Published:Updated:

தாவணி டே!

தாவணி டே!

##~##
'ஆ
டிக்குப் பின்னால் ஆவணி... என் தாடிக்குப் பின்னால் தாவணி’ என்று 90-களில் கவிதை எழுதினார்கள். 'தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு...’ என்று இன்று பாடல் எழுதுகிறார்கள். காலம் கடந்தும் வசீகரிக்கும் சில விஷயங்களில் ஒன்று... தாவணி!

நம்ம யூத் மத்தியில் தாவணிக்கு இன்னமும் மவுஸு இருக்கிறதா?  மதுரை கல்லூரி மாணவிகளிடம் கேட்டோம்.

திவ்யா : ''தாவணிக்கு ரொம்ப மெனக்கெட வேண்டியது இல்லை. அம்மாவோட பழைய பட்டுப் புடவை அல்லது பேன்ஸி சேலையை ஆல்டர் பண்ணினாலே, அழகான தாவணி ரெடி. இப்போ பூனம், ஜமிக்கி வொர்க் டிசைன்ஸ், டபுள் கலர் க்ளாத் தாவணினு ஃபேன்ஸியா நிறைய வெரைட்டியான தாவணி டிசைன்கள் வருது. அதனால், தாவணி எல்லாம் பழைய பஞ்சாங்கம், பஞ்சாமிர்தம்னு எதுகை மோனையா பேசாதீங்கப்பா!'  

தாவணி டே!

கௌரி : ''தமிழ் சினிமாவில் தேவிகா காலத்தில் இருந்து படிப்படியா ஸ்ரீதேவி, கனகான்னு பலரும் தாவணி ட்ரெண்டை மக்களுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. ஆனா, இப்போ நிறைய மும்பை ஹீரோயின்கள் புகுந்ததால், தாவணியைக் காத்துல பறக்கவிட்டுட்டாங்க. அடுத்து வரப்போகுற 'வேலாயுதம்’ படத்துல ஹன்சிகா, 'வேங்கை’ படத்துல தமன்னா, சினேகான்னு இப்போ உள்ள ஹீரோயின்கள் தாவணி போட்டு படத்தில் நடிக்கப்போறாங்களாம். அப்படியாவது, தாவணி ஃபேஷன் தொடங்குதானு பார்ப்போம்!'

ஜெயபாரதி : ''வெள்ளிக் கிழமைன்னா... கோயிலுக்குத் தாவணி போட்டு வருவாங்க. இப்போ யாரும் கோயிலுக்கும் போறதில்லை... தாவணியும் போடுறதில்லை. எது எதுக்கோ 'டே’ கொண்டாடுறோம். எல்லாக் காலேஜ்லயும் வாரம் ஒருநாள் மாணவிகள் பாவாடை - தாவணியில்தான் வரணும்னு 'தாவணி டே’ கொண்டுவரணும்!''

தாவணி டே!

தனலட்சுமி : ''என்னோட பூர்வீகம் குஜராத். நான் வளர்ந்தது மதுரை. சின்ன வயசில் இருந்தே தாவணி கட்டிட்டுப் போறவங்களைப் பார்த்தா சந்தோஷமா இருக்கும். காலேஜ் படிக்கும்போது, கண்டிப்பா தாவணி கட்டணும்னு முடிவு பண்ணி இருந்தேன். நான் காலேஜ் வந்து பார்த்தா, பேச்சுக்குக்கூட யாரும் தாவணி கட்டலை. வெல்கம் பார்ட்டி அப்போ 'எல்லோரும் தாவணி கட்டிட்டு வரலாமா?’ன்னு கேட்டேன். ஏரியாவில் செம ரெஸ்பான்ஸ். இப்போ வாரம் ஒரு முறை தாவணி போடுறோம். என்னால திரும்ப தாவணி கலாசாரம் வந்திருக்குன்னு நினைக்கிறப்போ, பெருமையா இருக்கு!''  

சௌமியா : ''தாவணிக்கு சில சென்டிமென்ட்ஸ் இருக்கு. வாழ்க்கையில் முதல்முறையா தாவணி உடுத்தும்போது, மஞ்சள் கலரில்தான் இருக்கணும். அதை தாய்மாமாதான் எடுத்துத் தரணுமாம்!''

சுகன்யா : ''பொதுவா சுடிதார், சேலை, நைட்டியைக்கூட 80 வயசு வரைக்கும் போட முடியும். ஆனால், தாவணி டீன்-ஏஜ் டிரெஸ். அப்போ விட்டுட்டா, அப்புறம் எந்த வயசிலும் தாவணி போட முடியாது. இதை என் பாட்டி தான் சொன்னாங்க. அந்த அருமை புரிஞ்ச தால... இப்போ திருவிழா, தீபாவளி, பொங்கல்னு எல்லா விழாக்களிலும் தாவணி தான்!''  

- இரா.கோகுல் ரமணன்.
படங்கள்: ஜெ.தான்யராஜு

அடுத்த கட்டுரைக்கு