Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

ன்டர்நெட்டில் ஆளுமைகளை முழுமையாக இட்டுக்கட்டி ஏமாற்ற முடியும் என்பதை நிரூபிக்க @SantiagoSwallow என்ற டிவிட்டர் கணக்கை மையமாகவைத்துச் செய்யப்பட்ட முயற்சி யைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதைப் படித்துவிட்டு கோவையில் இருக்கும் வடிவேல் தனது @vadiveltweets கணக்கில் இருந்து 'சாண்டியாகோவைப் பற்றிப் படித்து அதிர்ந்து போனேன். ஆனால், நீங்கள் சொன்னதுபோல அந்தக் கணக்கை 80 ஆயிரம் பேர் தொடர வில்லையே; 50 ஆயிரத்துச் சொச்சம் பேரே தொடர்கின்றனர்’ என்று என்னை ட்வீட் செய்ய, சில மணி நேரங்களுக்குள் சாட்சாத் சாண்டியாகோவே வந்து 'இரண்டு வாரங் களுக்கு முன்னால், எனக்கு 80 ஆயிரம் இருந்தது. போலிக் கணக்குகளை டிவிட்டர் விரட்டிப் பிடிப்பதால், என்னைப் பின்தொடர்ந்த பல்வேறு கணக்குகள் மூடப்பட்டுவிட்டன. அதுதான் காரணம்’ என நேரடிப் பதில் கொடுத்தது, சமூக ஊடகத்தின் இணைக் கும் வலிமைக்கு நல்ல உதாரணம். அதுவும் குறிப்பாக, டிவிட்டர் புது ஊடகம் என்பதைத் தாண்டி, பாரம்பரிய ஊடகங்களுக்குத் தகவல் தொடர்புப் பாலமாக மாறிவருகிறது. உதார ணத்துக்கு, கிட்டத்தட்ட அமெரிக்காவில் இருக்கும் அனைத்துத் தொலைக்காட்சி, செய்திச் சேனல்களும் தங்களது டிவிட்டர் முகவரியைக் கொடுத்து மக்களிடம் இருந்து வரும் ட்வீட்டுகளில் இருந்து கண நேரத்தில் பின்னூட்டம் பெற்றுக்கொள்கின்றன. டிவிட் டரும், ஃபேஸ்புக்கும் பதிவேற்றப்பட்ட மொபைல் சாதனம் சகிதம் டி.வி. முன்னால் அமர்ந்து செய்திகளையும் மற்ற நிகழ்ச்சிகளையும் நுகர்வது நடைமுறையாகி வருவதால் பாரம்பரிய ஊடகம், புது ஊடகம் இரண்டுக்குமான இடை வெளி குறைந்தபடியே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆங்கிலத்தில் Freudian Slip என்றொரு பதம் உண்டு. 100 வருடங்களுக்கு முன்னால் சிக்மண்ட் ஃப்ராய்டு எழுதிய 'அனுதின வாழ்வில் உளவியல்’ என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டு இருக்கும் இந்தப் பதத்தை இப்படிப் புரிந்துகொள்ளலாம். உள்மனதில் இருக்கும் உண்மைகள் நாம் பயன்படுத்தும் வார்த்தைப் பிழைகளின் மூலமாகவோ, செயல் பிழைகளின் மூலமாகவோ தெரியவந்துவிடும். உதாரணத்துக்கு, சென்ற வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ராம்னி தன் மீது இருக்கும் 'பெரும் பணக்காரன்’ என்ற இமேஜைக் குறைத்து, தான் எல்லோரையும்போல ஒரு நடுத்தரக் குடும்பஸ்தன் என்ற கோணத்தை அமெரிக்கா காண வேண்டும் என்ற நோக்கத்தில், தன்னுடைய குழந்தைகள் சகிதம் கூட்டம் ஒன்றில் பேசினார். மேடையில் அவருடைய குழந்தைகள் அவர் பெயரில் உள்ள எழுத்துகளை ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். ஒரு சின்னப் பிழை. ROMNEY என்றிருக்கும் வரிசையில் O மற்றும் M இடம் மாறிவிட... மேடையில் R MONEY என்றாகிவிட, அவரது முயற்சி வேடிக்கையாகிப்போனது.

அறிவிழி

Freudian Slip பற்றிச் சொல்லவந்ததற்குக் காரணம், ராம்னி அல்ல; மாறாக, தமிழகத்தின் காவல் துறை. சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் மூலம் அவதூறுகளையும், வதந்திகளையும், மிரட்டல்களையும், வார்த்தைத் தாக்குதல்களையும் பண்ணுபவர்களைக்  கண் காணிக்க உள்ளே வருவதாக அறிவித்தது. பார்த்தால்,  ஃபேஸ்புக்கில் தமிழகக் காவல் துறை என்ற பெயரில் புதிய அக்கவுன்ட் ஒன்று தொடங்கப்பட்டது. லத்தியுடன் நாக்கைத் துருத்தியபடி ஓடும் போலீஸாரின் படத்தைத் தலைப்பில்கொண்ட திகிலூட்டும் அந்த அக்கவுன்ட், திறந்த வேகத்தில் உடனடியாக மூடப்பட்டுவிட்டது.  அந்த அக்கவுன்ட்டே ஒரு போலியான அடையாளத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. ஃபேஸ்புக்கின் பயன்பாட்டு விதி முறைகளின்படி, தனி நபர்கள் மட்டுமே அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டும். நிறுவனங்கள் 'ஃபேஸ்புக் பக்கங்களைப்’ பயன்படுத்த வேண்டும். ஃபேஸ்புக் தளத்தை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தும் காவல் துறை ஒன்றுக்குச் சிறிய உதாரணம் http://on.fb.me/15p60rA. உங்களது ஊரில் வசிக்கும் பாலியல் குற்றங்களைச் செய்தவர்களின்  முகவரிகள், தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்கள் எனச் சமூக

அறிவிழி

ஊடகத்தை மக்களுக்குப் பயனுள்ளதாகக் காவல் துறை மட்டும் அல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் இருக்கும் தீயணைப்புத் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சமீபத்தில் இந்தியாவில் இருந்தபோது கோவை, சென்னை, மதுரை என உள்ளூர் விமானப் பயணங்கள் செய்ய வேண்டிய நிலை. கோவையில் இருந்து சென்னைக்கு விமானப் பயண நேரம் 50 நிமிடங்களே. ஆனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து தி.நகர் வர ஒன்றரை மணி நேரம் ஆனது. கார் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதால், அதிக கார்கள் சாலைகளுக்கு வந்தபடியே இருக்கின்றன. ஸ்டாக்ஹோம், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் இருப்பதுபோல டிராஃபிக் அதிகமாக இருக்கும் காலை/மாலை வேளைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஒரு தீர்வு. மெட்ரோ சற்றே விடுதலை கொடுக்கலாம். தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு மற்றொரு தீர்வு வந்தபடி இருக்கிறது. அது பறக்கும் கார். டெராஃபூஜியா என்ற நிறுவனம் தயாரிக்க முற்பட்டிருக்கும் நான்கு பேர் அமர்ந்து செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கார்/விமான காம்போவின் மாடல் கலக்கல். மேலும் விவரங்களுக்கு.... www.terrafugia.com.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism