Published:Updated:

அரசு நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகளை வெளியேற்ற தேவகவுடா எதிர்ப்பு!

Vikatan Correspondent
அரசு நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகளை வெளியேற்ற தேவகவுடா எதிர்ப்பு!
அரசு நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகளை வெளியேற்ற தேவகவுடா எதிர்ப்பு!
அரசு நிலத்தை பயன்படுத்தும் விவசாயிகளை வெளியேற்ற தேவகவுடா எதிர்ப்பு!

பெங்களூரூ: அரசு நிலத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளை வெளியேற்றக்கூடாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா வலியுறுத்தினார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ''கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அரசின் புறம்போக்கு நிலத்தில் விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களை நிலத்தைவிட்டு வெளியேறும்படி, தாசில்தார் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில், பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறிய விவசாயிகளை அரசு வெளியேற்றுவது சரியல்ல. அரசு நிலம் ஆக்கிரமிப்பில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. அத்தகையவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கட்டும். இதற்கு எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏ.டி.ராமசாமி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரது அறிக்கைகளை அமல்படுத்த வேண்டும். இந்த 2 அறிக்கைகள் மீதும் அமைச்சரவை கூட்டத்தில் இதுவரை விவாதிக்கவில்லை. இந்த விஷயத்தில் மவுனமாக இருக்கும் அரசு, சிறிய விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? அதேபோல், ‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தியாகி துரைசாமி மற்றும் ஏ.டி.ராமசாமி ஆகியோர் நடத்தி வரும் போராட்டத்துக்கு எனது ஆதரவு உண்டு. இதற்கு அடையாளமாக அந்த போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்'' என்றார்.