார், ஆர்.எம்.முத்துராஜ்

தே.தீட்ஷித், எஸ்.கேசவசுதன்

அடுத்த கட்டுரைக்கு