Published:Updated:

பிடி கொழுக்கட்டை

பிடி கொழுக்கட்டை

ராஜபாளையம் சுற்று வட்டாரங் களில் பிரபலமான ஓர் உணவு வகை கம்மங்கொழுக்கட்டை. சத்தும் சுவையும் நிறைந்த அந்தக் கொழுக்கட்டையின் செய்முறை விளக்கம் இதோ...

 தேவையானவை: கம்பு - கால் படி, வெல்லம் - அரை கிலோ, எள்ளு - ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் சில்லு - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: முதலில் கம்பை வறுத்து அரைத்துக்கொள்ளவும். தேங்காய் சில்லுகளையும், எள்ளையும் நெய்விட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தைத் தண்ணீர்விட்டுப் பாகு எடுத்துக்கொள்ளவும். பின், பாகை கம்பு மாவில் விட்டு தேங்காய் சில்லுகளையும், எள்ளையும் கலந்து மொத்தமாகப் பிடித்தால் கொழுக்கட்டை ரெடி!

- ஸ்ரீ.நித்தீஷ்

##~##
அடுத்த கட்டுரைக்கு