Published:Updated:

ஆசிய போட்டியில் பதக்கத்தை வென்றே தீருவோம்: இந்திய மகளிர் ஹாக்கி அணி

Vikatan Correspondent
ஆசிய போட்டியில் பதக்கத்தை வென்றே தீருவோம்: இந்திய மகளிர் ஹாக்கி அணி
ஆசிய போட்டியில் பதக்கத்தை வென்றே தீருவோம்: இந்திய மகளிர் ஹாக்கி அணி

இன்சியோன்: ஆசிய போட்டியில் பதக்கத்தை வென்றே தீருவோம் என இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் கூறியுள்ளனர்.

17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்நிலையில், காமன்வெல்த்தில் தோல்வி அடைந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியினர், ஆசிய விளையாட்டு போட்டியில் எப்படியும் பதக்கத்தை வென்றே தீருவது என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிய போட்டியில் பதக்கத்தை வென்றே தீருவோம்: இந்திய மகளிர் ஹாக்கி அணி

இதுகுறித்து இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ரிது ராணி கூறுகையில், ''கடந்த காமன்வெல்த் போட்டியில் பந்தை எதிரணியிரிடமிருந்து பிரித்து பாஸ் செய்வதில் இந்திய அணி பலவீனமாக இருந்தது. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. அந்த தவறை ஆசிய போட்டியில் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இதனால், தலைமை பயிற்சியாளர் நீல் ஹாகுட்டாவின் தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவர், எங்களிடமிருந்து அதிக கோல் ஸ்கோரிங் திறமைகளை எதிர்பார்க்கிறார். பெனால்டி கார்னர்களை கன்வெர்ட் செய்வதிலும், பந்தை கையகப்படுத்திவலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஆசிய போட்டியில் எப்படியும் பதக்கத்தை வென்றே தீருவோம்'' என்றார்.