Published:Updated:

நெல்லைச் செந்தமிழ்!

நெல்லைச் செந்தமிழ்!

மனம் என்னும் மேடை மேலே

நெல்லைச் செந்தமிழ்!

நெல்லையின் சூரியன் எஃப்.எம்  'ப்ளேடு நம்பர் ஒன்’ புரொகிராமில் கடிகடிப்பவர் 'நெல்லை ஜெபராஜ்’. பாளையங் கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி - பயோடெக் படித்திருக்கும் ஜெபராஜின் ரோல் மாடல் அப்துல் ஹமீது. ஜெபராஜை ஆழ்வார்குறிச்சியில் அடிக்கடி பார்க்கலாம். ஏனெனில், அங்கே தான் அவருடைய பால்ய கால நண்பர்கள் இருக்கிறார்கள். 'மனம் என்னும் மேடை மேலே, முகம் ஒன்று ஆடுது’ பாடலை அடிக்கடி முணுமுணுப்பார் ஜெபராஜ். அப்பா சப்-இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்தபோது வாங்கிக் கொடுத்த டி.வி.எஸ் எக்ஸ்.எல் பைக்கைத்தான் இன்னும் பத்திரமாக வைத்தி ருக்கிறார். காரணம் கேட்டால், 'அப்பாவின் அன்புப் பரிசு’ என்று சிரிக்கிறார்!

- இ.கார்த்திகேயன்
படம்: எல்.ராஜேந்திரன்

நெல்லைச் செந்தமிழ்!

நெல்லைச் செந்தமிழ்!

நெல்லை டி.வி-யில் 'நீங்கள் கேட்ட பாடல்’ மூலம் பிரபலமானவர், கிருத்திகா கணேஷ். 10 வருடங்களாக  நெல்லை டி.வி-யில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கி றார் கிருத்திகா. பட்டிமன்றங்களில் பெரியார்தாசன், மூரா ஆகியோரின் குழுக்களில் பேசிய அனுபவம் உண்டு. ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது கிருத்திகாவுக்குப் பிடிக்காத விஷயம். '' 'ஃப்ரெண்ட்ஸ்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன். விழாவுக்கு வந்திருந்த நடிகர் விஜய்,  'உங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்குங்க. நீங்க பேசுற நெல்லைத் தமிழைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்’னு பாராட்டினார். ஒரு கச்சேரியில் கலந்துகொள்ள பிரபல பின்னணிப் பாடகி சுசீலா வந்திருந்தார். அவரை மேடைக்கு அழைக்கும்போது, அவர் பாடிய பாடல்களின் வரிகளை மேற்கோள் காட்டி அழைத்தேன். ரொம்ப சந்தோஷமாகி, என்னைக் கட்டிப்பிடிச்சு ஆசீர்வாதம் பண்ணினாங்க. என்னோட வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் அதுதான்!'' என்று மகிழ்ச்சியில் கண்கள் பனிக்கின்றன, கிருத்திகா கணேஷ§க்கு!  

- ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

பேச்சுதான் என் மூச்சு!

நெல்லைச் செந்தமிழ்!

துரை ரேடியோ மிர்ச்சியில் 'ரீ-வைண்ட் ராகம்’ பாடும் மாயா, திருச்சி யில் இருந்து மதுரைக்கு வந்திருக்கும் சின்னக் குயில்.

''படித்தது?''

''பி.ஏ., இங்கிலீஷ் லிட்ரேச்சர் அண்ட் டிப்ளமோ இன் மீடியா.''

''எதிர்பாராத சம்பவம்?''

''சிம்மக்கல் சங்கர் என்கிற நேயர், 'மாயா ரசிகர் மன்றம்’ தொடங்கியிருக்கிறார். விசாரிக்க போன் பண்ணினால் 'நான் உங்களின் தீவிர ரசிகன். ஆனால், உங்களை நேரில் பார்க்க விருப்பம் இல்லை’ என்று கிலி கிளப்புறார்.''

''நீங்க அதிகமா மொக்கை போடுவீங்களாமே?''

''இது எதிர்க் கட்சியினரின் விஷமப் பிரசாரம்!''

''மாயாவின் ப்ளஸ்?''

''நினைத்ததைத் தயங்காமல் பேசுவது!''

''மிர்ச்சிக்கு வரலைன்னா என்ன ஆகியிருப்பீங்க?''

''வேற எஃப்.எம்-ல இருந்திருப்பேன். ஏன்னா, பேச்சுதான் என் மூச்சு!''

- கே.கே.மகேஷ்
படம்: ஜெ.தான்யராஜு

மனம் விரும்புதே உன்னை!

நெல்லைச் செந்தமிழ்!

தூத்துக்குடியில் தூள் கிளப்பும் காம்பியர்களில் ஒருவர் 'கிங்க்ஸ் டி.வி’-யின் சுகந்தி. 'கல்லூரிச் சாலை’, 'வாழ்த்தலாம் வாங்க’ என்கிற நிகழ்ச்சிகளின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த டி.வி நாயகி. சுகந்தியின்ரோல் மாடல் பெப்சி உமா. 'மனம் விரும்புதே உன்னை... உன்னை...’ பாடலை அடிக்கடி ஹம் பண்ணும் சுகந்தி, ஸ்கூட்டியில் இருந்து ஸ்கூட்டி பெப்புக்கு மாறிவிட்டார். பார்ட்டிக்கு நாய்க் குட்டி என்றால் அவ்வளவு இஷ்டம். வீட்டில் பப்பி, ஜிம்மி, டயானா, பிளாக்கி என்று நான்கு நாய்க் குட்டிகள் வளர்க்கிறார். கூடவே டிங்கு, பில்லி என்று இரண்டு பூனைக் குட்டிகளும் வளர்க்கிறார். ஜெயலலிதாவைச் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இவரின் ஆசை. காதலித்து, பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் செய்துகொள்வது என்பது லட்சியமாம். பாய்ஸ் ரெடியா?

- இ.கார்த்திகேயன்
படம்: ஏ.சிதம்பரம்

பல்லாங்குழி ரகசியம்

நெல்லைச் செந்தமிழ்!

நெல்லையில் ஹலோ எஃப்.எம் 'பல்லாங்குழி’ நிகழ்ச்சியில் ஜீட்ஸ் பிரபு மற்றும் கபாலி மாமா என்று இரண்டு பேர் பேசுவார்கள். அந்த இரண்டு பேரும் ஒருவரேதான் என்பது பலரும் அறியாத ரகசியம். இரண்டு குரல்களில் மாற்றி மாற்றிப் பேசும் 'ஜீட்ஸ் பிரபு’வுக்குத் தனி ரசிகர் கூட்டமே உண்டு. இதோ ஜீட்ஸ் பிட்ஸ்...

•  தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் வீடு இருக்கிறது. தினமும் நெல்லைக்கு பஸ் ட்ரிப்தான் அடிக்கிறார்!

•  ஹலோ எஃப்.எம்முக்கு 'ஜாக்கி’யாக சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இதற்கு முன் தூத்துக்குடி எஸ்.டி.ஆர். டி.வி-யில் கேம் ஷோ நடத்திக்கொண்டு இருந்தார்!

•  பார்ட்டிக்குப் பிடித்த இடம் தூத்துக்குடி. சொந்த ஊரில்தான் நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவரின் தனிக் கொள்கை!

•  அடிக்கடி ஹம் செய்வது 'இளமை எனும் பூங் காற்று...’. எஸ்.பி.பி என்றால் அவ்வளவு உயிர்!

•  தன்னோட பழைய டி.வி.எஸ் மாக்ஸ் 100சி பைக்குக்கு 'பை’ சொல்லிவிட்டு ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்-க்கு 'ஹாய்’ சொல்லி இருக்கி றார்!

•  லவ் மேரேஜ் செய்தவர். சாரின் வாய்ஸ் கேட்டு, காதல் வளர்த்துக் கல்யாணம் செய்திருக்கிறார் மிஸஸ் ஜீட்ஸ்!

•  தன் இடது காதில் 'வெள்ளைக்கல்’ கம்மல் அணிந்திருக்கிறார் ஜீட்ஸ். காரணம் கேட்டால், ரகசியம் என்கிறார்!

- இ.கார்த்திகேயன்,ஆ.கோமதி நாயகம், படம்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு