Published:Updated:

முத்தான கையெழுத்து !

தூரிகை சின்னராஜ் படங்கள் : வீ.சக்தி அருணகிரி

##~##

'தேங்கும் குட்டை நீரைவிட, ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று நீரில்தான் ஆக்ஸிஜன் அதிகம். முடங்கும் மனிதர்களைவிட, இயங்கும் இதயங்களுக்குத்தான் இறக்கை முளைக்கும். அவர்களால்தான் லட்சியத்தின் இலக்கை எளிதில் எட்ட முடியும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அயராத கையெழுத்துப் பயிற்சியும், தளராத முயற்சியும் மிக்க நீங்கள் அழகாக எழுதுவதை ஒரு எழுச்சியாகவே எதிர்பார்க்கிறோம். உங்களிடமிருந்து நாங்கள் எழுதி அனுப்பச் சொல்லியிருந்த மாதிரிக் கையெழுத்துகள் மிகவும் அருமை. அதை மேலும் செம்மைப்படுத்த அடுத்த இதழ் முதல் ஆலோசனைகளை வழங்க உள்ளோம். இதுவரை எழுதி அனுப்பாதவர்கள் உடனே அனுப்புங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழ் எழுத்துகளில் க், ங், ச்... வரிசையில் மெய் எழுத்துகளான பதினெட்டும் உயிர் எழுத்துகளுடன் இணைந்து எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதைச்  சற்று ஆராய்வோம். அ எனும் உயிர் எழுத்துடன் இணைந்து க,ங,ச... என புள்ளியின்றி தோற்றமளிக்கிறது.

ஆ எனும் உயிர் எழுத்துடன் இணைந்து கா,ஙா,சா... என துணைக் காலை சேர்த்துக்கொள்கிறது.

முத்தான கையெழுத்து !

இதேபோன்றுதான் எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள...வரிசைகளில் £, ¦, §, ள, போன்ற துணை எழுத்துகள் மற்றும் வளைவு சுளிவுகளை எழுத்தின் வலது இடது புறங்களில் சேர்த்துக்கொள்கிறது. கொக்கி, கொம்புகளை, மேல், அல்லது அடிப் பாகத்தில் சேர்த்துக்கொள்கிறது. எனவே, நாம் எல்லா வரிசை எழுத்துகளையும் பயிற்சி செய்யவேண்டிய அவசியம் இருக்காது. பிற எழுத்துகளையும், எளிமையாகப் பயிற்சி செய்யலாம். இ, ஈ, உ, ஊ... வரிசைகளில் மட்டும்தான் எழுத்துகளுடன், கொக்கி, கொம்பு, வளைவு, நெளிவு, சுளிவுகள் அதிக அளவில் சேரும். அதற்கான பயிற்சி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எழுதிப் பழகுங்கள்.

இதுவரை கொடுக்கப்பட்ட பயிற்சித் தாள்களிலிருந்து இந்தப் பயிற்சித்தாள் சற்று எழுத்துகள் சிறிதாக்கப் பட்டுள்ளன. நீங்கள் இனி எழுதப்போகும் வழக்கமான அளவு இது.

'உயிர்த் தமிழ் பயிர் செய்வோம்’ என்கிற சுட்டியின் செல்ல வார்த்தையை இங்கே அடர்த்தியாய் தொடங்கி அடுத்தடுத்து மங்கலாய் கொடுத்துள்ளோம். இதில் வரும் நான்கு வரிக் கோடுகளில் நீங்கள் தொடர் பயிற்சி செய்து வாருங்கள்.

முத்தான கையெழுத்து !

வெற்றி உங்களை வாரி அணைத்துக்கொள்ள வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறது.

(எழுதுவோம்)

முத்தான கையெழுத்து !