Published:Updated:

“என் முதுகுல டின்னு கட்டிட்டாங்க!”

“என் முதுகுல டின்னு கட்டிட்டாங்க!”

“என் முதுகுல டின்னு கட்டிட்டாங்க!”

“என் முதுகுல டின்னு கட்டிட்டாங்க!”

Published:Updated:
“என் முதுகுல டின்னு கட்டிட்டாங்க!”
##~##

''பெண் பார்க்கப்போன அனுபவம்பற்றிச் சொல்லுங்க..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெண் பார்க்கும் படலமா? அப்பிடி ஒரு விஷயமே நம்ம வாழ்க்கையில கிடையாது. நான் கல்யாணம் பண்ணி னது எங்க அப்பாவோட அக்கா மகளை. அப்போ வேலைனு எனக்கு எதுவும் இல்லை. வீட்டுக்கு உதவியா சில வேலைகள் செய்துகொடுப்பேன். புல் புடுங்குறது... ஆடு மேய்க்கிறதுன்ற மாதிரி.

இப்படி இருக்கிறப்ப, எவனும் பொண்ணு குடுக்கத் தயாரா இல்லாத அந்தக் காலகட்டத்துல என் அத்தை மகளைக் கட்டிவெச்சாங்க. எனக்கெல்லாம் பொண்ணு கிடைச்சதே பெரிசு!''

''நீச்சல் தெரியுமா?''

''எங்க ஊர்ல திருமக்குளம்னு ஒண்ணு இருக்கு. படியெல்லாம் பாசி படிஞ்சிகிடக்கும். எனக்கு அப்போ நீச்சல் தெரியாது. அதனால ஒரு டப்பாவோட போய், மேல் படிக்கட்டுல உட்கார்ந்து மொண்டு மொண்டு குளிப்பேன். அப்ப என் வயசுல ஒரு செட் உண்டு. நடராஜன், மோகன்னு அவங்க பேரு. விளையாட்டுப்போக்குல எனக்கு நீச்சல் தெரியும்னு நெனைச்சு, 'படக்’னு குளத்துல தள்ளிவிட்டுப்புடுவாங்க. 'பக்... பக்’னு தண்ணியக் குடிச்சு, கையக் காலை ஆட்டி... உசுரு பயம் உலுக்கிடும். ஒருவழியா கரைக்குத் தூக்கிடுவாங்கனு வெச்சுக்குங்க. பொறுக்க முடியாம எங்க உறவுக்காரர் ஒருத்தர்ட்ட போய் நின்னேன். உடனே, அவர் முதுகுல டின்னைக் கட்டி குளத்துல தள்ளிவிட்டு நீச்சல் கத்துக்குடுத்தார். மனுஷன்னா, நீச்சல் தெரியணுங்க!''

''பாக்கெட்ல எவ்வளவு பணம்வெச்சிருக்கீங்க?''

''இப்பவா? ம்... 240 ரூவா இருக்குது. சென்னையில நான் இருக்கிறப்போ, சாதாரணமா 500 ரூபா வரை வெச்சிருப் பேன். இங்கே செலவு கம்மி. ஊர்லன்னா நல்லது, கெட்டதுக்குப் போக வேண்டி இருக்கும். அதனால, குறைஞ்சது 2,000 ரூபா வெச்சிருப்பேன்!''

''சமையல் பண்ணத் தெரியுமா?''

''புளியோதரை, தயிர்சாதம் பண்ணத் தெரியும். ஆனா, ஒரே கல்லாக்கிடக்கும். கல்லை அரிச்செடுக்கிற பக்குவம் நமக்கு வராது பாருங்க... மத்தபடி சிம்பிளா ரசம் வைப்பேன். வெங்காயம், பூண்டு போட்டு வெறுங்குழம்பு தாளிச்சுக் கொட்டத் தெரியும். ஆஃப்பாயில், ஆம்லேட் போடுவேன்!''

“என் முதுகுல டின்னு கட்டிட்டாங்க!”

'' 'கனவுக் கன்னி’னு யாரைச் சொல்வீங்க?''

''எதையோ எதிர்பார்த்துக் கேட்கறீங்க... என் மனசுக்குப் பிடிச்ச கதாநாயகி சரோஜாதேவிதான். அவங்க அழகு மனசுல 'பச்சக்’னு ஒட்டிக்கிடக்கு.''

''டூர் போனப்ப நடந்த 'பகீர்’ அனுபவம் ஏதாவது உண்டா?''

''எம்.எல்.ஏ-க்கள் நாங்க சில பேர் வட மாநிலத்துக்கு டூர் போனப்ப, புயல், வெள்ளம்னு டிரெயின் ரெண்டு நாளா ஒரே இடத்துல நிக்குது. சாப்பாடு ஒண்ணும் சரியா இல்ல. எல்லாரும் நாக்கு செத்து ருசியான சாப்பாட் டுக்கு ஏங்கறோம். அப்ப நான், 'வண்டி நகர்றாப்பல தெரியலை. வெளில போய் பக்கத் துல ஏதாவது டிபன் கிடைச்சா வாங்கிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு, இரண்டு தெரு தள்ளிப்போய் இட்லி வாங்கிட்டுத் திரும்பி வர்றேன். டிரெயின் சிக்னல் கிடைச்சு 'மூவ்’ ஆயிடுச்சு. 'ஐயையோ’னு ரயில்வே டிராக்ல பதற்றமா ஓடினா, அரை கி.மீ. தாண்டி வண்டி நிக்குது. சக எம்.எல்.ஏ-க்கள் செயினை இழுத்து எனக்காக வண்டியை நிறுத்திவெச்சிருந்தாங்க... 'அப்பாடா’னு ஆச்சு!''

''கடைசியா டான்ஸ் ஆடினது எப்போ?''

''டான்ஸா? கஷ்ட காலம். என்னைப் பொறுத்தவரை உற்சாகத்தை வெளியே காட்டிக்கிறது இல்லை நான்!''

''நீங்க நல்லவரா... கெட்டவரா?''

''நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன். அதாவது, 75 சதவிகிதம் நல்லவன். கெட்டவன்னு தெரிஞ்சா, வன்முறையைப் பதிலடியா கொடுத்துடுவேன். எப்பவுமே பாக்கிவைக்கிறதில்லை!''

“என் முதுகுல டின்னு கட்டிட்டாங்க!”

''சின்ன வயசு லூட்டிகள் சொல்லுங்களேன்?''

''பெரிய லிஸ்ட் இருக்கு. சடுகுடு, செதுக்கல், கோலியாட்டம் விளையாடுவேன். மீன் பிடிப் பேன். யானை ஏதும் தெருவுக்குள்ள வந்தா மைல் கணக்கா ஃபாலோ பண்ணி, அது சாணி போட்டவுடனே ஓடிப்போய் மிதிப் பேன். கிளாஸைக் கட் பண்ணிட்டு, எம்.ஜி.ஆர். படம் பார்ப்பேன். படம் பார்க்கக் காசு இல்லாட்டி, ஸ்கூல் புக்கை எடைக்குப் போடுவேன். வீட்டுல புக்கு திருட்டுப்போச்சுனு சொல்லி புது புக் வாங்கினதும் உண்டு. தேங்காய் பொறுக்கித் திம்பேன். வேப்பம் பழம் அடிச்சுத் திம்பேன். கையில காசு இல்லேன்னா, மெள்ள கிளம்பி நாலு தெரு தலை நிமிராம நடப்பேன். கீழே காசு ஏதும் கிடக்குமானு தேடித்தான் அந்த நடைப் பயணம். நான் தேடற நேரம் நாலணா, பத்து காசு ஏதாவது கிடைக்கும். ஒரு தடவை 10 ரூபா நோட்டு ஒண்ணு எடுத்தேன். அந்த வயசுக்கு அது லட்ச ரூபா... தெரியும்ல!''

''எப்பவாவது காணாமல்போனது உண்டா?''

''படிக்கிற காலத்துல இங்கிலீஷ் சரியா வராது. இந்தி புரியவே புரியாது. அமெரிக்கன் காலேஜ்ல படிக்கிறப்ப, பரீட்சை நேரம்... படிச்சது ஒண்ணும் மனசுல ஏறல. பரீட்சை ஹாலுக்குப் போறப்ப உள்ளங்கையிலயோ, முழங்கால்லயோ எழுதிக்கிட்டுப் போய், காப்பி அடிக்குறது... இல்லாட்டா, பக்கத்துப் பயலை எட்டிப் பார்ப்பேன். ஒண்ணுத்துக்கும் வழியில்லைனுவெச்சுக்கங்க... கேள்வித்தாள் கொடுப்பாங்கள்ல... அதை அப்படியேஎழுதிக் குடுத்துட்டு, முதல் ஆளா, வெளில வந்துடு வேன். நேரா வெளியில வந்து ஒரு எம்.ஜி.ஆர். படம் பார்ப்பேன். என்னை டாக்டராக்கலாம்... இன்ஜினீயராக்கலாம்னு என் அப்பன்,ஆத்தா கனவு கண்டுக்கிட்டிருக்க... நான் இங்க ஃபெயில். அடிக்குத் தப்பி ரெண்டு வாரம் காணாமல்போனேன். எங்கே? மெட்ராஸ் வந்து உறவுக்காரங்க வீட்ல காசை வாங்கி எம்.ஜி.ஆர். படமாப் பார்த்துத் தள்ளினேன். இப்ப நெனைச்சாலும் சிரிப்பா இருக்கு!''

''ஜீரணிக்க முடியாத ஏமாற்றம்னு ஏதும் இருக்கா?''

''ஒரு விஷயம் இருக்கு... சேடப்பட்டி முத்தையா கோச்சுக்குவாரேனு பார்க்கிறேன். சரி, சொல்லிருவோம். எம்.ஜி.ஆர். கட்சி துவங்கின உடனே வந்த எலெக்ஷன் சமயத்துல, எங்க ஊருக்கு வந்தார் சேடப்பட்டி. அப்போ அவர் மேடைப் பேச்சாளர். ஊருக்குப் போக வழிச் செலவுக்குன்னு அப்போ என்கிட்டே 100 ரூபா பணம் வாங்கினார். அதுக்காக எனக்குத் தேர்தல்ல சீட் தரச் சொல்லி எஸ்.டி.எஸ்-கிட்ட சிபாரிசு பண்றேன்னார். சிபாரிசும் பண்ணலை. பணத்தையும் திருப்பித் தரலை. அப்போ எனக்கு அது பெரிய தொகை. ரெண்டு, மூணு வாட்டி கேட்டுப் பார்த்தேன். ஒண்ணும் வரலை. சரி, போகட்டும்னு ஏமாற்றத்தை மனசுக்குள்ளேயே போட்டுப் புதைச்சுட்டேன்!''

- எஸ்.பி.அண்ணாமலை