Published:Updated:

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

அறிவிழி

Published:Updated:
அறிவிழி
##~##

ந்த வாரக் கட்டுரையை இமெயிலில் அனுப்புவதற்கு முன்னதாக, பாஸ்டன் நகரக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய மைல்கல் நடந்திருக்கிறது. மாரத்தான் ஓட்டம் முடியும் இடத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான இரண்டு சகோதரர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்; ஒருவர் கைது செய்யப்பட்டு விட்டார். 'பிடித்தாகிவிட்டது. வேட்டை முடிந்தது. தேடல் முடிந்தது. டெரர் முடிந்தது. நீதி வென்றது. குண்டுவெடிப்பு குற்றவாளியைக் கைது செய்தாகிவிட்டது’ காவல் துறையால் அனுப்பப்பட்ட இந்த ட்வீட்டுக்குப் பின்னர்தான் பாஸ்டன் நகரமே பெருமூச்சுவிட்டது. இதுபோன்ற சம்பவங்களில் ட்விட்டர் மிக முக்கியத் தகவல் தொடர்புச் சாதனமாக மாறிவிட்டது தெளிவாகத் தெரிகிறது. பாரம்பரிய ஊடகங்கள், டி.வி. உள்ளிட்டு, எதிலும் ட்விட்டர் கொடுக்கும் அளவுக்குத் தகவல்களை வேகமாகக் கொடுக்க முடிவதில்லை என்பதுதான் காரணம். சமூக ஊடகங்களின் பயனீடு கிடுகிடுவெனப் பரவலாகிவரும் இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்தில் அரசுத் துறைகள் இதைச் செலவு குறைந்த மக்கள் தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்தலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பை தி வே, குண்டுவெடிப்புக் குற்றவாளிகளில் ஒருவர் ட்விட்டரைத் தொடர்ந்து பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. குண்டு வெடித்ததற்குப் பின்னர், 'நான் கவலை இல்லாத ஆளு’ என அனுப்பியிருக்கும் ட்வீட்தான் கடைசி.

அறிவிழி

சாண்டியாகோ ஸ்வாலோ என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சாண்டியாகோ மிகவும் பிரபலமான நபர். நீண்ட தாடை, மயக்கும் நீல நிறக் கண்கள், லேசான சாம்பல் நிறம்கொண்ட அடர்த்தியான தலைமுடி என ஹாலிவுட் நடிகரைப் போல இருக்கிறார் சாண்டியாகோ. அவரது ட்விட்டர் பக்கம் ட்விட்டர் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. பெருமைக்குரிய TED மாநாடுகளில் சாண்டியாகோ கொடுத்திருக்கும் உரைகளை இணையத்தில் பார்க்க முடிகிறது. அவரது தனிப்பட்ட வலைதளத்திலோ அல்லது விக்கிபீடியா பக்கத்தைப் பார்த்தால், அவர் நூலாசியர், பேச்சாளர், கல்வியாளர் என்பதுடன் உலகம் முழுதும் சமூக ஊடகத்தின் மூலம் எப்படி எளிதாகவும், வலுவாகவும் செய்திகளைக் கொண்டுசெல்ல முடியும் என்ற திறமை இருப்பதாகச் சொல்கிறது. அவரது ட்விட்டர் பக்கத்தை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள். அவரது ட்வீட்டுகள் விறுவிறுப்பானதாக இருக்கின்றன.

ஒரு குட்டித் தகவலை இன்னும் சொல்லவில்லையே... சாண்டியாகோ உண்மையான நபர் இல்லை. பதிவர் ஒருவரின் கற்ப னையில் ஸ்மார்ட்டாக உருவாக் கப்பட்ட கற்பனைப் பாத்திரம். அவரது புகைப்படம்கூட பல புகைப்படங்களை போட்டாஷாப்பில் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டது. இணையத் தில் இப்படிப் போலிகளை எப்படி அழுத்தந்திருத்தமாக உருவாக்கலாம் என்பதை நிரூபிக்க கெவின் ஆஷ்டன் என்ற இந்தப் பதிவர் செய்த ஸ்டன்ட்டின் விளைவுதான் சாண்டியாகோ. இந்தச் செய்தி இந்த வாரத்தில் வெளியானதும், ட்விட்டர் அந்தப் பக்கத்தை மூடிவிட்டது. பலரின் கூக்குரலுக்குப் பின்னர் இந்தக் கட்டுரை எழுதும்போது மீண்டும் பக்கத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால், '‘Verified’ முத்திரை எடுக்கப்பட்டுவிட்டது.

அறிவிழி

சாண்டியாகோவின் வலைதளம்:  santiagoswallow.com அவரது ட்விட்டர் பக்கம்: https://twitter.com/SantiagoSwallow

சாண்டியாகோவின் கதை இணையத்தில் பார்க்கும் எதையும் நம்பிவிட முடியாது என்பதற்கு நல்ல உதாரணம். இணையத்தில் வெளியாகும் தகவல்களைப் பெரும்பாலான பயனீட்டாளர்கள் வெள்ளந்தியாக நம்பிவிடுவது கவலைக்குரியதாகவே இருக்கிறது. சமீபத்திய உதாரணம்: தமிழகப் பதிவர் அதிஷாவின் வேடிக்கை முயற்சி. வயதில் நாற்பதைத் தொடுபவர்களுக்கு நான் சொல்வதைப் பார்த்த அனுபவம் இருக்கும். இணையம், செல்பேசி, குறுஞ்செய்தி இத்யாதிகள் வரும் முன்னர் வைரல் பரவலுக்கென பகீர் தபால் கார்டு வீட்டுக்கு வரும். அதில் 'இந்தத் தபால் அட்டையில் இருக்கும் விவரங்களை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏழு பேருக்கு அப்படியே காப்பி எடுத்து அனுப்ப வேண்டும். இங்ஙனம் அனுப்பிய நபருக்கு செல்வம் கிடைத்தது; அனுப்பாமல் கிழித்துப்போட்ட மற்றவர்களுக்குப் பக்கவாதம் வந்துவிட்டது’ என்றெல்லாம் காமெடி திகிலாக இருக்கும். இதே போன்ற டெக்னிக்கைப் பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் பக்திப் படம் ஒன்றை ‘Share it  7 seconds’ என்ற தலைப்புடன் பதிவேற்றம் செய்து, அதனுடன் மேற்கண்ட தபால் போலவே எழுதிவைக்க, சில நாட்களுக்குள் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் ஷிலீணீக்ஷீமீ செய்திருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் இதற்குப் பின்னிருக்கும் பரிசோதனை முயற்சியைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது. எழுத்தாளர் ஒருவர், 'இதுபோல மூட பக்தியைப் பரப்பாதீர்கள்’ என்று அதிஷாவைக் கண்டித்திருப்பதுதான் உச்சகட்டக் காமெடி!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism