Published:Updated:

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

Published:Updated:
##~##

ம்பிக்கைதான் வாழ்க்கை! இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உண்ணும் உணவு, அவசரகதியான வாழ்க்கை, அதீத அழுத்தம் நிறைந்த சூழல் எனப் பல்வேறு பிரச்னைகளால் உடல் மனப் பாதிப்புகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதனால் புதிது புதிதாக நோய்களும் படையெடுக்கின்றன. மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் கூட்டமே இதற்குச் சாட்சி! 

எந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.  நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவத் தொழில் நுட்பத்தின் நவீன சிகிச்சை முறைகளும் பெருகி, உயிர்களுக்கு உத்தரவாதம் தருகின்றன. அந்த வகையில் 'நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்’ என்ற இந்த அரிய நூல் நோயில் இருந்து மீள்வதற்கான மருத்துவ வழிகாட்டி.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனக்கு எந்த நோய் வந்திருக்கிறது என்பதுகூடத் தெரியாமல் விழி பிதுங்கி வேதனையில் ஆள்பவர்களுக்கும், எந்த நோய்க்கு என்னென்ன சிகிச்சை முறைகள் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள நினைப்பவர்களுக்குமே இந்தப் புத்தகம்.  

நம்பிக்கை வார்க்கும் நல்ல புத்தகம்!

இதயத்துக்கான ரோபாடிக் சிகிச்சை, பிறந்த குழந்தைகளுக்கு மரபியல் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள், கண், காது, வயிறு, பல், கல்லீரல், சிறுநீரகம் என உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லி, அதற்குக் கத்தியின்றி, ரத்தமின்றி நவீன முறை சிகிச்சைகளைத் தேடிப் பிடித்து எளிய நடையில் தொகுத்துத் தந்திருக்கிறார் பா.பிரவீன்குமார்.

குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவந்தால், வருங்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்ற பல அரிய தகவல்களுடன், முதுகுவலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை, நாள் முழுவதும் நின்றே பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், தீர்வுகள், புற்றுநோய்க்கான டர்கெட் தெரப்பி, 16 நாட்களில் ஒல்லியாகச் சிகிச்சைமுறைகள், பக்கவாதம் வராமல் இருக்க வழி என வியாதிகளில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்களுடன் சிகிச்சைமுறைகளையும் விரிவாகச் சொல்கிறது இந்த நூல்.

வாழ்வின் மீதான நம்பிக்கையையும், நோய்களைக் கண்டு துவளாமல், அதை எதிர்கொள்ளும் துணிச்சலையும் ஒவ்வொருவருக்கும் உண்டாக்கும் நூல்!    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism