யட்சன்
##~##

முதலில் படப்பிடிப்புத் தளத்துக் குள் நுழைந்துவிட்டதாகத்தான் செந்தில் நினைத்தான். ஒத்திகை பார்க்கும்போது துப்பாக்கி வெடித்து, கார் கண்ணாடி உடைந்திருக்கும் என்று சற்றே தலையை நிமிர்த்தினான். வாழ்க்கையின் மாபெரும் அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. டிரைவர் வலியில் முகம் சுளித்தாலும், சட்டென்று தொடைக்கு அடியிலிருந்து ஒரு ரிவால்வரை உருவினான். வெளியே பார்த்துச் சுட்டான். என்ன நடக்கிறது இங்கே? செந்தில் மிரண்டுபோனான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே நேரம்...

வி.எம்.

டைரக்டர் ஷங்கரின் நெற்றி சுருங்கியது.

'என்னடா சொல்ற..?'

'சார், தப்பு நடந்திருச்சு. டிரைவர் ஆள் மாத்தி அழைச்சிட்டு வந்துட்டாரு. செந்திலும் போனை எடுக்க மாட்டேன்றான்' என்று தலை குனிந்தான் அறிமுக இயக்குநர் ஜோசப் தங்கராஜ்.

'ரெண்டு நிமிஷத்துல ரஜினி சார் வந்துருவாரே... அவரை வெயிட் பண்ணவைக்க முடியுமா? வந்திருக்கிற பையன் எங்கே?'

பாரி, ஷங்கரைப் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிட்டான்.

'சார், நான் உங்க ரசிகன்!'

'இப்ப அதுக்கெல்லாம் நேரம் இல்ல... செந்தில் எங்க?'

'அவருக்குப் பதிலா நான் நடிக்கிறேன் சார்!'

'வெளையாடறியா? இதென்ன காலேஜா, அவனுக்குப் பதிலா நீ அட்டென்டன்ஸ் கொடுக்க? சூப்பர் ஸ்டார் வர்றாரு... பெரிய லெவல்ல

அறிமுகம் பண்ணலாம்னு நினைச்சுட்டு இருக் கோம்... இப்பப் போய்...' என்று முகம் சிவந்த ஷங்கர் சற்றே யோசித்தார்.

'உன் பேரென்ன..?'

'பாரி...'

'நீயும் நடிக்க ட்ரை பண்றவனா?'

'அ... ஆமாம் சார்' என்று பச்சையாகப் பொய் சொன்னான் பாரி.

ஷங்கரின் போன் ஒலித்தது. பேசினார். திரும்பினார்.

'ஜோசப், ரஜினி சார் கோடம்பாக்கம் பிரிட்ஜ் தாண்டிட்டாரு... சட்டுனு இவனை ரெடி பண்ணுங்க... என்ன சீனோ அவனுக்குச் சொல்லி அனுப்புங்க... பூஜை நல்லபடியா முடியட்டும்! சரியா வரலைன்னா, அப்புறம் இவன மாத்திடலாம்.'

பாரியின் கைகளை ஜோசப் பற்றிக்கொண்டான்.

'பிரதர், என்னோட எதிர்காலமே இப்ப ஒங்க கைல... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.'

'கவலைப்படாதீங்கண்ணே... சொல்லிக் குடுக் கறதை ஒழுங்கா பண்ணுவேன்.'

அறைக்குள் உடை மாற்றும்போது, பாரி தன் கத்திகளை அங்கே ஒரு இடுக்கில் மறைத்தான். வெளியில் வந்த பாரியை குணா ஆச்சர்யமாகப் பார்த்தான்.

'செந்திலோட சைஸுக்கு எடுத்த காஸ்ட்யூம் உங்களுக்கு சூப்பரா ஃபிட் ஆவுதே!'

யட்சன்

பூஜை நடக்கவிருந்த இடத்தை நோக்கி பாரியுடன் நடந்துகொண்டே குணா கேட்டான்.

'உங்களுக்கும் செந்திலுக்கும் என்ன உறவு?'

'ஒரே மேன்ஷன்... ரெண்டு பேரும் நடிக்க வந்தவங்க. மத்தபடி நேரடியான பழக்கமில்ல.'

'ஆடிஷன் டெஸ்ட்டுக்கு நீங்களும் வந்திருந்தீங்களா?'

பாரிக்குப் புரியவில்லை. ஆனால், 'அந்தச் சமயம் வெளியூர் போயிருந்தேன்' என்றான். எக்காரணம் கொண்டும் சூப்பர் ஸ்டாரை அருகில் பார்க்கும் வாய்ப்பை அவன் தவறவிடத் தயாராயில்லை. திடீரென்று எங்கும் பரபரப்பு. பரபரவென்று ஒரு கார் வந்து நின்றது.

சூப்பர் ஸ்டார்!

ரஜினி காரிலிருந்து இறங்கினார். வெள்ளை நிற பைஜாமா, ஜிப்பா. சற்றே பக்கவாட்டில் திரும்பியபடி, வேகமாக அவருடைய ஸ்டைலில் நடந்து வந்தார். ஷங்கர் அவரை எதிர்கொண்டார்.

'ஆஹ்... ஷங்கர்!' என்று ரஜினி அவர் கைகளைப் பற்றிக்கொண்டார்.

'எங்க ஜோசப்?' என்றார் கண்களைச் சுருக்கி. ஜோசப் ஓடி வந்து நின்றான்.

'ஞாபகம் வெச்சிருக்கீங்களா, சார்?'

' 'எந்திரன்’ டப்பிங்ல நீங்க பண்ணத மறக்க முடியுமா? ஹா... ஹா...' என்று சிரித்தவர், அவன் கையைக் குலுக்கினார்.

'நல்லாப் பண்ணுங்க...'

ஷங்கர் திரும்பினார். 'சார், இவன்தான் புதுப் பையன்!'

'பேரு?' என்றார் ரஜினி அவன் பக்கம் திரும்பி. பல யுகம் தவம் செய்து, கடவுளைச் சந்தித்த முனிவனைப் போல் பாரி அந்தக் கணத்தில் உணர்ந்தான். பரவசத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. வாயைத் திறக்க வரவில்லை.

'பாரி...' என்று குணா பதில் சொன்னான்.

'நைஸ் நேம்...'

பாரி சட்டென்று ரஜினியின் கால்களில் விழுந்தான். பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டான்.

'நான் உங்க அடிமை!' என்றான்.

'நோ... நோ... இந்த உலகத்துல யாரும் யாருக்கும் அடிமை இல்ல... நாம எல்லாருமே முதலாளிதான்... எல்லாருமே அடிமைதான்.'

'அண்ணா... பூஜை ஆரம்பிக்கலாமா?' என்று ஐயர் எதிரில் வந்து கும்பிட்டார்.

தே நேரம் போரூரில் செந்திலின் முகத்திலும் சட்டையிலும் கண்ணாடித் தூள்களுடன் சூடாக ரத்தம் தெறித்தது.

'ஐயோ, வெளியிலிருந்து யார் சுடுகிறார்கள்? எதற்காக?’

டிஷ்யூங்...

இந்த முறை தோட்டா டிரைவரின் கழுத்தில் பாய்ந்தது. அந்தக் கணமே, டிரைவர் உயிரிழந்து ஸ்டியரிங் மீது குப்புறச் சரிந்தான். ஹாரன் விடாமல் அலறியது. கார் கட்டுப்பாடின்றி சீறிப் பாய்ந்தது.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism