Published:Updated:

தூபக்கால் சாமியார்!

தூபக்கால் சாமியார்!

தூபக்கால் சாமியார்!

தூபக்கால் சாமியார்!

ழநியில் பிரபலமானவர் தூபக்கால் சாமியார். தடித்த உறுதியான மரம்தான் பொங்குலியம். அந்த மரத்தாலான தூபக்காலை இடது கையில் வைத்திருக்கிறார் இந்த சாமியார். வலது கையில் சாம்பிராணியும் விசிறுவதற்கு பிளாஸ்டிக் விசிறியும் இருக்கும்.

வருடம் முழுவதும் ஒவ்வொரு கோயிலாகச் சென்று சாம்பிராணி தூபம் காண்பிப்பதுதான் இவரது வேலை. தினமும் பாத விநாயகர் கோயிலில் பக்தியோடு தூபம் போடும் இவர், இரண்டு, மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து அடிவாரப் பகுதியில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆஜர் ஆகிறார்.

இதையே 45 வருடங்களாகத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறாராம். பேச்சுக் கொடுத்தால், ''எம்பேரு கன்னிமுத்து. காய்ச்ச மரத்துக்குத் தெரியும். தின்ன வெளவால்களுக்குப் புரியும். நான் ஒண்ணும் பேச மாட்டேன்!'' என்று தூபக் காற்றை வீசிக்கொண்டே நடந்து செல்கிறார்!

- வீ.ஜெ.சுரேஷ்

இவன் சீனாக்காரன்டா!

துரை மீனாட்சியம்மன் கோயில் மேற்குக் கோபுர வாசல் அருகே இருக்கிறது அந்தக் கடை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று திராவிட மொழிகள் அனைத்திலும் பேசி அங்கே ஸ்வெட்டர், ஜெர்கின் வியாபாரம் செய்வது... திபெத்தியர்கள்!

தூபக்கால் சாமியார்!
##~##

வியாபாரம் செய்துகொண்டு இருந்த டென்சிங் என்பவர், ''திபெத்தில் என் அப்பா வசதியான விவசாயி. அங்கே குடியேறிய சீனப் பணக் காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திபெத்தியர் களை அடிமைப்படுத்திட்டாங்க. மக்கள் போராட்டம் ஆரம்பித்ததும், சீன ராணுவம் ஊடுருவ ஆரம்பிச்சிட்டாங்க. அதனால், 1959-ம் ஆண்டில் தலாய்லாமாவுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்த திபெத்தியர்கள்தான் நாங்க.  

தமிழ்நாட்டு மக்கள் அன்பா இருக்காங்க. 'எங்களைப் பார்த்ததுமே உங்களுக்கு குங்ஃபூ தெரியுமா? உங்களோடு போட்டோ எடுத்துக்கவா?’னு கேட்பாங்க. சிலர் எங்களைப் பார்த்து, 'இவன் சீனாக்காரன்டா!’ன்னு சொல்வாங்க. உங்களுக்கு சீனா, திபெத், ஜப்பான், வட கிழக்கு மாநிலத்துக்காரங்க எல்லோரும் ஒரே மாதிரி தெரியலாம். நானோ, நீங்க வாயைத் திறக்குறதுக்கு முன்னாடியே தமிழா, கன்னடமான்னு கண்டு பிடிச்சிருவேன்.

மதுரையில் குளிர் சீஸனில் 30 வருஷமாக் கடை போட்டு வர்றோம். சம்மர் ஆரம்பிச்சதும் கிளம்பிருவோம். என்றாவது ஒருநாள் எங்கள் நாடு விடுதலை பெறும் என்ற நம்பிக்கை யோடு காத்திருக்கிறோம்'' என்றபோது, நமக்கு இலங்கை அகதிகளின் நினைவு வந்தது!

- கே.கே.மகேஷ் படங்கள்: ஜெ.தான்யராஜு

அடுத்த கட்டுரைக்கு