Published:Updated:

''நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கணும்!''

பேஸ்கட் பால் பேபி அட்வைஸ்இரா.சரவணன்

''நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கணும்!''

பேஸ்கட் பால் பேபி அட்வைஸ்இரா.சரவணன்

Published:Updated:
 ##~##
'க
ன்னித் தீவுப் பெண்ணா... கட்டழகுக் கண்ணா’- நீத்து சந்திராவை நேரில் பார்த்துவிட்டு கவிஞர் ஃபீல் செய்து இருப்பார்போல... நேரில் பார்த்தால் நமக்கும் அதே! ரப்பருக்குச் சேலை கட்டியதுபோல வளைந்து நெளிந்து 'யுத்தம் செய்’ படத்தில் அமீரோடு ஆட்டம்போட்ட நீத்து சந்திரா, பீகார் மாநில பேஸ்கட் பால் சாம்பியன். டேக்வான்டோவில் பிளாக் பெல்ட்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''சின்ன வயசுல இருந்தே உடம்பை கேர் எடுத்துப் பார்த்துக்கணும்னு ரொம்ப அக்கறையா இருப்பேன். சொன்னா நம்ப மாட்டீங்க... நினைச்சா, சில நாட்களிலேயே வெயிட் ஏத்திக்கவும், அடுத்த சில நாட்களிலேயே வெயிட்குறைக்கவும் என்னால் முடியும். 'யுத்தம் செய்’ பாட்டுக்குக் கொஞ்சம் சதை போட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு. நாலே நாள்ல மூணு கிலோ வெயிட் போட்டேன். இப்போ 'ஆதிபகவன்’ படத்துல முன்னைவிட ஸ்லிம்மா நடிக்கிறேன். சரியான உணவையும், முறையான பயிற்சிகளையும் கடைபிடிச்சா நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கும்!'' - ஆச்சர்யம் விதைத்து அடக்கமாகச் சிரிக்கும் நீத்து, யோகா பயிற்சிகள் அத்தனையையும் ஆகக் கற்றவர்.

''நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கணும்!''

''தினமும் ஒரு மணி நேரம் ஹார்ட் யோகா பண்ணுவேன். உடம்போட அத்தனை உறுப்புகளுக்கும் வேலை கொடுக்கிறதுதான் அந்த யோகா. மெஷின்ல சிக்குன கரும்பு மாதிரி உடம்பு சக்கையாகிடும். அவ்வளவு சீக்கிரம் யாரும் ஹார்ட் யோகாவைக் கத்துக்கமுடியாது. ஆனா, வைராக்கியமா இருந்து கத்துக்கிட்டா, அதைவிட நம்ம உடம்புக்கு ஆரோக்கியமான விஷயம் வேற எதுவுமே இல்லை. லெஃப்ட், ரைட்னு உடலின் அத்தனை பாகங்களுக்கும் சமமான பயிற்சி அது. அந்தப் பயிற்சி ஸ்பீட் எடுக்க எடுக்க, உடம்புக்குள் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருக்கும். உடம்பு நம்ம கட்டுப்பாட்டில்தான் இயங்குதா இல்லையாங்கிற அளவுக்குச் சந்தேகம் வரும். ஆரம்பத்தில், இந்தப் பயிற்சியைச் செய்றப்ப கிறுகிறுன்னு இருக்கும். ஆனா, இப்போ ரசிச்சு ரசிச்சுப் பண்றேன்.

'ஆதி பகவன்’ ஷூட்டிங்குக்காக பாங்காக் போய் இருந்தப்ப, டைரக்டர் அமீர் சாரையும் ஹார்ட் யோகா கத்துக்கவெச்சேன். பத்தே நிமிஷத்துல அவர் உடம்பு தொப்பலா நனைஞ்சுடுச்சு. 'இதை எப்படிம்மா ஒரு மணி நேரம் பண்றே?’னு ஆச்சர்யப்பட்டுட்டார். நம்ம உடம்பு 24 மணி நேரமும் இயங்கிட்டுதான் இருக்கு. நமக்காக 24 மணி நேரமும் கஷ்டப்படுற உறுப்புகளின் நலனுக்காக நாம ஒரு மணி நேரம் கஷ்டப்படக் கூடாதா? ஷூட்டிங்னு எந்த நாட்டுக்குப் போனாலும், அந்த க்ளைமேட் டுக்கு ஏத்த மாதிரி என் உடம்பு செட் ஆகிடும். அதுக்குக் காரணமே இந்த யோகாதான்!

''நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கணும்!''

யோகா மட்டுமில்லை... காலையில் தினமும் 20 நிமிஷம் தியானம். சின்னதா ஓய்வு கிடைச்சாலும் ஜாக்கிங், ஜிம்னு உடம்போடு ஃப்ளெக்ஸிபிலிட்டி குறையாமப் பார்த்துக்குவேன். ஷூட்டிங்ல எவ்வளவு சிரமப்பட்டாலும், அடுத்த அஞ்சே நிமிஷத்துல ஃப்ரெஷ் ஆகிடுவேன். எந்த வேலையா இருந்தாலும் கடகட வேகத்தில் செய்வேன். ஓய்வு நேரத்திலும் உடம்புக்கு வேலை கொடுக்கிற மாதிரி ஏதாவது விளையாடிட்டே இருப்பேன். பேஸ்கட் பால் விளையாட்டில் நான் பட்டையைக் கிளப்புற ஆள். ஆனா, சினிமாவுக்கு வந்த பிறகு, தொடர்ச்சியா விளையாட முடியலை. இருந்தாலும் பாட்னாவுக்கு வந்துட்டா, பேஸ்கட் பால் விளையாடாமல் இருக்க மாட்டேன். 'நோ பிராப்ளம்’ படத்துக்காகத் தற்காப்புக் கலைகளைக் கத்துக்கிட்டேன். இப்போ, 'ஆதி பகவன்’ படத்துக்காக இன்னும் சில பயிற்சிகள் பண்ணிட்டு இருக்கேன். ஆனா, அதைவெளியே சொல்லக் கூடாதுன்னு அமீர் சார் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார்!''- ரகசியம் காக்கும் நீத்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான தீபத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஏந்திச் சென்றதை வாழ்வின் சிலிர்ப்பான தருணமாகச் சொல்கிறார்.

''வெறுமனே பயிற்சிகளால் மட்டும் உடம்பை இந்த அளவுக்கு நாம மாத்திட முடியாது. சரியான உணவு முறையும் முக்கியம். ஒரு நாளைக்கு மூணு வேளைன்னு சாப்பிடுறதே தப்பு. மூச்சு முட்டச் சாப்பிட்டுட்டு, சோம்பலாப் படுக்கிற இந்தியர்களோட உணவு முறையே தவறு. இரண்டு மணி நேரத்துக்கு ஒருதடவை சாப்பிடுவேன் நான். நல்ல நார்ச் சத்து உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து, மீடியமா சாப்பிடுவேன். சாப்பிடுறது ஒரு வேலை யாவே தெரியாது. உடம்பும் ஜீரணத்துக்குக் கஷ்டப்படாது. நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்திடுவேன். அதுக்குப் பதிலா பழங்கள் நிறையச் சாப்பிடுவேன். ஒரு நடிகையா என்னை எல்லோரும் ரசிக்கணும்னு நான் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறேனோ... அதைவிட 100 மடங்கு என்னை நானே ரசிக்கிறேன். அக்கறையா கவனிச்சுக்கிறேன். நம்ம உடம்பை நாம என்னிக்கு லவ் பண்ண ஆரம்பிக்கிறோமோ... அன்னிக்குத்தான் நம்ம உடம்புக்கு ஆரோக்கியத் திருநாள் ஆரம்பமாகும்!''-கண் சிமிட்டிச் சிரிக்கிறார் 55 கிலோ அழகி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism