Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

சில வாரங்களுக்கு முன் முப்பரிமாண அச்சு இயந்திரம் (3D Printer) பிரபலமாகி வருவதைச் சொல்லியிருந்தேன். வடிவ மைப்பு செய்பவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் இந்தச் சாதனம், பல விதங்களில் பயன்படும் என யூகித்திருந் தேன். உதாரணத்துக்கு, தென் ஆப்பிரிக்காவில் வலது கையில் விரல்களே இல்லாமல் பிறந்த சிறுவனுக்கு, செயற்கைக் கை ஒன்றை முழுக்க 3டி பிரின்டரிலேயே வடிவமைத்து, அதைப் பயன்படுத்தி சில்லறைக் காசுகளைப் பொறுக்கி எடுக்கும் அளவுக்குத் துல்லியமாக இயங்கவைத்ததாகச் செய்தி வந்தது. ஆனால், சென்ற வாரத்தில் 3டி பிரின்டர் தொழில்நுட்பம் சிக்கலில் சிக்கிவிட்டது. சிக்கலை வரவழைத்தது Liberator.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக்சாஸ் மாநில ஆஸ்டின் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் கோடி வில்சன் என்ற மாணவர் 3டி பிரின்டரைப் பயன்படுத்தி, மேற்படி பெயரில் துப் பாக்கி ஒன்றை வடிவமைத்துத் தயாரித்து, அதிலிருந்து சோதனை ரவுண்ட் ஒன்றைச் சுட்டுக் காட்டியதை யூ டியூபில் பதிவேற்ற, அமெரிக்க அரசே பதறத் தொடங் கியது. வில்சன் சாமானியப்பட்ட ஆள்இல்லை. அரசாங்கம் போன்ற அதிகார அமைப்புகளைப் புறக்கணிக்கும் Anarchism எனும் அரசின்மைக் கொள்கையில் தீவிர நம்பிக்கை உடையவர். மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயு தம் ஏந்தியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்ட Defense Distributed என்ற அமைப்பின் நிறுவனர். சென்ற வருடம் தொடங்கப்பட்ட இந்த லாப நோக்கமற்ற, தன்னார்வ அமைப்பின் குறிக்கோள் விக்கி வெப்பன் (Wiki Weapon ) என்ற தலைப்பில் பலவிதமானஆயுதங் களைத் தாங்களே செய்துகொள்ள உதவுவது.

லிபரேட்டருக்கு வரலாம். ஒரே ஒரு முறை மட்டும் சுட முடிகிற முழு இயக்கக் கைத்துப் பாக்கி இது. 3டி பிரின்டரில் 'அச்சடிக்கப்படும்’ சாதனங்கள் பிளாஸ்டிக்கில் இருப்பதால், இவற்றை விமானநிலையம் போன்ற இடங்களில் இருக்கும் எக்ஸ்ரே பாதுகாப்புச் சோதனை களில் கண்டறிய முடியாது என்பதுகூடுதல் தலைவலி. பிளாஸ்டிக் என்பதால், லிபரேட்டர் பொம்மைத் துப்பாக்கி என நினைத்துவிடாதீர்கள். 360 பிஸ்டல் எந்த அளவு குண்டைச்செலுத்துமோ, அதே அளவுக்கு வலிமையானது லிபரேட்டர்.

அறிவிழி

இந்த லிபரேட்டர் துப்பாக்கியைத் தயாரிக்கும் ப்ளூபிரின்ட் வடிவத்தை யார் வேண்டு மானாலும் தரவிறக்கிக்கொள்ளும் வகையில், அதைத் தனது வலைதளத்தில் வில்சன்கொடுத் ததுதான் அமெரிக்க அரசுக்குத் திருகுவலியைக் கொடுத்தது. இரண்டு நாட்களுக்குள் லட்சத் துக்கும் மேற்பட்ட தரவிறக்கம் நடக்க, துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவ தாகக் கூறி, மேற்படி வலைதளத்தில் இருந்து ப்ளூ பிரின்ட் தரவிறக்கப்படுவதைத் தடை செய்திருக்கிறது அமெரிக்க அரசு.  

இந்தத் தொடருக்கான பின்னூட்டங்களை ட்விட்டரில் பெற்றுக்கொள்வது ரொம்பவே இன்ட்ரஸ்டிங். 'வணக் கம். அறிவிழி தொடரை விழி விரிய இப்போது பேருந்தில் பயணித்தவாறு படித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று ட்வீட்டுகிறார் கோவை செ.வீ.பா.சங்கத்தமிழன். ராஜேந்திர திலகர், ‘Augmented Reality பற்றி எழுத முடியுமா அண்டன்’ எனக் கேட்கிறார்.

திலகர் கேட்டிருப்பது சரியான நேரம். இந்தக் கட்டுரை எழுதப்படும் வாரத்தில் 'கூகுள் I/O’ மாநாடு தொடங்கப்போகிறது. கூகுள் கிளாஸ் மற்றும் ஆண்ட்ராயிட் சார்ந்த புதிய தொழில் நுட்ப அறிவிப்புகளில் Augmented Reality சார்ந்தவை இருக்கும் என நம்புகிறேன்.  மேம்படுத் தப்பட்ட யதார்த்தம் என மொழிபெயர்க்க முடிகிற Augmented Reality தொழில்நுட்பங்கள் நிஜ உலகில் பார்க்க, உணர முடிகிறவற்றை டிஜிட்டல் முறையில் மேம்படுத்திக்கொடுக்கின்றன. கல்வி, மருத்துவம், ராணுவம் எனப் பல துறைகளிலும் பல்வேறு விதங்களில் Augmented Reality பயன்படுத்தப்பட்டாலும், சாதாரணப் பயனீட்டாளர்களும் தங்களை அறியாமலேயே பயன்படுத்தும் விதத்தில் இந்தத் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

அறிவிழி

நல்ல உதாரணம்: கூகுளின் ‘Google Now’ சேவை. நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சேவைகளில் இருந்து தகவல்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் நீங்கள் இருக்கும் இடத் தைச் சுற்றி இருக்கும் தகவல்களைத் திரட்டி உங்களுக்குப் பயன்படும்படியாகத் தொகுத்துக் கொடுக்கிறது.

உதாரணத்துக்கு, விடுமுறைக்காக வேறு ஓர்  ஊருக்குச் செல்லத் திட்டமிட்டு விமான டிக்கெட் எடுக்கிறீர்கள் என வைத்துக்கொள் வோம். ஆன்லைனில் செய்யப்பட்ட இந்தப் பயணத்தின் விவரங்கள் அடங்கிய இமெயிலைப் படித்து, பயண நாளுக்கு முதல் நாள் நினைவுபடுத் தும். பயண நாள் வந்ததும், மேற்படி விமான சேவையில் ஏதாவது தாமதங்கள் இருக்கின்ற னவா என்பதைக் கண்டறியும்; விமான நிலை யம் செல்லும் பாதையில் விபத்துகள் ஏதாவது  நடந்திருந்தால் அதை மேப்பில் காட்டி, அதைத் தவிர்த்து எப்படிச் செல்லலாம் என்ற மாற்று வழிகளைச் சொல்லும்; பயணம் செய்து அடுத்த நகருக்கு விமானம் தரையிறங்கியதுமே, விமான நிலையத்துக்கு வெளியே இருக்கும் தட்பவெப்ப நிலை எப்படி என்பதைப் படமிட்டுக் காட்டி விடும். 'ஜீபூம்பா  திறந்திடு சீஸேம்’ என அரேபிய இரவுகளின் ஜீனி செய்வதுபோல இருப்பதை நிஜமாக்கியபடி வருகிறது கூகுள்.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism